MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Football
  • FIFA 2026 Prize Money: ஜெயிச்சா லைஃப் செட்டில்.. தோத்தாலும் 100 கோடி! மொத்த பரிசுத்தொகை எவ்வளவு?

FIFA 2026 Prize Money: ஜெயிச்சா லைஃப் செட்டில்.. தோத்தாலும் 100 கோடி! மொத்த பரிசுத்தொகை எவ்வளவு?

FIFA 2026 Prize Money: FIFA உலகக் கோப்பை 2026 இறுதிப் போட்டிக்கு அர்ஜென்டினாவும் ஸ்பெயினும் ரெடி!. ஆனா, இந்தத் தொடரோட பரிசுத் தொகையைக் கேட்டா ஷாக் ஆகிடுவீங்க. குரூப் ஸ்டேஜ்ல தோத்து வெளியேறினாலே சுமார் ₹110 கோடி நிச்சயம்.

2 Min read
Author : Rayar A
Published : Jul 17 2026, 02:33 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
FIFA 2026 Prize Money
Image Credit : Getty

FIFA 2026 Prize Money

இந்த முறை FIFA மொத்தமாக 871 மில்லியன் டாலர், அதாவது இந்திய மதிப்பில் சுமார் ₹83,934 கோடியை பரிசுத் தொகையாக ஒதுக்கியுள்ளது. இது 2022 கத்தார் உலகக் கோப்பையின் மொத்த பட்ஜெட்டான 440 மில்லியன் டாலரை விட 65% அதிகம். இதில், 655 மில்லியன் டாலர் அணிகளின் செயல்பாட்டைப் பொறுத்து வழங்கப்படும். மீதமுள்ள நிதி, அணிகளின் தகுதி மற்றும் உலகக் கோப்பை தயாரிப்பு செலவுகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
சாம்பியன் ஆகும் அணிக்கு எவ்வளவு?
Image Credit : Getty

சாம்பியன் ஆகும் அணிக்கு எவ்வளவு?

இந்த உலகக் கோப்பையில் சாம்பியன் ஆகும் அணிக்கு, ஆட்டத்திறனுக்காக மட்டும் 50 மில்லியன் டாலர் (சுமார் ₹4,818 கோடி) கிடைக்கும். தகுதி மற்றும் இதர செலவுகளையும் சேர்த்தால், வின்னிங் டீம் பெறும் மொத்தத் தொகை 53.5 மில்லியன் டாலரை (சுமார் ₹5,155 கோடி) எட்டும். 2022-ல் வென்ற அர்ஜென்டினா 42 மில்லியன் டாலர்தான் பெற்றது. அதைவிட இது 8 மில்லியன் டாலர் அதிகம். ரன்னர்-அப் அணிக்கு 33 மில்லியன் டாலர் (சுமார் ₹3,180 கோடி) கிடைக்கும்.

Related Articles

Related image1
FIFA : மெஸ்ஸி vs எம்பாப்பே... இந்த ஆண்டு கோல்டன் பால் விருதை தட்டிச் செல்லப்போவது யார்?
Related image2
Argentina Vs England: கடைசி நேர த்ரில்! இங்கிலாந்தை வீழ்த்தி ஃபைனலுக்குள் நுழைந்த அர்ஜென்டினா!
35
குறைந்தபட்சம் 12.5 மில்லியன் டாலர் நிச்சயம்
Image Credit : X

குறைந்தபட்சம் 12.5 மில்லியன் டாலர் நிச்சயம்

இந்த முறை 48 அணிகள் பங்கேற்பதால், குரூப் ஸ்டேஜில் தோற்று வெளியேறும் அணிகளுக்கும் (33 முதல் 48வது இடம்) தலா 9 மில்லியன் டாலர் (சுமார் ₹86.7 கோடி) பெர்ஃபார்மன்ஸ் போனஸ் கிடைக்கும். இதனுடன், தகுதி பெற்ற ஒவ்வொரு அணிக்கும் FIFA ஏற்கனவே 2.5 மில்லியன் டாலர் (சுமார் ₹24 கோடி) வழங்கியுள்ளது. ஆக, ஒரு அணிக்கு குறைந்தபட்சம் 12.5 மில்லியன் டாலர் (சுமார் ₹120 கோடி) நிச்சயம்.
45
கால்பந்து உள்கட்டமைப்பை மேம்படுத்த உதவும்
Image Credit : Getty

கால்பந்து உள்கட்டமைப்பை மேம்படுத்த உதவும்

இந்த பரிசுத் தொகையை அந்தந்த நாடுகளின் அதிகாரப்பூர்வ கால்பந்து சங்கங்களுக்கு FIFA நேரடியாக வழங்கும். இந்த அதிகரித்த பரிசுத் தொகையால், சிறிய நாடுகளின் விளையாட்டு வாரியங்களுக்குக் கூட கோடிக்கணக்கில் வருமானம் கிடைக்கும். இது அந்த நாடுகளில் கால்பந்து உள்கட்டமைப்பை மேம்படுத்த உதவும் என FIFA கூறியுள்ளது.
55
FIFA 2026 பரிசுத்தொகை - முழு விவரம்
Image Credit : Getty

FIFA 2026 பரிசுத்தொகை - முழு விவரம்

சாம்பியன்: $50 மில்லியன் (மொத்தம் $52.5 மில்லியன் - சுமார் ₹505.9 கோடி). ரன்னர்-அப்: $33 மில்லியன் (மொத்தம் $35.5 மில்லியன் - சுமார் ₹342.1 கோடி). 3வது இடம்: $29 மில்லியன் (மொத்தம் $31.5 மில்லியன் - சுமார் ₹303.5 கோடி).  4வது இடம்: $27 மில்லியன் (மொத்தம் $29.5 மில்லியன் - சுமார் ₹284.2 கோடி). காலிறுதி (5-8 இடங்கள்): தலா $19 மில்லியன் (மொத்தம் $21.5 மில்லியன் - சுமார் ₹207.1 கோடி). ரவுண்ட் ஆஃப் 16 (9-16 இடங்கள்): தலா $15 மில்லியன் (மொத்தம் $17.5 மில்லியன் - சுமார் ₹168.6 கோடி). ரவுண்ட் ஆஃப் 32 (17-32 இடங்கள்): தலா $11 மில்லியன் (மொத்தம் $13.5 மில்லியன்). குரூப் ஸ்டேஜ் (33-48 இடங்கள்): தலா $9 மில்லியன் (மொத்தம் $11.5 மில்லியன் - சுமார் ₹110.8 கோடி).

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
FIFA உலகக் கோப்பை
விளையாட்டு

Latest Videos
Recommended Stories
Recommended image1
Argentina Vs England: கடைசி நேர த்ரில்! இங்கிலாந்தை வீழ்த்தி ஃபைனலுக்குள் நுழைந்த அர்ஜென்டினா!
Recommended image2
Spain vs France Semifinal: எம்பாப்பேவை கட்டிப்போட்ட ஸ்பெயின்... பிரான்ஸை வீழ்த்தி உலகக்கோப்பை ஃபைனலுக்கு மாஸ் என்ட்ரி!
Recommended image3
FIFA 2026: நாக்-அவுட்டில் அமெரிக்கா.. முதல் வெற்றியுடன் பிரேசில் மாஸ் கம்பேக்!
Related Stories
Recommended image1
FIFA : மெஸ்ஸி vs எம்பாப்பே... இந்த ஆண்டு கோல்டன் பால் விருதை தட்டிச் செல்லப்போவது யார்?
Recommended image2
Argentina Vs England: கடைசி நேர த்ரில்! இங்கிலாந்தை வீழ்த்தி ஃபைனலுக்குள் நுழைந்த அர்ஜென்டினா!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved