ஐபிஎல் 2025 தொடரில் கோடிகளில் பரிசு மழை! சாம்பியன் அணிக்கு எவ்வளவு கிடைக்கும்?
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், ஐபிஎல்லில் வழங்கப்படும் பரிசுத்தொகை குறித்து முழுமையாக பார்க்கலாம்.

IPL 2025 Prize Money: உலகின் மாபெரும் கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் போட்டிகள் விறுவிறுப்பாக சென்று வருகின்றன. இதுவரை 25 ஆட்டங்கள் முடிந்து விட்டன. இந்த போட்டிகளை கோடிக்கணக்கான ரசிகர்கள் மைதானத்தில் நேரில் சென்றும், டிவி மற்றும் ஸ்மார்ட்போன் வாயிலாகவும் பார்த்து ரசித்து வருகின்றனர்.
IPL 2025 Prize Money
நடப்பு ஐபிஎல் தொடரில் பலமுறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் புள்ளிப்பட்டியலில் கடைசி இடங்களில் உள்ளன. அதே வேளையில் யாரும் எதிர்பார்க்காத குஜராத் டைட்டன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் புள்ளிப்பட்டியலில் முதலிடங்களில் உள்ளன. இதுஒருபுறம் இருக்க ஐபிஎல் கிரிக்கெட்டில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணி, 2வது இடம் பிடிக்கும் அணிகள் மற்றும் அதிக ரன்கள், அதிக விக்கெட்கள் எடுக்கும் வீரர்களுக்கு எவ்வளவு பரிசுத்தொல்கை வழங்கப்படும் என உங்களுக்கு தெரியுமா?
அனுபவ வீரர்கள் இருக்கும்போது இளம் வீரர்கள் எதற்கு? சிஎஸ்கே பேட்டிங் கோச் பேட்டி!
IPL 2025, Cricket
ஐபிஎல் தொடரில் எப்போதும் போல இந்த முறையும் வீரர்களுக்கு பண மழை பொழிய உள்ளது. ஒவ்வொரு போட்டிக்குப் பிறகும் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்குப் பரிசு கிடைக்கும். தகவலின்படி, ஐபிஎல் 2025 பரிசுத் தொகை கடந்த சீசனைப் போலவே இருக்கும். சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு 20 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும். இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு கிட்டத்தட்ட ரூ.13 கோடி பரிசு கிடைக்கும்.
புள்ளிகள் பட்டியலில் மூன்றாவது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.7 கோடியும், நான்காவது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.6.5 கோடியும் வழங்கப்படும். மேலும் அதிக ரன்கள் எடுத்த வீரருக்கு ஆரஞ்சு கேப் உடன் 10 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும். அதிக விக்கெட்டுகள் எடுத்த பந்துவீச்சாளருக்கும் பர்பிள் கேப் உடன் 10 லட்சம் ரூபாய் பரிசு அளிக்கப்படும்.
IPL, Sports News
மேலும் இந்த ஐபிஎல் சீசனில் சிறப்பாக விளையாடும் இளம் வீரருக்கு 10 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும். இது தவிர தொடர் நாயகன் விருது பெறும் வீரருக்கும் பரிசுத்தொகை கிடைக்கும். இதுதவிர தினமும் ஒவ்வொரு போட்டிகளின் முடிவின்போதும் ஆட்டநாயகன் விருது பெறும் வீரர், அதிக பவுண்டரிகளை விளாசும் வீரர், அதிக சிக்சர்களை பறக்க விடும் வீரர் மற்றும் அதிக ஸ்டிரைக் ரேட்டில் விளையாடும் வீரருக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
IPL: குஜராத் அணிக்கு பெரும் பின்னடைவு! அதிரடி வீரர் விலகல்! மாற்று வீரர் யார்?