MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • ஐபிஎல் 2025: டிவியில் 10 செகண்ட் விளம்பரங்களுக்கு இத்தனை லட்சம் கட்டணமா? அடி ஆத்தி!

ஐபிஎல் 2025: டிவியில் 10 செகண்ட் விளம்பரங்களுக்கு இத்தனை லட்சம் கட்டணமா? அடி ஆத்தி!

ஐபிஎல் 2025 சீசன் மார்ச் மாதம் தொடங்க உள்ள நிலையில், ஐபிஎல் போட்டிகளின்போது ஒளிபரப்பு செய்யப்படும் 10 செகண்ட் விளம்பரங்களுக்கான கட்டணங்கள் பன்மடங்கு அதிகரித்துள்ளன.

2 Min read
Author : Rayar r
Published : Jan 27 2025, 12:48 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ஐபிஎல் 2025: டிவியில் 10 செகண்ட் விளம்பரங்களுக்கு இத்தனை லட்சம் கட்டணமா? அடி ஆத்தி!

ஐபிஎல் 2025: டிவியில் 10 செகண்ட் விளம்பரங்களுக்கு இத்தனை லட்சம் கட்டணமா? அடி ஆத்தி!

இந்தியாவில் ஆண்டுதோறும் இந்தியன் பிரிமீயர் லீக் எனப்படும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டித் தொடர் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு போட்டியும் சிக்சர்கள் மழை, அடுத்தடுத்து விக்கெட் என பரபரப்பாக செல்வதால் உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான ரசிகர்கள் ஐபிஎல் தொடர்களை டிவியில் பார்த்து வருகின்றனர்.

ஐபிஎல் தொடர் வெறும் ஒரு பொழுதுபோக்கு விளையாட்டு மட்டுல்ல; இதை வைத்து ஆண்டுதோறும் பல்லாயிரம் கோடிக்கணக்கில் பிஸ்னஸ் நடந்து வருகிறது. ஒவ்வொரு போட்டியையும் பார்க்க பல ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மைதானத்தில் திரள்வதால் அதுவே பல நூறு கோடி வருமானங்களை ஈட்டிக்கொடுக்கிறது.
 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
ஐபிஎல் 2025

ஐபிஎல் 2025

ஐபிஎல் போட்டிகளை நேரடியாக ஒளிபரப்பு செய்யும் டிவி மற்றும் ஓடிடி தளங்களின் ஒவ்வொரு ஓவர்களுக்கு இடையிலும், விக்கெட் விழும்போதும், டிரிங்ஸ் பிரேக்கிங் என கிடைக்கும் நேரத்தில் எல்லாம் பல்வெறு நிறுவனங்களின் விளம்பரங்கள் ஒளிபரப்பு செய்யப்படும். சில வினாடிகள் மட்டுமே ஒளிபரப்பு செய்யபடும் இந்த விளம்பரங்களுக்கு லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

2025 ஐபிஎல் சீசன் மார்ச் மாதம் தொடங்க உள்ள நிலையில், போட்டிகளின்போது டிவியில் ஒளிபரப்பு செய்யப்படும் 10 வினாடி விளம்பரத்திற்கான கட்டணம் 9% முதல் 15% வரை உயர்ந்துள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். அதாவது கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளின்போது 10 வினாடி விளம்பர ஸ்லாட்டின் கட்டணம் ரூ.16.4 லட்சமாக இருந்த நிலையில், 2015 ஐபிஎல் சீசனில் இது ரூ.18 லட்சம் முதல் ரூ.19 லட்சம் வரை அதிகரித்துள்ளது.
 

34
ஐபிஎல் 2025 அணிகள்

ஐபிஎல் 2025 அணிகள்

அதாவது விளம்பர நிறுவனங்கள் ஐபிஎல் போட்டிகளின்போது டிவியில், ஓடிடியில் 10 வினாடிகள் விளம்பரத்துக்கு ரூ.19 லட்சம் கட்டணமாக கொடுக்க வேண்டும். இந்தியாவின் முன்னணி ஓடிடி தளங்கலான ஜியோ சினிமாவும், டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரும் ஒன்றாக இணைந்து 'ஜியோ-ஸ்டார்' ஆக உருவெடுத்துள்ளன. 2025 ஐபிஎல் போட்டிகளை ஜியோ ஸ்டார் தான் டிவி மற்றும் ஓடிடியில் நேரலையாக ஒளிபரப்பு செய்ய உள்ளது. 

ஜியோ-ஸ்டார் இணைப்புக்கு பிறகு ஐபிஎல் விளம்பர கட்டணங்கள் விலை உயர்வை சந்தித்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக மார்க்கெட்டர் மற்றும் பிசினஸ் நிபுணரான‌ லாயிட் மத்தியாஸ் கூறுகையில், ''ஐபிஎல் தொடங்கியது முதலே டிவி மற்றும் டிஜிட்டல் தளங்களுக்கு இடையே விளம்பரதாரர்களை ஈர்க்கும் போட்டி இருந்தது. 

44
சிஎஸ்கே அணி

சிஎஸ்கே அணி

இப்போது ஜியோ-ஸ்டார் இணைக்கப்பட்டுள்ளதால் போட்டி நிறுவன‌ங்கள் இல்லை என்பதால் இது நிர்ணயிப்பதே கட்டணமாக இருப்பதால் விளம்பர விலை உயர்ந்துள்ளது.
2024ம் ஆண்டு ஐபிஎல் சீசன் மக்களவை தேர்தலுக்கு முன்பு வந்ததால் பெரிய அளவில் விளம்பர கட்டணமிலலி. ஆனால் இந்த ஆண்டு ஐபிஎல் சீசனுக்கு அதிக எதிர்பார்ப்பு நலவுவதால் விளம்பர கட்டணமும் உச்சம் தொட்டுள்ளது'' என்றார்.

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஐபிஎல் 2025

Latest Videos
Recommended Stories
Recommended image1
ரஜினியின் வெறித்தனமான ரசிகர்! விஜய் ஸ்டைலில் கொண்டாட்டம்! வெங்கடேஷ் ஐயர் சொன்னது என்ன தெரியுமா?
Recommended image2
IPL 2026 Points Table: 2 இடங்களுக்கு 5 அணிகள் போட்டி! டாப் கியரில் ஆர்சிபி.. தத்தளிக்கும் சிஎஸ்கே!
Recommended image3
IPL 2026: CSK vs SRH: இம்பேக்ட் பிளேயராக தோனி? மேட்ச் வின்னர் கம்பேக்! சிஎஸ்கே பிளேயிங் லெவன்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved