WPL 2025: சொந்த மண்ணில் ஆர்சிபி தொடர்ந்து 4 தோல்வி! பிளே ஆஃப் சுற்றுக்கு சிக்கல்?
மகளிர் ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி தொடர்ந்து 4 தோல்விகளை சந்தித்து பரிதாபமான நிலையில் உள்ளது. அதுவும் சொந்த மண் பெங்களூருவில் தொடர் தோல்வியை தழுவி இருக்கிறது.

மகளிர் ஐபிஎல் தொடரில் ஆர்பிசி அணி தொடர் தோல்வியை சந்தித்து இருக்கிறது. சொந்த மைதானமான பெங்களூருவில் ஒரு வெற்றி கூட பெறவில்லை. இந்தியாவில் ஆண்களுக்கான ஐபிஎல் போன்று வீராங்கனைகளுக்கு Women's Premier League என்ற பெயரில் ஐபிஎல் போட்டி நடந்து வருகிறது. பெண்கள் ஐபிஎல்லில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் ஜெயண்ட்ஸ், டெல்லி கேபிடல்ஸ், உபி வாரியர்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய 5 அணிகள் விளையாடி வருகின்றன. இந்நிலையில், மகளிர் ஐபிஎல்லின் 14வது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
மகளிர் ஐபிஎல்
பெங்களூருவில் உள்ள எம். சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 5 விக்கெட் இழந்து 147 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து சொதப்பி வரும் கேப்டன் ஸ்மிருதி மந்தனா இரண்டாவது ஓவரின் துவக்கத்திலேயே அவுட் ஆனார். எல்லிஸ் பெர்ரி 47 பந்தில் 60 ரன்கள் அடித்தார். டானி வயட்-ஹாட்ஜ் 18 பந்துகளில் 21 ரன்கள் எடுத்தார். ராகவி பிஸ்ட் 32 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார்.
பின்பு பேட்டிங்கில் களமிறங்கிய டெல்லி அணி 15.3 ஒவர்களில் 151 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. ஷஃபாலி வர்மா 8 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 43 பந்தில் 80 ரன்கள் விளாசி அணியை வெற்றி பெற வைத்தார். ஜோனாசென் 38 பந்தில் 61 ரன் அடித்து அவருக்கு பக்கபலமாக விளங்கினார். இந்த வெற்றியின் மூலம் டெல்லி அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
'நீங்கள் நல்ல அணியாக இருந்தால்..' இந்தியாவுக்கு சவால் விடுத்த பாகிஸ்தான்! என்ன விஷயம்?
ஆர்சிபி அணி தொடர் தோல்வி
நடப்பு சாம்பியனான ஆர்சிபி அணி, தொடர்ச்சியாக இரண்டு வெற்றிகளுடன் போட்டியைத் தொடங்கியது. ஆனால் இப்போது தொடர்ந்து 4 தோல்வியை சந்தித்தால் அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வதில் சிக்கல் நிலவுகிறது. அதுவும் சொந்த மண் பெங்களூருவில் ஆர்சி அணி தொடர்ச்சியாக தோல்வி அடைந்து இருப்பது அந்த அணி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஐபிஎல் புள்ளிப்பட்டியல்
ஆர்சிபி அணி ஆறு போட்டிகளில் இரண்டு வெற்றிகளுடன், 4 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. டெல்லி அணி 7 போட்டிகளில் 5 வெற்றி, 2 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி 5 போட்டிகளில் 3 வெற்றி, 2 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று 2வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
சாம்பியன்ஸ் டிராபியில் குழப்பம்! அரையிறுதி எங்கே? ஆஸி, தென்னாப்பிரிக்கா துபாய் பயணம்!