'ஜடேஜா உங்க கண்ணுக்கு தெரியவில்லையா?' ஊடகங்களை விமர்சித்த அஸ்வின்! என்ன நடந்தது?
ரவிச்சந்திரன் அஸ்வின் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜாவுக்கு ஆதரவாக ஊடகங்களை கடுமையாக விமர்சித்தார். ஜடேஜாவை ஊடகங்கள் எப்போதும் கண்டுகொள்வதில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.

'ஜடேஜா உங்க கண்ணுக்கு தெரியவில்லையா?' ஊடகங்களை விமர்சித்த அஸ்வின்! என்ன நடந்தது?
இந்தியா-இங்கிலாந்து இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடந்து வருகிறது. இதில் நாக்பூரில் நடந்த முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 47.4 ஓவர்களில் 248 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஜோஸ் படலர் (52 ரன்), ஜேக்கப் பெத்தல் (51 ரன்) அரைசதம் விளாசினார்கள்.
இந்திய அணி தரப்பில் அறிமுக போட்டியில் களமிறங்கிய ஹர்ஷித் ராணா 3 விக்கெட் வீழ்த்தினார். இதேபோல் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட் சாய்த்தார். எளிய இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 38.4 ஓவர்களில் 251 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஷ்ரேயாஸ் ஐயர் 36 பந்தில் 59 ரன்கள் அடித்தார். சிறப்பாக விளையாடிய சுப்மன் கில் 96 பந்தில் 87 ரன்கள் எடுத்தார். இதேபோல் அக்சர் படேல் 47 பந்தில் 52 ரன்கள் எடுத்தார்.
இந்தியா-இங்கிலாந்து ஓடிஐ
இந்த போட்டியில் சிறப்பாக பந்துவீசிய ஜடேஜா 9 ஓவர்களில் 26 ரன் மட்டுமே கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். பேட்டிங்கில் 12 ரன் எடுத்து நாட் அவுட்டாக திகழந்தார். இப்படி ஆல்ரவுண்டர் திறமையை வெளிப்படுத்திய ஜடேஜாவை ஊடகங்கள் பாராட்டுவதில்லை என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் தமிழ்நாட்டை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக தன்னுடைய யூடியூப் சேனலில் பேசிய ரவிச்சந்திரன் அஸ்வின், ''ஒரு ஆல்ரவுண்டர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான அளவுகோலாக ஜடேஜா வளர்ந்துள்ளார். பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் அவர் ஒரு சக்தியாக இருக்க முடியும். களத்திலும் சிறப்பாக செயல்பட முடியும். பல ஆண்டுகளாக, அவர் இந்தியாவின் மூன்று வடிவங்களிலும் மிக முக்கியமான வீரர்களில் ஒருவராக மாறிவிட்டார்'' என்றார்.
ரோஹித்துக்கு அடுத்து! இந்திய அணியின் கேப்டன் பொறுப்புக்காக மல்லுக்கட்டும் 3 வீரர்கள்
ரவிச்சந்திரன் அஸ்வின்
தொடர்ந்து பேசிய அஸ்வின், ''இந்திய அணி தோற்கும்போதும், நமது வீரர்கள் சரியாக விளையாடாதபோதும் ஊடகங்கள் கடுமைமயாக விமர்சிக்கின்றன. வில்லனாக மாறுகின்றன. ஆனால் ஒரு வீரர் சிறப்பாகச் செயல்படும்போது நமது ஊடகங்கள் பாராட்டத் தவறிவிடுகின்றன. முதல் ஓடிஐ போட்டியில் 3 விக்கெட் வீழ்த்திய ஜடேஜா, தரம்வாய்ந்த வீரரனா ஜோ ரூட்டின் விக்கெட்டை வீழ்த்தினார்.
தொடர்ந்து சிறப்பாக விளையாடிய போதிலும் ஜடேஜா எப்போதும் கவனிக்கப்படுவதில்லை. அவர் ஒரு 'ஜாக்பாட் ஜாங்கோ'. அவர் களத்தில் நன்றாக பந்துவீசுகிறார். அழுத்த சூழ்நிலைகளிலும் பேட்டிங் செய்கிறார். ஜடேஜாவுக்கு நாம் போதுமான பெருமையை வழங்குவதில்லை. ஜடேஜா குறித்து ஊடகங்கள் பெரிதாக பேசுவதில்லை. ஜடேஜாவின் திறமையை நாம் பாரட்ட வேண்டும்'' என்று தெரிவித்தார்.
ரவீந்திர ஜடேஜா
முதல் ஓடிஐயில் 3 விக்கெட் வீழ்த்திய ஜடேஜா, சர்வதேச கிரிக்கெட்டில் டெஸ்ட், ஓடிஐ மற்றும் டி20 என மூன்று வடிவ பார்மட்டிலும் 600 விக்கெட்டுகளை வீழ்த்திய அனில் கும்ப்ளே, ரவிச்சந்திரன் அஸ்வின், ஹர்பஜன் சிங் மற்றும் கபில் தேவ் போன்றவர்களுடன்இணைந்தார். இந்திய பந்து வீச்சாளர்களில் இந்த சாதனையை நிகழ்த்திய நான்காவது சுழற்பந்து வீச்சாளர் மற்றும் ஐந்தாவது வீரராக அவர் இருக்கிறார்.
வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்களில், மூன்று வடிவங்களிலும் 600 விக்கெட்டுகளை வீழ்த்திய 26வது வீரர் ஜடேஜா ஆவார். அவர் டெஸ்ட் போட்டிகளில் 323 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டிகளில் 220 விக்கெட்டுகளையும், டி20ஐ வடிவத்திலும் 54 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
IND vs ENG ODI: விராட் கோலிக்காக ஜெய்ஸ்வால் நீக்கம்? 2வது ஓடிஐயில் இந்தியாவின் பிளேயிங் லெவன்!