கேப்டன்சியில் 'ஹீரோ'; பேட்டிங்கில் 'ஜீரோ'; படுமோசமாக விளையாடும் சூர்யகுமார்; ரசிகர்கள் கவலை!
இந்திய அணி வீரர் சூர்யகுமார் யாதவ் பேட்டிங்கில் தொடர்ந்து படுமோசமாக விளையாடி வருகிறார். இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு போட்டியிலும் சொற்ப ரன்களில் அவுட்டானார்.
கேப்டன்சியில் 'ஹீரோ'; பேட்டிங்கில் 'ஜீரோ'; படுமோசமாக விளையாடும் சூர்யகுமார்; ரசிகர்கள் கவலை!
சென்னை சேப்பாக்கத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி நிர்ணயிக்கபப்ட்ட 20 ஓவரகளில் 9 விக்கெட் இழந்து 165 ரன்கள் எடுத்தது.
பின்பு விளையாடிய இந்திய அணி 19.2 ஓவர்களில் 8 விக்கெட் இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இந்திய அணியின் இளம் வீரர் அபிஷேக் சர்மா அதிரடி அரைசதம் அடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார்.
Suryakumar Yadav Batting
இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தாலும் கேப்டன் சூர்யகுமார் யாதவ்வின் பேட்டிங் படுமோசமாக உள்ளது. ஏனெனில் முதல் டி20 போட்டியில் 3 பந்துகளை சந்தித்து டக் அவுட் ஆன அவர் நேற்று நடந்த 2வது டி20 போட்டியில் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். இதேபோல் தென்னாப்பிரிக்கா தொடரிலும் சொதப்பி இருந்த சூர்யகுமார் யாதவ், 21, 4, 1 என மூன்று போட்டிகளில் 26 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.
மேலும் கடைசியாக விளையாடிய 5 டி20 போட்டிகளில் மொத்தமாக 38 ரன்கள் தான் சூர்யகுமார் யாதவ் அடித்துள்ளார். 50 ஓவர் ஒருநாள் போட்டி பார்மட்டில் தொடர்ந்து 3 மேட்ச்சில் டக் அவுட், 50 ஓவர் உலகக்கோப்பையில் சொதப்பல் என படுமோசமாக விளையாடியதால் தான் சூர்யகுமார் யாதவ்வுக்கு ஒருநாள் போட்டி அணியில் இடம் கிடைப்பதில்லை.
விராட் கோலி சாதனையை தூள் தூளாக நொறுக்கிய திலக் வர்மா; சென்னையில் தரமான சம்பவம்!
India vs England T20
அதே வேளையில் டி20 போட்டிகளில் சிறப்பாக விளையாடும் அவர் இப்போது இந்த பார்மட்டிலும் சொதப்பி வருவது இந்திய அணி நிர்வாகத்தையும், ரசிகர்களையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.டி20 போட்டிகளில் கேப்டன் சூர்யகுமாரின் கேப்டன்சி மிகச்சிறப்பாக உள்ளது. 19 டி20 போட்டிகளில் இந்திய அணிக்கு தலைமை தாங்கிய அவர் 16 போட்டிகளில் அணிக்கு வெற்றியை தேடிக் கொடுத்துள்ளார்.
களத்தில் சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுப்பதிலும் சரி, பவுலர்களை ரொட்டேட் செய்வதிலும் சரி சிறப்பாக செயல்படுகிறார். ஆனால் அவரது பேட்டிங் தான் மிகவும் கவலை அளிக்கும் வகையில் இருக்கிறது.
India vs England T20 Series
அவசர கதியில் ஷாட்கள் அடித்து விக்கெட்டுகள் இழப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். கடந்த சில டி20 போட்டிகளாக சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, திலக் வர்மா ஆகியோர் இந்திய அணியை காப்பாற்றி வருகின்றனர். இல்லாவிடில் அணி தோல்வியை தழுவி இருக்கும். ஆகவே சூர்யகுமார் யாதவ் இனிமேலாவது பொறுப்புடன் விளையாடி பேட்டிங்கிலும் அணியின் வெற்றிக்கு பங்களிப்பு செய்ய வேண்டும் என்று ரசிகர்கள் கருத்துகளை கூறி வருகின்றனர்.
'பனிமூட்டத்தின் வேலையா இருக்குமோ?' ஹாரி ப்ரூக் அவுட்டானதும் நேரலையில் கலாய்த்த முன்னாள் வீரர்கள்!