ஏலத்தில் எடுக்கப்படாத ஷர்துல் தாக்கூருக்கு திடீர் அதிர்ஷ்டம்! தட்டித்தூக்கும் அணி!
ஐபிஎல் ஏலத்தில் விலை போகாத ஷர்துல் தாக்கூர் ஐபிஎல்லில் விளையாட உள்ளதாகவும், அவரை ஒரு அணி சேர்த்துள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

Shardul Thakur will play for LSG: கிரிக்கெட் ரசிகரக்ள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஐபிஎல் 2025 திருவிழா மார்ச் 22ம் தேதி முதல் தொடங்குகிறது. இதற்காக அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன. இந்நிலையில், ஐபிஎல் நட்சத்திர ஏலத்தில் அணிகளால் கைவிடப்பட்ட இந்திய ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்கூர், லக்னோ சூப்பர் ஜெயண்ட் அணிக்காக விளையாடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஷர்துல் தாக்கூர்
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வீரர்களுடன் ஷர்துல் தாக்கூர் பயிற்சி பெறும் படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. லக்னோ அணியில் ஷர்துல் சேர்க்கப்படுவது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி ஐபிஎல் சீசனுக்கு முன்பே பல்வேறு வீரர்களின் காயங்களால் பாதிக்கப்பட்டது.
அந்த அணியின் பாஸ்ட் பவுலர் மயங்க் யாதவ் காயம் காரணமாக சீசனின் முதல் ஆட்டங்களில் விளையாடவில்லை. இதேபோல் ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷும் காயம் காரணமாக சில போட்டிகளில் பங்கேற்க முடியாத சூழ்நிலை உள்ளது. இதனால் தான் லக்னோ அணி ஆல்ரவுண்டரான ஷர்துல் தாக்கூரை அணியில் எடுக்க முடிவு செய்துள்ளது.
KKR அணிக்கு பெரும் பின்னடைவு! 150 கிமீ வேகத்தில் பந்துவீசும் பவுலர் திடீர் விலகல்!

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்
ஷர்துல் தாக்கூர் கடந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரராக இருந்தார். ஆனால் ஐபிஎல் மெகா நட்சத்திர ஏலத்தில் அவரை யாரும் ஏலத்தில் எடுக்கவில்லை. சிஎஸ்கே அணியும் வரை கைகழுவியது. ஆனால் ஷர்துல் தாக்கூர் ரஞ்சி கிரிக்கெட் போட்டிகளில் தான் யாரென்று நிரூபித்தார். ரஞ்சிக் கோப்பையில் மும்பை அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் ஷர்துல் தான். அந்த சீசனில் ஐந்தாவது அதிக ரன் எடுத்தவரும் அவர் தான்.

ஐபிஎல் 2025
6 இன்னிங்ஸ்களில் 275 ரன்கள் குவித்த ஷர்துலின் சூப்பர் பேட்டிங் பல போட்டிகளில் மும்பையை சரிவில் இருந்து வெளியே கொண்டு வந்துள்ளது. மும்பை அணியில் ஷர்துல் ஒரு சதம் மற்றும் இரண்டு அரைசதங்கள் அடித்தார். இந்த சிறப்பான செயல்திறனே இப்போது அவரை லக்னோ அணிக்கு கொண்டு வந்துள்ளது. ஐபிஎல் நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்தவுடன் ஷர்துல் தாக்கூர் லக்னோ அணியில் அதிராகப்பூர்வமாக இணைக்கப்படுவார். லக்னோ அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் உள்ளது குறிப்பிடத்தக்கது.
ரோகித் சர்மா vs விராட் கோலி! சொத்து மதிப்பில், வருமானத்தில் யார் கிங்? முழு விவரம்!