MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • தொடர் புறக்கணிப்பு! அவமானம்! 1077 நாட்களுக்கு பிறகு தன்னை நிரூபித்த கருண் நாயர்! யார் இவர்?

தொடர் புறக்கணிப்பு! அவமானம்! 1077 நாட்களுக்கு பிறகு தன்னை நிரூபித்த கருண் நாயர்! யார் இவர்?

டெல்லி கேப்பிடல்ஸ் அணி வீரர் கருண் நாயர் 1077 நாட்களுக்கு பிறகு ஐபிஎல்லில் இடம்பிடித்து முதல் போட்டியிலேயே தான் யாரென்று நிரூபித்துள்ளார். 

2 Min read
Author : Rayar r
Published : Apr 14 2025, 11:33 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

Delhi Capitals Karun Nair Comeback: ஐபிஎல் கிரிக்கெட்டில் நேற்று நடந்த டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 5 விக்கெட் இழந்து 205 ரன்கள் குவித்தது. பின்பு விளையாடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 19 ஓவர்களில் 193 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. டெல்லி அணி வீரர் கருண் நாயர் 40 பந்துகளில் 12 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் 89 ரன்கள் எடுத்தார்.
 

24
Karun Nair, DC, IPL

Karun Nair, DC, IPL

கருண் நாயரை தவிர மற்ற டெல்லி வீரர்கள் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. டெல்லி அணி தோற்றாலும் கருண் நாயரின் மிகச்சிறப்பான இன்னிங்ஸ் பேசும்பொருளாகியுள்ளது. 1077 நாட்களுக்கு பிறகு ஐபிஎல்லில் களமிறங்கிய கருண் நாயர் ஐபிஎல் தொடரில் தனது அதிகப்பட்ச ஸ்கோரை பதிவு செய்துள்ளார். 33 வயதான அவர் கடைசியாக 2022 சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார்.

2018 ஆம் ஆண்டு டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக அவர் கடைசியாக அரைசதம் அடித்து இருந்தார். அதன்பிறகு சுமார் 7 ஆண்டுகளுக்கு பிறகு தான் யாரென்று நிரூபித்துள்ளார். நேற்றைய போட்டியில் உலகின் நம்பர் 1 பவுலரான ஐஸ்பிரித் பும்ராவின் பந்துகளை அவர் விளாசியத் தள்ளியது அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.

Virat Kohli: விராட் கோலியின் 10th மார்க் ஷீட் வைரல்! எவ்ளோ மார்க் தெரியுமா?

34
Karun Nair, IPL 2025

Karun Nair, IPL 2025

கருண் நாயர் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரை சேர்ந்தவர். இவரது பெற்றோர்களின் சொந்த ஊர் கேரள மாநிலம் செங்கனூர் ஆகும். கருண் நாயர் கடந்த 2016ம் ஆண்டே உலகம் முழுவதும் பிரபலமானவர். 2016ல் நவம்பர் மாதம் மொகாலியில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான் டெஸ்ட் போட்டியில் 300 ரன்கள் அடித்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். அதன்பிறகு அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை.

இந்திய அணியில் இடம் கிடைக்க தொடர்ந்து போராடி வந்தார். கடந்த ஆண்டு முஷ்டாக் அலி டிராபி, விஜய் ஹசாரே டிராபி அவரது வாழ்க்கையையே மாற்றியது எனலாம். சையத் முஷ்டாக் அலி டிராபியில் ஆறு இன்னிங்ஸ்களில் 177 ஸ்ட்ரைக் ரேட்டில் 255 ரன்கள் எடுத்தார் நாயர். விஜய் ஹசாரே டிராபியிலும் அவர் சிறப்பாக செயல்பட்டார். அங்கு அவர் ஐந்து இன்னிங்ஸ்களில் 542 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

44
DC vs MI, Sports News

DC vs MI, Sports News

ரஞ்சி டிராபியில் விதர்பா அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற நிலையில் கருண் ​​நாயர் 16 இன்னிங்ஸ்களில் 863 ரன்கள் எடுத்து அணி வெற்றி பெற முக்கிய காரணமாக விளங்கினார். இந்த சிறப்பான செயல்பாடுகளால் யார் இந்த கருண் நாயர்? என இந்தியா முழுவதும் பேச வைத்தார். இதனால் 2025 ஐபிஎல் மெகா ஏலத்தின் போது கருண் நாயர் கேபிடல்ஸ் அணியால் ரூ.50 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். 

டெல்லி அணியில் இடம்பிடித்தபோதும் அவர் பிளேயிங் லெவனில் இடம்பெறவில்லை. அந்த அணியின் வீரர் டாப் டூ பிளிசிஸ் காயத்தால் அவதிப்பட்ட நிலையில், நேற்றைய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கருண் நாயருக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைத்தது. அந்த ஒரே ஒரு வாய்ப்பிலும் தனது திறமையை நிரூபித்து இப்போது மீண்டும் ஹீரோவாக ஜொலித்துள்ளார் கருண் நாயர்.

டி20 கிரிக்கெட்டில் 100 அரைசதங்கள் அடித்த முதல் ஆசிய வீரராக விராட் கோலி சாதனை!

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஐபிஎல் 2025
ஐபிஎல்
டெல்லி கேபிடல்ஸ்
மும்பை இந்தியன்ஸ்

Latest Videos
Recommended Stories
Recommended image1
இந்திய அணியில் சஞ்சு சாம்சன் கம்பேக்.. பயிற்சியாளர் 'க்ரீன் சிக்னல்'.. 3 அதிரடி மாற்றங்கள்!
Recommended image2
ஹாரி ப்ரூக் ருத்ரதாண்டவம்.. மேஜிக் இன்னிங்ஸ்.. பாகிஸ்தானை பந்தாடி செமி பைனல் சென்ற இங்கிலாந்து!
Recommended image3
ஏற்கனவே 3 டக் அவுட் – அபிஷேக் சர்மாவிற்கு திரும்ப திரும்ப வாய்ப்பு கொடுக்க காரணம் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved