- Home
- Tamil Nadu News
- சென்னை
- சென்னை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு! தப்பி தவறி கூட அந்த பக்கம் போயிடாதீங்க!
சென்னை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு! தப்பி தவறி கூட அந்த பக்கம் போயிடாதீங்க!
சென்னையில் அண்ணா சாலையில் மேம்பாலப் பணிக்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சைதாப்பேட்டை, தி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளன.

அண்ணா சாலையில் மேம்பால பணி
சென்னையில் மெட்ரோ, இசைக்கச்சேரி, மேம்பால பணி உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக அவ்வப்போது போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவது வழக்கம். அதன்படி அண்ணா சாலையில் மேம்பால பணி காரணமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை மாநகர போக்குவரத்துக் காவல்துறை
இதுதொடர்பாக சென்னை மாநகர போக்குவரத்துக் காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்: மாநில நெடுஞ்சாலைத் துறையினர் மவுண்ட் ரோட்டில் 3.2 கி.மீ தூரத்திற்கு மேம்பாலம் கட்டி வருகின்றனர். இந்த மேம்பாலக் கட்டுமானப் பணியை எளிதாக்க தேனாம்பேட்டை அருகே, வரும் 17ம் தேதி முதல் சோதனை அடிப்படையில் பின்வரும் போக்குவரத்து மாற்றம் செயல்படுத்தப்பட்டுள்ளன.
போக்குவரத்து மாற்றம் விவரம்
* அண்ணா சாலையில் உள்ள சைதாப்பேட்டையிலிருந்து அண்ணா மேம்பாலம் நோக்கிச் செல்லும் வாகனங்கள் அண்ணா சாலை, எல்டாம்ஸ் சாலை சந்திப்பில் இடதுபுறம் திரும்பி தியாகராய சாலை, மா.போ.சி. சந்திப்பு, வடக்கு போக் சாலை (வலதுபுறம் திரும்பி), விஜயராகவ சாலை சந்திப்பு, விஜயராகவ சாலை வழியாக அண்ணா சாலையை அடையலாம்.
* அண்ணா சாலையிலிருந்து தி.நகர் நோக்கிச் செல்லும் வாகனங்கள் அண்ணா சாலை, எல்டாம்ஸ் சாலை சந்திப்பில் வலதுபுறம் திரும்பி தியாகராய சாலை நோக்கிச் சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
* தி.நகரிலிருந்து அண்ணா சாலை நோக்கிச் செல்ல விரும்பும் வாகனங்கள் தியாகராய சாலையில் உள்ள மா.போ.சி சந்திப்பில் இடதுபுறம் திரும்பி வடக்கு போக் சாலை, விஜயராகவ சாலை வழியாக சென்று அண்ணா சாலையை அடையலாம்.
வாகன ஓட்டிகள்
* தெற்கு போக் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் மா.போ.சி. சந்திப்பில் வலதுபுறம் திரும்ப அனுமதிக்கப்படாது. அதற்கு பதிலாக, அவ்வாகனங்கள் நேராக வடக்கு போக் சாலையை நோக்கிச் சென்று பின்னர் விஜயராகவ சாலையை அடைந்து பின்னர் அண்ணா சாலையை அடையலாம்.
*அண்ணா சாலையில் உள்ள அண்ணா மேம்பாலத்திலிருந்து வரும் வாகனங்கள் விஜயராகவ சாலை நோக்கி வலதுபுறம் திரும்ப அனுமதிக்கப்படாது. அனைத்து வாகன ஓட்டிகளும் தங்களது ஒத்துழைப்பை நல்குமாறு கேட்டுகொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.