நடிகையின் 'அந்த' படங்களுக்கு 'லைக்' செய்த விராட் கோலி! யார் இந்த அவ்னீத் கவுர்?
இன்ஸ்டாகிராமில் நடிகை அவ்னீத் கவுரின் புகைப்படங்களுக்கு லைக் செய்தது குறித்து விராட் கோலி விளக்கம் அளித்துள்ளார். யார் இந்த அவ்னீத் கவுர்? என்பது குறித்து பார்ப்போம்.

Virat Kohli likes actress Avneet Kaur's photos: கிரிக்கெட்டின் கிங் விராட் கோலி, விளையாட்டில் மட்டுமின்றி எக்ஸ், இன்ஸ்டாகிராம் என அனைத்து சமூகவலைத்தளங்களிலும் விராட் கோலி பிசியாக வலம் வருகிறார். அதில் தன்னுடைய ஜிம் வொர்க் அவுட் உள்ளிட்ட அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு வந்தார். விளையாட்டு வீரர்களில் கிறிஸ்டியானோ ரொனால்டோ, மெஸ்ஸி ஆகியோருக்கு அடுத்தபடியாக அதிக ரசிகர்களை பாலோயர்ஸ்களாக கொண்டவர் கோலி தான்.
Virat Kohli and Avneet Kaur
விராட் கோலி இன்ஸ்டாகிராமில் பிஸி
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக உள்ள அவர் தன்னுடைய ஜிம் வொர்க் அவுட் வீடியோ உள்ளிட்ட தகவல்களை பகிர்ந்து வந்தார். மேலும் அவர் இன்ஸ்டாகிராம் வாயிலாக பல்வேறு பிராண்ட்களை விளம்பரம் செய்து அதன்மூலமாகவும் வருமானம் ஈட்டி வந்தார். சில வாரங்களுக்கு முன்பு விராட் கோலி இன்ஸ்டாகிராமின் வீடியோ பக்கத்தில் இருந்து நீக்கப்பட்ட அனைத்து பிராண்ட் விளம்பரங்களையும் ரீல்ஸ் பக்கங்களுக்கு மாற்றியமைத்தார்.
நடிகை அவ்னீத் கவுரின் படங்களுக்கு லைக்
இந்நிலையில், நேற்று விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாலிவுட் நடிகை அவ்னீத் கவுரின் கவர்ச்சியான புகைப்படங்களுக்கு வரிசையாக லைக் செய்திருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள், ''விராட் கோலி அவ்னீத் கவுருடன் தொடர்பில் இருக்கிறார். அதனால் தான் லைக் செய்து இருக்கிறார்'' என இஷ்டத்துக்கு பேச ஆரம்பித்தனர். கடைசியில் விராட் கோலியுமா இப்படி? என நெட்டிசன்கள் பலரும் தெரிவித்தனர்.
Virat Kohli likes Avneet Kaur's photos
விராட் கோலி விளக்கம்
இதனைத் தொடர்ந்து இது குறித்து விளக்கம் அளித்த விராட் கோலி, ''இன்ஸ்டாகிராமில் சில பதிவுகளை நீக்கிக்கொண்டிருந்தபோது, அல்காரிதம் தவறுதலாக சில 'லைக்'குகளை பதிவு செய்திருக்கலாம் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். இதற்குப் பின்னால் எந்த நோக்கமும் இல்லை. தேவையில்லாத அனுமானங்களைச் செய்ய வேண்டாம் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் புரிதலுக்கு நன்றி'' என்று கூறியுள்ளார்.
யார் இந்த அவ்னீத் கவுர்?
விராட் கோலி தவறுதலாக லைக் செய்த பாலிவுட் நடிகை அவ்னீத் கவுர், ஒரு பிரபலமான தொலைக்காட்சி நடிகையாக வாழ்க்கையை தொடங்கினார். இன்ஸ்டாகிராமில் அவர் 32 மில்லியனுக்கும் அதிகமான பாலோயர்ஸ்களை கொண்டுள்ளார். 2010 ஆம் ஆண்டு டான்ஸ் இந்தியா டான்ஸ் லில் மாஸ்டர்ஸ் என்ற நடன நிகழ்ச்சியுடன் தனது குழந்தைப் பருவ வாழ்க்கையைத் தொடங்கினார், பின்னர் டான்ஸ் கே சூப்பர்ஸ்டார்ஸில் பங்கேற்றார்.
Actress Avneet Kaur
பிரபலமான தொலைக்காட்சி தொடர்கள்
2012 ஆம் ஆண்டு லைஃப் ஓகே நிகழ்ச்சியான மேரி மாவுடன் அவரது நடிப்பு வாழ்க்கை தொடங்கியது. ஜலக் திக்லா ஜா (2012), சாவித்ரி ஏக் பிரேம் கஹானி (2013), மற்றும் ஏக் முத்தி ஆஸ்மான் (2013) ஆகியவை அவரது பிரபலமான தொலைக்காட்சி தொடர்கள் ஆகும். 2014 ஆம் ஆண்டு, அவ்னீத் யாஷ் ராஜ் பிலிமின் மர்தானி மூலம் பெரிய திரையில் அறிமுகமானார். பின்னர் 2014 ஆம் ஆண்டு ஹமாரி சகோதரி திதியுடன் தொலைக்காட்சிக்குத் திரும்பினார்.
லவ் இன் வியட்நாம்
பின்னர் அவ்னீத் ஸ்டார் பிளஸ் நிகழ்ச்சியான சந்திர நந்தினி (2017) இல் ராஜ்குமாரி சாருமதி வேடத்தில் நடித்தார். 2018 ஆம் ஆண்டு சப் டிவியின் அலாதீன்—நாம் தோ சுனா ஹோகா நிகழ்ச்சியில் சுல்தானா யாஸ்மினாக நடித்தபோது புகழின் உச்சத்தை தொட்டார். டிசம்பர் 2024 இல், கவுர் விஷால் ஜெத்வாவுடன் MX-பிளேயரின் கொலை மர்மமான பார்ட்டி டில் ஐ டை படத்தில் நடித்தார். 2024 கேன்ஸ் திரைப்பட விழாவில் அறிவிக்கப்பட்ட லவ் இன் வியட்நாம் என்ற படத்திலும் அவர் பணியாற்றியுள்ளார்.
Who is Avneet Kaur?
சுப்மன் கில்லுடன் டேட்டிங்?
கேசரியோ ரங், பாக்லா, கின்னே சாலன் பாத், எக்ஸ் காலிங் மற்றும் தேனு நி பாட்டா உள்ளிட்ட பல இசை ஆல்பத்திலும் அவ்னீத் கவுர் பணியாற்றியுள்ளார். அவ்னீத் கவுரை சுற்றி எப்போதும் வதந்திகள் வலம் வரும். அவரும், கிரிக்கெட் வீரர் சுப்மன் கில்லும் டேட்டிங் செய்வதாக வதந்திகள் பரவின. ஆனால் இதை சுப்மன் கில் மறுத்தார். இதேபோல் அவ்னீத் கவுர் ராகவ் சர்மா என்ற தயாரிப்பாளருடன் நெருக்கமாக சுற்றி வருவதாகவும் ரசிகர்கள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.