- Home
- Sports
- Lionel Messi: விடிய விடிய காத்திருந்த ரசிகர்களுக்கு விருந்து! லியோனல் மெஸ்ஸி புதிய உலக சாதனை!
Lionel Messi: விடிய விடிய காத்திருந்த ரசிகர்களுக்கு விருந்து! லியோனல் மெஸ்ஸி புதிய உலக சாதனை!
Lionel Messi: 2026 உலகக் கோப்பை கால்பந்து தொடரில் கேப் வெர்டே அணிக்கு எதிரான ஆட்டத்தில் அர்ஜென்டினா ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி 2 புதிய சாதனைகளை படைத்துள்ளார். இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் லியோனல் மெஸ்ஸி சாதனை
உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் லியோனல் மெஸ்ஸி இரண்டு புதிய மைல்கற்களை எட்டியுள்ளார். உலகக் கோப்பையில் தொடர்ந்து 8 போட்டிகளில் கோல் அடித்த முதல் வீரர் மற்றும் உலகக் கோப்பையில் 20 கோல்களை அடித்த முதல் வீரர் என்ற சாதனைகளை அவர் படைத்துள்ளார். இந்திய நேரப்படி இன்று (சனிக்கிழமை) அதிகாலை நடந்த ரவுண்ட் ஆஃப் 32 சுற்றில், கேப் வெர்டே அணிக்கு எதிராக (Argentina vs Cabo Verde) அர்ஜென்டினா மோதியது. இந்த போட்டியில் அர்ஜென்டினா அணி கேப் வெர்டே அணியை 3 2 என்ற கணக்கில் வீழ்த்தியது. இந்த போட்டியில்தான் மெஸ்ஸி இந்த சாதனையை நிகழ்த்தினார்.
தனது 2 சாதனைகளையும் முறியடித்த மெஸ்ஸி
ஏற்கனவே, உலகக் கோப்பை வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த வீரர் மற்றும் தொடர்ந்து 7 போட்டிகளில் கோல் அடித்த வீரர் என்ற சாதனைகளை மெஸ்ஸி வைத்திருந்தார். இப்போது அந்த இரண்டு சாதனைகளையும் அவரே முறியடித்து மேம்படுத்தியுள்ளார். இது மெஸ்ஸிக்கு ஆறாவது உலகக் கோப்பை. இதுவரை ஐந்து வெவ்வேறு உலகக் கோப்பை தொடர்களில் கோல் அடித்துள்ளார். ஆறு உலகக் கோப்பைகளில் விளையாடிய முதல் வீரர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. ஆனால், இதுவரை கோல்டன் பூட் விருதை வென்றதில்லை. இந்த முறை, 7 கோல்களுடன் அவர் முன்னணியில் இருப்பதால், அந்த சாதனையையும் படைக்க வாய்ப்புள்ளது.
அசாத்திய கோல் அடித்த மெஸ்ஸி
கேப் வெர்டேக்கு எதிரான போட்டியின் 29வது நிமிடத்தில் மெஸ்ஸி தனது முதல் கோலை அடித்தார். சக வீரர் லாட்டாரோ மார்டினெஸ் (Lautaro Martínez) பந்தை பாக்ஸிற்குள் சிப் செய்ய, அதை தனது இடது காலால் அற்புதமாக கட்டுப்படுத்தி, அதே காலால் கோல்கீப்பர் வோசின்ஹாவை (Vozinha) தாண்டி பந்தை வலைக்குள் அனுப்பினார். இந்த மாதிரி ஒரு கோலைப் பார்க்கத்தான் ரசிகர்கள் இரவு முழுவதும் காத்திருந்தனர். மெஸ்ஸியின் இந்த கோல் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.
இதன்பிறகும் மெஸ்ஸி கோல் அடிக்க முயற்சித்தார். ஆனால் 63வது நிமிடத்தில் அவர் அடித்த ஷாட்டை கோல்கீப்பர் வோசின்ஹா தடுத்தார். 72வது நிமிடத்தில் கிடைத்த ஃப்ரீ-கிக்கையும் வோசின்ஹா கோலாக விடவில்லை. போட்டியின் கடைசி நிமிடங்களில்கூட மெஸ்ஸியின் ஃப்ரீ-கிக்கை அவர் தடுத்துவிட்டார்.
சொந்த மைதானத்தில் சாதனை
அமெரிக்காவின் மேஜர் லீக் சாக்கரில் (Major League Soccer) இன்டர் மியாமி (Inter Miami) அணிக்காக மெஸ்ஸி விளையாடுகிறார். இந்த போட்டி அதே மைதானத்தில்தான் நடந்தது. இந்த மைதானம், டிரெஸ்ஸிங் ரூம் எல்லாம் மெஸ்ஸிக்கு நன்கு பழக்கமானது. இந்த பழக்கப்பட்ட மைதானத்தில்தான் அவர் உலகக் கோப்பை சாதனையை படைத்துள்ளார். மெஸ்ஸி இன்னும் பல சாதனைகளை படைப்பார் என அவரது ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.
