சிஎஸ்கே கேப்டனாகும் தோனி! ருத்ராஜ் கெய்க்வாட் இடத்தை நிரப்பும் 19 வயது பேட்ஸ்மேன்!
சிஎஸ்கே கேப்டன் ருத்ராஜ் கெய்வாட்டுக்கு காயம் ஏற்பட்டுள்ள நிலையில், தோனி கேப்டனாக இருக்கிறார். கெய்க்வாட்டுக்கு பதிலாக 19 வயது இளம் வீரர் பேட்ஸ்மேனாக ஜொலிக்க உள்ளார்.

IPL CSK vs Delhi Capitals: ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று மோதுகின்றன. 3 போட்டிகளில் விளையாடி 2ல் தோல்வி அடைந்துள்ள சிஎஸ்கே 2 புள்ளிகள் பெற்று 8வது இடத்தில் உள்ளது. எனவே இந்த போட்டியில் சிஎஸ்கே வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
Ruturaj Gaikwad , CSK
ருத்ராஜ் கெய்க்வாட் காயம்
இந்நிலையில், சிஎஸ்கே அணிக்கு பெரும் பின்னடைவாக கேப்டன் ருத்ராஜ் கெய்க்வாட் கையில் காயம் ஏற்பட்டு, டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடாமல் போகலாம் என்று கூறப்படுகிறது. இது சிஎஸ்கேவுக்கு மிகப்பெரிய அடியாகும். ருத்ராஜ் கெய்க்வாட் சற்று வலியில் இருப்பதாகவும், அடுத்த போட்டியில் அவர் பங்கேற்பது இறுதி பயிற்சி அமர்வைப் பொறுத்தது என்றும் சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸி கூறியுள்ளார்.
இந்த கெட்ட விஷயத்திலும் ஒரு நல்ல விஷயமாக ருத்ராஜ் கெய்க்வாட் இல்லாவிட்டால் மகேந்திர சிங் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துவார் என தகவல் வெளியாகி இருக்கிறது. சுமார் 12 ஆண்டுகளுக்கு பிறகு தோனி சிஎஸ்கே அணியை வழிநடத்த உள்ளதாக கூறப்படுவதால் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.
ஃபார்மில் இல்லாத ரோகித் சர்மாவுக்கு காயமா? சும்மா சொல்லி உட்கார வச்ச மும்பை இந்தியன்ஸ்?
Ruturaj Gaikwad and MS Dhoni, Cricket
ஆண்ட்ரே சித்தார்த்துக்கு வாய்ப்பு
இது தொடர்பாக சிஎஸ்கே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இன்று மாலை டாஸ் போடுவதற்கு முன்பே சிஎஸ்கே கேப்டன் யார் என தெரியவரும். இதற்கிடையே ருத்ராஜ் கெய்க்வாட் விளையாடாவிட்டால் அவரது இடத்தை நிரப்பப் போவது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. சிஎஸ்கே அணியில் தொடர்ந்து சிறப்பாக பேட்டிங் செய்து வரும் ஒரே வீரர் ருத்ராஜ் கெய்க்வாட் மட்டுமே.
பிளேயிங் லெவனில் ருத்ராஜ் கெய்க்வாட் இல்லையென்றால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முற்றிலும் மாறுபட்ட வழியில் சென்று ஆண்ட்ரே சித்தார்த்தை தேர்வு செய்யலாம். 19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடிய இந்த இளம் வீரர், ஐபிஎல் மெகா ஏலத்தில் உடனடியாக அணியால் வாங்கப்பட்டார். கெய்க்வாட் இல்லாத நிலையில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கக்கூடும் என்ற தகவலை மைக் ஹஸ்ஸிவும் கூறியிருந்தார்.
IPL, CSK vs DC Match
விஜய் சங்கருக்கு வாய்ப்பு கிடைக்குமா?
இதேபோல் சிஎஸ்கே அணியில் உள்ள தமிழ்நாட்டை சேர்ந்த விஜய் சங்கர் ருத்ராஜ் கெய்க்வாட்டுக்கு பதிலாக களமிறங்க முடியும். முதல் இரண்டு போட்டியில் விளையாடாத விஜய் சங்கருக்கு 3வது போட்டியில் விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் அந்த போட்டியில் கிடைத்த வாய்ப்பை அவர் வீணாக்கினார். விஜய் சங்கர் அணியில் கெய்க்வாட்டுக்கு பதிலாக களமிறங்கினால் வழக்கம்போல் ராகுல் திரிபாதி ரச்சின் ரவீந்திரவுடன் தொடக்க வீரராக களமிறங்குவார். விஜய் ஷங்கர் 3வது இடத்தில் களமிறங்குவார்.
விஜய் சங்கர் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக ஐபிஎல்லில் அவர் அபாரமாக விளையாடியுள்ளார். தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்பட்டால் சிஎஸ்கே அணிக்காகவும் அவர் அதுபோல் செய்ய முடியும். இவரைத் தவிர தீபக் ஹூடாவை 3வது இடத்தில் பயன்படுத்துவதற்கான சூத்திரத்தை CSK பயன்படுத்தலாம். ஆனால் முன்னாள் லக்னோ பேட்ஸ்மேனான தீபக் ஹூடா பேட்டிங் மட்டுமின்றி பீல்டிங்கிலும் சொதப்பி வருகிறார். ஆகவே அவர் ருத்ராஜ் கெய்க்வாட்டுக்கு பதிலாக இடம்பெற வாய்ப்புகள் மிகவும் குறைவே. ஆகவே ஆண்ட்ரே சித்தார்த் அல்லது விஜய் சங்கர் இரண்டு பேரில் யாராவது ஒருவர் ருத்ராஜ் இடத்தை பிடிக்க அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.