MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Football
  • FIFA 2026: நாக்-அவுட்டில் அமெரிக்கா.. முதல் வெற்றியுடன் பிரேசில் மாஸ் கம்பேக்!

FIFA 2026: நாக்-அவுட்டில் அமெரிக்கா.. முதல் வெற்றியுடன் பிரேசில் மாஸ் கம்பேக்!

FIFA 2026: உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய அமெரிக்கா நாக்-அவுட் இடத்தை உறுதி செய்தது. ஹைட்டியை வீழ்த்திய பிரேசில் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

2 Min read
Author : Rayar A
Published : Jun 21 2026, 12:19 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
FIFA உலகக் கோப்பை; அமெரிக்கா நாக் அவுட் சுற்றுக்கு தகுதி
Image Credit : Getty

FIFA உலகக் கோப்பை; அமெரிக்கா நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி

FIFA உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நட்சத்திர வீரர் கிறிஸ்டியன் புலிசிச் இல்லாமலேயே, அமெரிக்க அணி நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில், போட்டியை நடத்தும் அமெரிக்கா 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. வெறும் 2 போட்டிகளில் விளையாடி அமெரிக்கா நாக்-அவுட் இடத்தை உறுதி செய்வது இதுவே முதல் முறையாகும்.

போட்டியின் 11-வது நிமிடத்திலேயே ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் பர்கெஸ் தவறுதலாக சொந்த அணிக்கு எதிராக கோல் அடித்ததால் (own goal), அமெரிக்காவுக்கு ஆரம்பத்திலேயே முன்னிலை கிடைத்தது. 43-வது நிமிடத்தில், அன்டோனியோ ஃப்ரீமன் அடித்த கோல் அமெரிக்காவுக்கு 2-0 என வலுவான முன்னிலையை தந்தது. இரண்டாம் பாதியிலும் இந்த முன்னிலையைத் தக்கவைத்துக்கொண்ட அமெரிக்கா, போட்டியில் வென்று 32 அணிகள் மோதும் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
65 வினாடிகளில் கோல் அடித்து பராகுவே வெற்றி
Image Credit : Getty

65 வினாடிகளில் கோல் அடித்து பராகுவே வெற்றி

துருக்கிக்கு எதிரான போட்டியில் பராகுவே அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த போட்டி தொடங்கிய வெறும் 65 வினாடிகளிலேயே மத்தியாஸ் கலார்சா கோல் அடிக்க பராகுவே அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த உலகக் கோப்பையில் அடிக்கப்பட்ட அதிவேக கோல் இதுவாகும். தொடர்ச்சியாக இரண்டாவது தோல்வியைச் சந்தித்த துருக்கி, இந்த தொடரிலிருந்து வெளியேறியது.

ஸ்காட்லாந்தை வீழ்த்திய மொராக்கோ

தனது முதல் உலகக் கோப்பையில் விளையாடும் இஸ்மாயில் சைபரி அடித்த கோலின் உதவியுடன், ஸ்காட்லாந்துக்கு எதிராக மொராக்கோ 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம், நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெறும் தனது நம்பிக்கையை மொராக்கோ உயிர்ப்புடன் வைத்துள்ளது. சைபரி, போட்டியின் 21-வது நிமிடத்தில் இந்த கோலை அடித்தார்.

33
பிரேசிலுக்கு முதல் வெற்றி
Image Credit : Getty

பிரேசிலுக்கு முதல் வெற்றி

5 முறை சாம்பியனான பிரேசில், 2026 FIFA உலகக் கோப்பையில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. ஹைட்டிக்கு எதிராக சனிக்கிழமை நடந்த போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் பிரேசில் அபார வெற்றி பெற்றது. 1974-க்குப் பிறகு முதல் முறையாக உலகக் கோப்பைக்கு தகுதி பெற்ற ஹைட்டி, தொடர்ச்சியாக 2 தோல்விகளுடன் இந்த தொடரிலிருந்து வெளியேறும் முதல் அணி என்றானது.

பிரேசில் வீரர் மத்தியாஸ் குன்ஹா 23 மற்றும் 36-வது நிமிடங்களில் கோல் அடித்தார். வினிசியஸ் ஜூனியர் 45+3-வது நிமிடத்தில் அணியின் 3-வது கோலை அடித்தார். முதல் பாதியிலேயே 3-0 என முன்னிலை பெற்ற பிரேசில், இரண்டாம் பாதியில் கோல் எதுவும் அடிக்கவில்லை. கணுக்கால் காயத்திலிருந்து இன்னும் முழுமையாக மீளாத நெய்மர், தொடர்ச்சியாக இரண்டாவது போட்டியிலும் விளையாடவில்லை.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
கால்பந்து
விளையாட்டு
அமெரிக்க ஐக்கிய நாடுகள்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
FIFA World Cup: தோல்வியின் விரக்தியா? மைதானத்தில் வரம்பு மீறிய அர்ஜென்டினா வீரர்கள்! இறுதி விசிலுக்குப் பின் மைதானத்தில் நடந்தது என்ன?
Recommended image2
Lionel Messi Net Worth: 6 சொகுசு ஹோட்டல்கள், ரூ.2,000 கோடிக்கும் அதிகமான சொத்து மதிப்பு.. பிசினஸிலும் கொடிகட்டிப் பறக்கும் மெஸ்ஸி!
Recommended image3
FIFA 2026 Prize Money: ஜெயிச்சா லைஃப் செட்டில்.. தோத்தாலும் 100 கோடி! மொத்த பரிசுத்தொகை எவ்வளவு?
Related Stories
Recommended image1
FIFA : ஹைட்டியை வீழ்த்தி குரூப்பில் முதலிடம் பிடித்த பிரேசில்; ஆஸ்திரேலியாவை அசால்ட்டாக வீழ்த்திய அமெரிக்கா
Recommended image2
Messi : மெஸ்ஸிக்கு ரெட் கார்டு தராதது ஏன்? ரெஃப்ரிக்கு எதிராக FIFA-விடம் அல்ஜீரியா புகார்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved