கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவா? மனம்திறந்து பேசிய ரோகித் சர்மா, விராட் கோலி!
சாம்பியன்ஸ் டிராபி தொடருடன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற போவதாக தகவல் வெளியான நிலையில், ரோகித் சர்மா, விராட் கோலி ஆகிய இருவரும் விளக்கம் அளித்துள்ளனர்.

Rohit Sharma and Virat Kohli speech about retirement: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 251 ரன்கள் எடுத்தது. பின்பு விளையாடிய இந்திய அணி 49 ஓவரில் 254 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிரடியில் பட்டையை கிளப்பிய 76 ரன்களை விளாசிய ரோஹித் சர்மா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா
இந்திய அணி 3வது முறையாக சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. இந்த ஆட்டத்துக்கு பிறகு கேப்டன் ரோகித் சர்மா, ''எங்களுக்கு ஆதரவளிக்க வந்த அனைவருக்கும் நான் நன்றி கூறுகிறேன். கூட்டம் அற்புதமாக இருந்தது. எங்கள் சொந்த மைதானம் இல்லை, ஆனால் அவர்கள் அதை எங்கள் சொந்த மைதானமாக மாற்றினர். இது மிகவும் திருப்திகரமான வெற்றி. எங்கள் சுழற்பந்து வீச்சாளர்கள் சரியான நிலையில் இருந்தனர். ஸ்பின்னர் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. ஆனால் அவர்கள் ஒருபோதும் ஏமாற்றமடையவில்லை'' என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய ரோகித் சர்மா, ''எங்கள் பந்துவீச்சில் நாங்கள் மிகவும் சீராக இருந்தோம். கே.எல்.ராகுல் மிகவும் உறுதியான மனம் கொண்டவர். அவரைச் சுற்றியுள்ள அழுத்தத்தால் ஒருபோதும் மிரண்டு போகமாட்டார். அவர் எங்களுக்காக ஆட்டத்தை முடித்தார். அழுத்த சூழ்நிலையில் விளையாட அவர் சரியான ஷாட்டைத் தேர்ந்தெடுப்பார். இது மீதமுள்ள பேட்டர்கள் சுதந்திரமாக விளையாட அனுமதிக்கிறது'' என்று தெரிவித்தார்.
India vs New Zealand : இந்தியா வெற்றி பெற்றதற்கான முக்கியமான 5 சிறப்பு அம்சங்கள்!
ரோகித் சர்மா-விராட் கோலி
இதற்கிடையே சாம்பியன்ஸ் டிராபி தொடர் முடிந்தபிறகு கிரிக்கெட்டில் இருந்து ரோகித் சர்மா ஓய்வு பெற உள்ளதாக தகவல் பரவியது. இது குறித்து விளக்கம் அளித்த ரோகித் சர்மா, ''நான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப் போவதில்லை. தொடர்ந்து விளையாடுவேன். இது தொடர்பாக வதந்திகளை பரப்ப வேண்டாம்'' என்று தெரிவித்தார். இதேபோல் விராட் கோலியும் சாம்பியன்ஸ் டிராபியுடன் ஓய்வு பெற போவதாக தகவல் வெளியான நிலையில், அவரும் தான் ஓய்வு பெற போவதில்லை என்று மறைமுகமாக தெரிவித்துள்ளார். ''நீங்கள் வெளியேறும்போது, அணியை சிறந்த இடத்தில் விட்டுச் செல்ல விரும்புகிறீர்கள்.
அடுத்த எட்டு ஆண்டுகளுக்கு உலகை எதிர்கொள்ளத் தயாராக இருக்கும் ஒரு அணி எங்களிடம் இருப்பதாக நான் நினைக்கிறேன். சுப்மான் சிறப்பாக விளையாடியுள்ளார், ஷ்ரேயாஸ் சில சிறந்த இன்னிங்ஸ்களை விளையாடியுள்ளார். கே.எல். ராகுல் ஆட்டங்களை முடித்துள்ளார். ஹார்திக் பாண்ட்யா பேட்டிங்கில் சிறப்பாக விளையாடியுள்ளார்'' என்று கோலி கூறியுள்ளார்.
விராட் கோலி
"இது அற்புதமாக இருந்தது, கடினமான ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்குப் பிறகு நாங்கள் மீண்டும் எழுச்சி பெற விரும்பினோம், ஒரு பெரிய போட்டியை வெல்ல விரும்பினோம், எனவே சாம்பியன்ஸ் டிராபியை வெல்வது ஆச்சரியமாக இருக்கிறது. டிரஸ்ஸிங் ரூமில் இவ்வளவு திறமைகள் உள்ளன, அவர்கள் தங்கள் ஆட்டத்தை மேலும் கொண்டு செல்ல முயற்சிக்கிறார்கள், மேலும் நாங்கள் உதவியாக இருப்பதில் மகிழ்ச்சியடைகிறோம் (சீனியர்களின் பங்கு), எங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறோம், அதுதான் இந்த இந்திய அணியை மிகவும் வலிமையாக்குகிறது'' என்று வெற்றிக்கு பிறகு விராட் கோலி தெரிவித்தார்.