IPL: நான் கேப்டனா? அவன் கேப்டனா? அம்பயரிடம் சண்டைக்கு சென்ற ஷ்ரேயாஸ்! என்ன நடந்தது?
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் அம்பயரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

PBKS captain Shreyas Iyer argument with the umpire: ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 245 ரன்கள் குவித்து மலைக்க வைத்தது, பின்பு இமாலய இலக்கை நோக்கி பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 18.3 ஓவர்களில் 247 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
Punjab Kings captain Shreyas Iyer, IPL
இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அனியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 36 பந்தில் 82 ரன்கள் அடித்து அசத்தினார். போட்டியின் 2வது இன்னிங்ஸில் பஞ்சாப் கிங்ஸ் பீல்டிங் செய்தபோது ஷ்ரேயாஸ் ஐயர் அம்பயரிடம் கோபப்பட்ட சம்பவம் வைரலாகி வருகிறது. அதாவது பஞ்சாப் வீரர் க்ளென் மேக்ஸ்வெல் வீசிய இன்னிங்ஸின் ஐந்தாவது ஓவரின் இரண்டாவது பந்தை அம்பயர் வைடு பால் என அறிவித்தார்.
ஆனால் பந்து காலில் உரசியதுபோல் சென்றதால் மேக்ஸ்வெல் அம்பயரிடம் வைடு இல்லை என கேட்டு டிஆர்எஸ் செய்தார். ஆனால் டிஆர்எஸ் முன்பாக அவர் கேப்டன் மேக்ஸ்வெலிடம் கேட்கவில்லை. தானாக முடிவு எடுத்தார். அம்பயரும் அதை ஏற்றுக் கொண்டார். இதனால் ஆத்திரம் அடைந்த கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் அம்பயரை பார்த்து 'அம்பயர், குறைந்தபட்சம் ஒரு முறையாவது என்னிடம் கேளுங்கள்?' நான் தான் கேப்டன், அவர் (மேக்ஸ்வெல்) கேப்டன் இல்லை என்பதுபோல் ஹிந்தியில் ஆவேசமாக பேசினார்.
SRH vs PBKS: அபிஷேக் சர்மா துண்டுச்சீட்டில் எழுதியிருந்தது என்ன? ஏன் இப்படி கொண்டாடினார்?
SRH vs PBKS, Cricket
ஷ்ரேயாஸ் அம்பயரிடம் கோபப்படும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. கடைசியில் டிஆர்எஸ் முடிவில் அது வைடு பால் இல்லை என்பது தெரியவந்தது. பொதுவாக அணியின் கேப்டன்கள் தான் டிஆர்எஸ் எடுப்பார்கள். அதை தான் நடுவர் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்வார். ஆனால் நேற்று மேக்ஸ்வெல் தன்னிச்சையாக டிஆர்எஸ் கேட்டது ஷ்ரேயாஸ் ஐயருக்கு பிடிக்கவில்லை. இதனல் தான் அவர் மேக்ஸ்வெலிடம் கோபத்தை வெளிப்படுத்துவதற்கு பதில் அம்பயரிடம் தனது கோபத்தை வெளிக்கட்டியுள்ளார்.
Shreyas Iyer, IPL 2025
இந்த விவகாரத்தில் ஷ்ரேயாஸ் ஐயருக்கு ஆதராகவும், எதிராகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ''ஷ்ரேயாஸ் ஐயர் கோபப்பட்டது சரிதான். அவர் அனுமதி இல்லாமல் மேக்ஸ்வெல் டிஆர்எஸ் கேட்டது தவறு. அம்பயரும் ஷ்ரேயாஸ் ஐயரை பார்த்திருக்க வேண்டும்'' என்று ஒரு சிலர் கருத்துகளை கூறி வருகின்றனர். அதே வேளையில் மற்றொரு சிலர், ''இது வைடு பால் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. இதனால் மேக்ஸ்வெல் டிஆர்எஸ் கேட்டதும், அம்பயர் அதை ஏற்றுக்கொண்டதிலும் எனன் தவறு இருக்கிறது? 'ஷ்ரேயாஸ் ஐயர் பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். இங்கு தான் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா தனித்து நிற்கின்றனர்'' என்று கூறியுள்ளனர்.
SRH vs PBKS: வாழ்வில் மறக்க முடியாத மோசமான சாதனை படைத்த முகமது ஷமி!