MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெறும் விராட் கோலி? பிசிசிஐயிடம் சொன்னது என்ன? என்ன நடந்தது?

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெறும் விராட் கோலி? பிசிசிஐயிடம் சொன்னது என்ன? என்ன நடந்தது?

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக பிசிசிஐயிடம் தெரிவித்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.

2 Min read
Author : Rayar A
Published : May 10 2025, 10:49 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Virat Kohli planning to retire from Test cricket

Virat Kohli planning to retire from Test cricket

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் முடிந்த பிறகு இந்திய அணி இங்கிலாந்துக்கு சென்று 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இதற்கான இந்திய அணியை பிசிசிஐ விரைவில் அறிவிக்க உள்ள நிலையில், சில நாட்களுக்கு முன்பு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கேப்டன் ரோகித் சர்மா அறிவித்தார். இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ரோகித் சர்மாவை ஓரம்கட்ட பிசிசிஐ முடிவு செய்திருந்த நிலையில், இதை முன்கூட்டியே அறிந்து அவர் இந்த முடிவை எடுத்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெறும் விராட் கோலி

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெறும் விராட் கோலி

இந்நிலையில், உலகின் தலைநிறந்த வீரரான விராட் கோலியும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற பிசிசிஐயிடம் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா படுமோசமாக தோற்ற நிலையில், விராட் கோலின் பேட்டிங் பார்ம் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இதேபோல் இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலும் இந்த நிலை வந்துவிடக்கூடாது என்பதற்காக விராட் கோலி ஓய்வு முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

35
விராட் கோலி முடிவை ஏற்காத பிசிசிஐ

விராட் கோலி முடிவை ஏற்காத பிசிசிஐ

ஆனாலும் பிசிசிஐ விராட் கோலி முடிவை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் முடிவை மறுபரிசீலனை செய்யும்படி கோலியிடம் கேட்டதாகவும் பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே ரோகித் சர்மா டெஸ்ட்டில் இருந்து விலகிய நிலையில், விராட் கோலியும் விலகினால் அது இந்திய அணியில் அனுபவ வீரர்களுக்கு பெரும் பற்றாக்குறையை ஏற்படுத்தும். ஆகவே ஓய்வு முடிவை மாற்றும்படி பிசிசிஐ விராட் கோலியிடம் சொன்னதாக கூறப்படுகிறது.
 

45
இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடர்

இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடர்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் படுதோல்விக்கு பிறகு பிசிசிஐ ரோகித் சர்மா, விராட் கோலி இருவருக்கும் கடுமையான அழுத்தங்களை கொடுத்தது. இருவரும் கண்டிப்பாக உள்நாட்டு தொடர்களில் விளையாட வேண்டும் என உத்தரவிட்டது. இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் கோலி பேட்டிங்கில் அசத்தினால் பிரச்சனை இல்லை. ஆனால் ஒருவேளை பேட்டிங்கில் சொதப்பினால் பிசிசிஐ தன் மீது விமர்சனம் வைப்பதையோ, அழுத்தம் கொடுப்பதையோ விராட் கோலி விரும்பவில்லை. இதையறிந்தே ஓய்வு முடிவை அவர் எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

55
விராட் கோலி முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி

விராட் கோலி முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி

ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் சரியாக விளையாட முடியாவிட்டாலும் விராட் கோலி மிகச்சிறந்த வீரர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. டெஸ்ட்டில் கோலியின் பேட்டிங் க்ளிக்கானால் அது இங்கிலாந்துக்கு என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது அனைவருக்கும் தெரியும். இதனால் அவர் 2025 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விராட் கோலி ஓய்வு முடிவை எடுத்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
 

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
விராட் கோலி
இந்திய கிரிக்கெட் அணி
ஐபிஎல்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Harmanpreet Kaur Net Worth: கோடிகளை குவித்த ஹர்மன்ப்ரீத் கவுர்! மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு?
Recommended image2
KL Rahul: இந்தியாவின் நியூ ரன் மெஷின்.. ஒரே சதத்தில் பல சாதனைகளை தகர்த்த கே.எல்.ராகுல்!
Recommended image3
Now Playing
ஆசிய விளையாட்டுப் போட்டியில் சாதனை படைத்த வித்யா ராம்ராஜிற்கு உற்சாக வரவேற்பு!
Related Stories
Recommended image1
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய டாப் 5 இந்திய வீரர்கள்!
Recommended image2
மற்ற அணிகள் அழைத்தும் ஆர்சிபியை விட்டு செல்லாதது ஏன்? மனம் திறந்த விராட் கோலி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved