ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதாருக்கு அபராதம் விதிப்பு! என்ன காரணம்?
ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதாருக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.

Rajat Patidar has been fined Rs.12 lakh: ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆர்சிபி அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி 221 ரன்கள் குவித்தது. விராட் கோலி 42 பந்தில் 67 ரன்கள் அடித்தார். கேப்டன் ரஜத் படிதார் 32 பந்தில் 64 ரன்கள் விளாசினார். பின்பு விளையாடிய மும்பை அணி 209 ரன்கள் எடுத்து போராடி தோல்வி அடைந்தது.
Rajat Patidar, IPL
திலக் வர்மா 45 பந்தில் 56 ரன்கள் அடித்தார். ஹர்திக் பாண்ட்யா 15 பந்தில் 42 ரன்கள் விளாசினார். ஆர்சிபி தரப்பில் குர்னால் பாண்ட்யா 4 விக்கெட்டும், ஜோஸ் ஹேசில்வுட், யாஷ் தயாள் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கினார்கள். ரஜத் படிதார் ஆட்டநாயகன் விருது வென்றார். இந்த போட்டியில் ஆர்சிபி மெதுவாக பந்துவீசியதால் அந்த அணியின் கேப்டன் ரஜத் படிதாருக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்துள்ளதாக IPL ஊடக ஆலோசனை தெரிவித்துள்ளது.
டி20 கிரிக்கெட்டில் விராட் கோலி இமாலய சாதனை! மற்ற வீரர்கள் கிட்ட கூட நெருங்க முடியாது!
Rajat Patidar, RCB VS MI
ஐபிஎல் நடத்தை விதிகளின் பிரிவு 2.2 இன் கீழ், குறைந்தபட்ச ஓவர் ரேட் மீறல்களைக் கையாளும் ஆர்சிபி இந்த சீசனின் முதல் குற்றமாக இது இருந்ததால், ரஜத் படிதருக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் பல்வேறு அணிகள் தொடர்ந்து மெதுவாக பந்துவீசி வருகின்றன. மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா உள்பட பல்வேறு கேப்டன்கள் மெதுவாக பந்துவீசியதற்காக அபராதம் பெற்றுள்ளனர்.
IPL 2025, Cricket
ஐபிஎல் போட்டிகளில் அணிகள் 2 முறைக்கு மேல் மெதுவாக பந்துவீசினால் அந்த அணிகளின் கேப்டன்களுக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டு வந்தது. ஐபிஎல் 2024 சீசனில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி மெதுவாக பந்துவீசியதற்காக ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டது. மேலும் அவருக்கு ரூ.30 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.
இதன் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கேவுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் ஹர்திக் பாண்ட்யா விளையாட தடை விதிக்கப்பட்டது. இதன்பிறகு ஐபிஎல் கேப்டன்கள் முறையிட்டதால் ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கும் விதி நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வான்கடே ஸ்டேடியத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு மும்பையை வீழ்த்தி சாதனை படைத்த ஆர்சிபி!