போலீஸ் வேடத்தில் கலக்கும் 'தாதா'! சவுரவ் கங்குலி நடித்த வெப் சீரிஸ்! அட! இயக்குநர் இவரா?
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி போலீஸ் வேடத்தில் நடித்த வெப் சீரிஸின் ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

Ganguly's new film: MS Dhoni Movie director explains What is the truth?: இந்திய கிரிக்கெட் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி ஒரு வெப் சீரிஸில் போலீஸாக நடித்துள்ள புதிய புரோமோ வீடியோ வெளியாகி வைரலாக பரவி வருகிறது. அதாவது 'காக்கி - தி பெங்கால் சாப்டர்' என்ற வெப் தொடருக்கான விளம்பர வீடியோவில் சவுரவ் கங்குலி போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் வீடியோயை நெட்பிளிக்ஸ் வெளியிட்டுள்ளது.
Sourav Ganguly
சுமார் 1.47 நிமிடங்கள் ஓடும் அந்த ப்ரோமோ வீடியோவில் போலீஸ் உடையில் இருக்கும் சவுரவ் கங்குலி படப்பிடிப்பு தளத்திற்கு வந்து வங்காளத்தில் வெப் சீரிஸ் எடுக்கும்போது இந்த தாதாவை கூப்பிடாமல் எப்படி? என பேசுகிறார். தொடர்ந்து அவருக்கு நடிப்புக்கான ஆடிஷன் நடத்தும்போது கிரேக் சேப்பலை மனதில் நினைத்துக் கொண்டு சவுரங் கங்குலி ரவுடிகளை பார்த்து கோபமாக கத்துவது போலவும் காட்சிகள் பதிவாகி இருக்கின்றன.
கலகலப்பான இந்த ப்ரோமோ வீடியோ இணையத்தில் வைராக பரவி ரசிகர்களின் அளப்பரிய வரவேற்பை பெற்று வருகிறது. நெட்பிளிக்ஸில் விரைவில் வெளியாக இருக்கும் 'காக்கி - தி பெங்கால் சாப்டர்' வெப் சீரிஸ் கொல்கத்தாவை மையமாக கொண்டு 2000களில் இயங்கிய குற்ற பின்னணி கும்பலுக்கும், போலீஸ் இடையே நடக்கும் மோதலை மையக்கருவாக கொண்டதாகும்.
IPL Opening Ceremony: ஐபிஎல் தொடக்க விழாவில் ஆட்டம் போடப்போகும் நடிகைகள் யார்? யார்?
Sourav Ganguly, Khakee poster
எம்எஸ் தோனி வாழ்க்கை வரலாற்று படத்தை நீரஜ் பாண்டே தான்'காக்கி - தி பெங்கால் சாப்டர்' வெப் சீரிசை இயக்கி உள்ளார். இந்த வெப் சீரிஸ் வரும் 20ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. இந்த வெப் தொடரில் சவுரவ் கங்குலியின் முழு நடிப்பை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். மேலும் சவுரவ் கங்குலியின் நடிப்பை ரசிகர்கள் புகழந்து தள்ளி வருகின்றனர்.
Sourav Ganguly Carrier
இந்திய கிரிக்கெட் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி ஒரு காலத்தில் சரிந்து கிடந்த இந்திய அணியை தூக்கி நிறுத்தியதில் முதன்மையானவர். ரசிகர்களால் 'தாதா' என்று அழைக்கப்படும் சவுரவ் கங்குலி கிரிக்கெட்டில் ஏராளமான சாதனைகளை படைத்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 16 சதங்களுடன் 7,000க்கும் மேற்பட்ட ரன்களும், 50 ஓவர் போட்டிகளில் 22 சதங்களுடன் 11,300 ரன்களும் கங்குலி எடுத்துள்ளார்.
பிசிசிஐ தலைவராக பதவி வகித்த சவுரவ் கங்குலி மேற்கு வங்க மாநில கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக 2015ம் ஆண்டு முதல் 2019 ம் ஆண்டு வரை பதவி வகித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தீவிர விஜய் ரசிகன்; ரூ.1400 சம்பளத்திற்கு சினிமாவில் நடித்த வருண் சக்கரவர்த்தி - அடடே இந்த படமா?