'அதே டெய்லர், அதே வாடகை'; மீண்டும் 'அந்த' பந்தில் விராட் கோலி அவுட்; 2வது இன்னிங்சில் தடுமாறும் இந்தியா!
சிட்னியில் நடந்து வரும் 5வது டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்சில் இந்திய அணி தடுமாறி வருகிறது. விராட் கோலி 6 ரன்னில் அவுட்டானர்.
virat kohli
இந்தியா 185 ரன்னுக்கு ஆல் அவுட்
இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான கடைசி மற்றும் 5வது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி வெறும் 185 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. முன்னணி வீரர்கள் விராட் கோலி, சுப்மன் கில், கே.எல்.ராகுல் சொதப்பினார்கள். பின்பு முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழந்து 9 ரன்கள் எடுத்திருந்தது.
இன்று 2வது நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில், இந்திய வீரர்களின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலிய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஆஸ்திரேலிய ஸ்டார் வீரர் மார்னஸ் லபுஸ்சேன் பும்ரா பந்தில் 2 ரன்னில் கேட்ச் ஆனார். இந்திய அணி வீரர்களை தொடர்ந்து வம்பிழுத்து வரும் இளம் வீரர் சாம் காண்டாஸ் 23 ரன்னில் சிராஜ் பந்தில் ஆட்டமிழந்தார்.
India vs Australia Test
ஆஸ்திரேலியாவும் சுருண்டது
தொடரந்து அதிரடி மன்னன் டிராவிஸ் ஹெட்டும் (4 ரன்) சிராஜ் பந்தில் கேட்ச் கொடுத்து விட்டு வெளியேறினார். இதனால் ஆஸ்திரேலியா 39/4 என பரிதவித்தது. பின்பு ஸ்டீவ் ஸ்மித் ஓரளவு சிறப்பாக விளையாடி 33 ரன் எடுத்து அவுட்டானார். ஒருபக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுபக்கம் ஆஸ்திரேலிய அறிமுக வீரர் வெப்ஸ்டர் அனுபவ வீரர் போல் சூப்பராக விளையாடினார்.
சர்வதேச போட்டிகளில் தனது முதல் விக்கெட்டை வீழ்த்திய வெப்ஸ்டர் 5 பவுண்டரிகளுடன் 57 ரன்கள் எடுத்து அணி 100 ரன்களை கடக்க உதவி செய்தார். தொடர்ந்து அலெக்ஸ் கேரி (21), வெப்ஸ்டர் (57), பேட் கம்மின்ஸ் (10), ஸ்டார்க் (1) என வரிசையாக விக்கெட்டுகள் வீழ்ந்ததால் ஆஸ்திரேலிய அணி 181 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பும்ரா, நிதிஷ்குமார் ரெட்டி 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
ஜஸ்பிரித் பும்ராவுக்கு காயம்; அவசரம் அவசரமாக மருத்துவமனைக்கு சென்றார்; என்ன நடந்தது? ரசிகர்கள் ஷாக்!
Bumrah Injuiry
பும்ராவுக்கு காயம்
இந்த போட்டியில் இன்று உணவு இடைவேளைக்கு பிறகு உள்ளே வந்த பும்ரா ஒரே ஒரு ஓவர் மட்டுமே வீசினார். தொடர்ந்து அவர் நடுவரிடம் தெரிவித்து விட்டு மைதானத்தில் இருந்து அவசரம் அவசரமாக வெளியேறினார். முதுகு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் மைதானத்தில் இருந்து வெளியேறி அணியின் மருத்துவ ஊழியர்கள் உதவியுடன் மைதானத்தில் வெளியேறி மருத்துவமனைக்கு சென்றார்.
மருத்துவமனையில் ஸ்கேன் பரிசோதனை செய்து பார்த்தபிறகே பும்ரா 2வது இன்னிங்சில் பவுலிங் செய்வாரா? இல்லையா? என்பது தெரியவரும். பும்ரா வெளியேறியபோது ஆஸ்திரேலியா அணி 5 விக்கெட் மட்டுமே இழந்து இருந்தது. அதன்பிறகும் பும்ரா இல்லாவிட்டாலும் சிராஜ், பிரசித் கிருஷ்ணா, நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோர் சிறப்பாக பந்துவீசி ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை அடக்கியுள்ளனர்.
virat kohli batting
2வது இன்னிங்சில் இந்தியா தடுமாற்றம்
பின்பு 4 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 103 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்து தடுமாறி வருகிறது. தொடக்க வீரர்கள் ஜெய்ஸ்வால் (22 ரன்), கே.எல்.ராகுல் (13 ரன்) போலண்ட் பந்தில் கிளீன் போல்டானார்கள்.
பின்பு களமிறங்கிய விராட் கோலி வெறும் 6 ரன்னில் போலண்ட் வீசிய அவுட் சைடு ஆப் ஸ்டெம்ப் பந்தை தேவையில்லாமல் அடித்து ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். கோலி அவுட் சைடு ஆப் ஸ்டெம்ப் பந்தை அடித்து அவுட்டாவது வழக்கமாகி விட்டது. சுப்மன் கில் 13 ரன்னில் வெப்ஸ்டர் பந்தில் கேட்ச் ஆனார். ரிஷப் பண்ட் (40 ரன்), ஜடேஜா களத்தில் உள்ளனர்.
ஆஸ்திரேலியா தொடருக்கு பிறகு ஓய்வா? டிரஸ்ஸிங் ரூமில் என்ன நடந்தது? மனம் திறந்து பேசிய ரோகித் சர்மா!