MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • RCB Victory Parade : ஆர்சிபி வெற்றி பேரணி நடக்குமா? கடைசி நேர ட்விஸ்ட்.. ரசிகர்கள் குழப்பம்!

RCB Victory Parade : ஆர்சிபி வெற்றி பேரணி நடக்குமா? கடைசி நேர ட்விஸ்ட்.. ரசிகர்கள் குழப்பம்!

RCB Victory Parade : அகமதாபாத்தில் கோப்பையை உயர்த்திய உற்சாகம் பெங்களூருவில் வெற்றிப் பேரணியாக மாறுமா என காத்திருந்த ஆர்சிபி ரசிகர்களுக்கு இந்த முறை எதிர்பாராத செய்தி கிடைத்துள்ளது.

1 Min read
Author : Raghupati R
Published : Jun 02 2026, 08:00 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ஆர்சிபி வெற்றி பேரணி
Image Credit : Asianet News

ஆர்சிபி வெற்றி பேரணி

அகமதாபாத்தில் கோப்பையை உயர்த்திய உற்சாகம் பெங்களூருவில் வெற்றிப் பேரணியாக மாறுமா என காத்திருந்த ஆர்சிபி ரசிகர்களுக்கு இந்த முறை எதிர்பாராத செய்தி கிடைத்துள்ளது. இந்த முடிவின் பின்னணியில் கடந்த ஆண்டு நிகழ்ந்த சோக நினைவு மிகப்பெரியதாக கூறப்படுகிறது. சின்னசாமி ஸ்டேடியம் மற்றும் விதான் சவுதா பகுதிகளில் அவசர ஏற்பாடுகளுடன் நடத்தப்பட்ட கொண்டாட்டம் கூட்ட நெரிசலாக மாறி 11 உயிர்களை பலிகொண்டது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
ஆர்சிபி ரசிகர்கள்
Image Credit : IPL MEDIA

ஆர்சிபி ரசிகர்கள்

அந்த சம்பவம் ரசிகர் மகிழ்ச்சியை தேசிய அளவிலான விவாதமாக மாற்றியது, பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து கடும் கேள்விகளையும் எழுப்பியது. அந்த நிகழ்வைத் தொடர்ந்து சட்ட மற்றும் நிர்வாக சிக்கல்களையும் ஆர்சிபி நிர்வாகம் சந்திக்க வேண்டிய சூழல் உருவானது. பாதுகாப்பு வழிகாட்டுதல்களை மீறியதாக விமர்சனங்களும் எழுந்தன. இதேபோன்ற தவறு நிகழக்கூடாது என்ற நிலைப்பாட்டில் இந்த ஆண்டு நிர்வாகம் கூடுதல் கவனத்துடன் செயல்படுகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Articles

Related image1
RCB Wins IPL 2026 : ஐபிஎல் 2026 கோப்பையை தட்டித்தூக்கிய ஆர்சிபி! விராட் கோலி மாஸ்! பேக்‍ டூ பேக் சாம்பியனாகி சாதனை!
Related image2
Tim David: ஐஸ் பேக்கை வீசியதால் சிக்கல்! அடுத்த ஐபிஎல் சீசனின் முதல் போட்டியில் விளையாடத் தடை!
34
பெங்களூரு பேரணி
Image Credit : RCB MEDIA

பெங்களூரு பேரணி

அணி வெற்றி பெற்றாலும், பெங்களூருவில் வழக்கமாக நடைபெறும் திறந்தவெளி வெற்றி பேரணி நடத்தப்படாது என்ற தகவல் கிரிக்கெட் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது. இதற்கிடையில், பெங்களூருவில் நடைபெற உள்ள டி.கே. சிவகுமார் பதவியேற்பு விழாவும் இந்த முடிவில் தாக்கம் ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. லோக் பவன் மற்றும் சின்னசாமி ஸ்டேடியம் மிக அருகில் அமைந்திருப்பதால், இரண்டு பெரிய நிகழ்ச்சிகளும் ஒரே நேரத்தில் நடந்தால் நகரம் முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் உருவாகும் அபாயம் உள்ளது.

44
சின்னசாமி ஸ்டேடியம்
Image Credit : RCB MEDIA

சின்னசாமி ஸ்டேடியம்

போலீஸ் பாதுகாப்பு பணிகளும் பெரும் சவாலாக மாறலாம். ஆர்சிபி ரசிகர்களுக்கு இது ஏமாற்றமான செய்தியாக இருந்தாலும், பாதுகாப்பே என்ற முன்னுரிமையுடன் நிர்வாகம் நகர்கிறது. கொண்டாட்டத்தின் பின்னால் மகிழ்ச்சி தொடர வேண்டும் என்றால், அதன் பொறுப்பும் திட்டமிடலும் இருக்க வேண்டும் என்பதையே இந்த முடிவு மீண்டும் நினைவூட்டுகிறது.

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
ஐபிஎல்
விளையாட்டு

Latest Videos
Recommended Stories
Recommended image1
Tim David: ஐஸ் பேக்கை வீசியதால் சிக்கல்! அடுத்த ஐபிஎல் சீசனின் முதல் போட்டியில் விளையாடத் தடை!
Recommended image2
RCB ரசிகர்களின் வெறிச்செயல்: அடித்து நொறுக்கப்பட்ட போலீஸ் பேரிகேடுகள்! வைரலாகும் வீடியோக்கள்!
Recommended image3
GT Bus Fire: குஜராத் டைட்டன்ஸ் அணி பேருந்தில் தீ விபத்து! பதறியடித்து இறங்கிய வீரர்கள்! என்ன நடந்தது?
Related Stories
Recommended image1
RCB Wins IPL 2026 : ஐபிஎல் 2026 கோப்பையை தட்டித்தூக்கிய ஆர்சிபி! விராட் கோலி மாஸ்! பேக்‍ டூ பேக் சாம்பியனாகி சாதனை!
Recommended image2
Tim David: ஐஸ் பேக்கை வீசியதால் சிக்கல்! அடுத்த ஐபிஎல் சீசனின் முதல் போட்டியில் விளையாடத் தடை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved