பிசிசிஐ தூக்கி எறிந்தாலும் ரோகித் சர்மாவை கைவிடாத ஐசிசி; 2024ன் 'பெஸ்ட்' கேப்டன்; சூப்பர்!
ஐசிசியின் 2024 டி20 அணியில் ரோகித் சர்மா கேப்டனாக இடம்பெற்றுள்ளார். இந்த பிளேயிங் லெவனில் ரோகித் சர்மாவை தவிர மற்ற 3 இந்திய வீரர்களும் இடம்பிடித்துள்ளனர்.
ICC 2024 T20 Team
ஐசிசியின் சிறந்த அணி
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) 2024ம் ஆண்டு டி20 போட்டிகளில் சிறப்பாக விளையாடியவர்களை அடிப்படையாக வைத்து '2024 சிறந்த டி20 அணி'யை அறிவித்துள்ளது. இந்த அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கபப்ட்டுள்ளார். மேலும் இந்தியாவில் இருந்து ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்ட்யா, அர்ஷ்தீப் சிங் ஆகிய 3 வீரர்கள் இடம்பெற்ற்றுள்ளனர்.
Rohit Sharma
2024ல் கலக்கிய ரோகித் சர்மா
கடந்த 2024ம் ஆண்டு ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி டி20 உலகக்கோப்பையை வென்றது. மேலும் ரோகித் சர்மா 2024ல் 11 டி20 போட்டிகளில் விளையாடி 160.16 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 378 ரன்கள் அடித்துள்ளார். இதில் ஒரு சதமும் அடங்கும். ஜஸ்பிரித் பும்ராவை பொறுத்தவரை ஐசிசியின் சிறந்த டெஸ்ட் அணி மற்றும் டி20 அணி என இரண்டிலும் இடம்பிடிதுள்ளார். பும்ரா 2024ல் 8 போட்டிகளில் விளையாடி 15 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
அதிக டி20 விக்கெட் வீழ்த்திய இந்திய பவுலர்களில் முதல் இடத்தில் இருக்கும் அர்ஷ்தீப் சிங் 18 போட்டிகளில் விளையாடி 36 விக்கெட்டுகளை சாய்த்து இருக்கிறார். ஹர்திக் பாண்ட்யாவை பொறுத்தவரை 2024ல் டி20 போட்டிகளில் ஆல்ரவுண்டராக ஜொலித்துள்ளார். அவர் 17 போட்டிகளில் விளையாடி 352 ரன்களும், 16 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்.
சாம்பியன்ஸ் டிராஃபி: சஞ்சு சாம்சனுக்கு பதில் பண்ட்க்கு வாய்ப்பு வழங்குவது ஏன்? அஷ்வின் விளக்கம்
Travis Head
டிராவிஸ் ஹெட், பாபர் அசாம்
இவர்கள் 4 பேர் தவிர, ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட், இங்கிலாந்தின் பில் சால்ட், பாகிஸ்தானின் பாபர் அசாம், வெஸ்ட் இண்டீசின் நிக்கோலஸ் பூரன், ஜிம்பாப்வேயின் சிக்கந்தர் ராசா, ஆப்கானிஸ்தானின் ரஷித் கான், இலங்கையின் வனிந்து ஹசரங்கா ஆகியோர் ஐசிசியின் சிறந்த டி20 அணியில் இடம்பெற்றுள்ளனர். நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, வங்கதேசம் ஆகிய அணிகளில் இருந்து எந்த ஒரு வீரரும் இந்த அணியில் இடம்பிடிக்கவில்லை.
ஐசிசி டி20 அணியில் இடம்பெற்றவர்களை பொறுத்தவரை டிராவிஸ் ஹெட் 2024ல் 15 டி20 போட்டிகளில் விளையாடி 178 ஸ்டிரைக் ரேட்டுடன் 539 ரன்கள் குவித்துள்ளார். அதிகப்பட்சமாக 80 ரன்கள் அடித்துள்ளார். பில் சால்ட் 2024ம் ஆண்டு 17 போட்டிகளில் விளையாடி 467 ரன்கள் அடித்துள்ளார். ஒரு சதமும் விளாசியுள்ளார். நிகோலஸ் பூரன் 21 போட்டிகளில் விளையாடி 464 ரன்கள் குவித்துள்ளார். அதிகப்பட்சமாக 98 ரன்கள் அடித்துள்ளார்.
Baber Azam
2024 ஐசிசி அணி
இதேபோல் ஐசிசி அணியில் இடம்பிடித்த பாபர் அசாமும் 2024ல் டி20 போட்டிகளில் கலக்கியுள்ளார். அவர் 24 போட்டிகளில் விளையாடி 738 ரன்கள் குவித்துள்ளார். ஐசிசியின் 2024 சிறந்த டி20 அணி: ரோகித் சர்மா (கேப்டன்), டிராவிஸ் ஹெட், பில் சால்ட், சிக்கந்தர் ராசா, பாபர் அசாம், ஹர்திக் பாண்ட்யா, நிகோலஸ் பூரன், ரஷித் கான், வனிந்து ஹசரங்கா, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் அர்ஷ்தீப் சிங்.
'நான் தளபதி ரசிகன் இல்லடா அதுக்கும் மேல'; விஜய் உருவத்தை டாட்டூ குத்திய வருண் சக்கரவர்த்தி!