நான் கேப்டன் இல்லை ஆனால் என்னுடைய ஆட்கள் தான் அணியில் இருக்க வேண்டும் காய் நகர்த்தும் ரோஹித்.. காண்டில் கோலி.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தோனி ஓய்வு பெற்றுள்ள நிலையில், இந்திய அணியில் தோனியின் இடத்தை நிரப்ப போகும் வீரர் யார் என்று கேள்வி எழுந்துள்ளது. இதில் தற்போது ரோஹித் சர்மாவின் கை ஓங்கி உள்ளது என்கிறார்கள்.
இந்த இடத்தை நிரப்ப போகும் வீரர் யார் என்று கேள்வி உள்ளது. பல முக்கியமான வீரர்கள் தோனியின் இடத்தை பிடிக்க தீவிரமாக முயன்று வருகிறார்கள்
ரோஹித், கோலி இரண்டு பேருக்கும் இடையில் இதனால் போட்டி நிலவி வருகிறது. அதாவது இந்திய அணியில் தங்களுக்கு ஆதரவாக இருக்கும் வீரரை கீப்பராக நியமிக்க இரண்டு பேருமே தீவிரமாக முயன்று வருகிறார்கள். இந்திய அணியின் கீப்பராக கே எல் ராகுலை கொண்டு வருவதற்கு கோலி தீவிரமாக முயன்று வருகிறார்
கோலிக்கு அடுத்து விஜய் சங்கர் இறங்கி வந்த இடத்தில் ராகுலை களமிறக்க முடிவு செய்துள்ளனர். கண்டிப்பாக ராகுல் இந்திய அணியில் இடம் பிடிப்பார். ஆனால் அவர் கண்டிப்பாக கீப்பராக இருக்க மாட்டார். இந்திய அணியில் புதிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் களமிறங்குவார் என்று கூறுகிறார்கள். பெரும்பாலும் அது இஷான் கிஷானாக இருக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இஷான் கிஷான் நேற்று சிஎஸ்கே அணிக்கு எதிராக சிறப்பாக ஆடினார்
இவர் நன்றாக கீப்பிங்கும் செய்கிறார். இளமையான வீரர், பண்ட் போல அவசரமாக ஆடி விக்கெட் ஆகும் வீரர் கிடையாது. ஓப்பனிங்கும் இறங்குவார். மிடில் ஆர்டரிலும் ஆடுவார். நல்ல பிட்னஸாகவும் இவர் இருக்கிறார். இதனால் இவரை அணியில் எடுத்து பயிற்சி கொடுத்தால் நீண்ட காலத்திற்கு சிறப்பாக கீப்பாராக இவர் செயல்பட வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாகவே தற்போது இஷான் கிஷான் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் இவர் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இந்திய அணியில் ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். தினேஷ் கார்த்திக், ராகுல், பண்ட் என்று மூன்று பேரின் கீப்பர் கனவை ரோஹித் காலி செய்ய போகிறாராம். பும்ரா, பாண்டியா பிரதர்ஸ் இந்திய அணியில் இருக்கிறார்கள். அதிலும் ஹர்திக் பாண்டியா, பும்ரா இருவரும் மிக முக்கியமான வீரர்களாக உள்ளனர். இந்த நிலையில் தற்போது கீப்பரும் கூட மும்பை இந்தியன்ஸ் வீரராக வாய்ப்புள்ளது. இதன் காரணமாக இந்திய அணியில் கோலியை விட ரோஹித்தின் ராஜ்ஜியம்தான் அதிகமாக உள்ளது என்று கூறுகிறார்கள்.