- Home
- Sports
- India vs New Zealand: ஐசிசி போட்டிகளில் எந்த அணி கெத்து? அதிக வெற்றிகளை அறுவடை செய்தது யார்?
India vs New Zealand: ஐசிசி போட்டிகளில் எந்த அணி கெத்து? அதிக வெற்றிகளை அறுவடை செய்தது யார்?
சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியாவும், நியூசிலாந்தும் 2ம் தேதி மோத உள்ள நிலையில், ஐசிசி போட்டிகளில் அதிக வெற்றிகளை அறுவடை செய்த அணி எது? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

India vs New Zealand: சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியாவும், நியூசிலாந்தும் வரும் 2ம் தேதி மோதுகின்றன. ஐசிசி போட்டிகளில் நியூசிலாந்து அணியின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்திய அணி வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகளை வீழ்த்தி விட்டு அரையிறுதிக்குள் நுழைந்து விட்டது. இந்திய அணி கடைசி லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியுடன் வரும் 2ம் தேதி துபாயில் மோதுகிறது. நியூசிலாந்து அணியும் பாகிஸ்தான், வங்கதேசத்தை பந்தாடி விட்டு அரையுறுதிக்குள் சென்று விட்டது.
சாம்பியன்ஸ் டிராபி
இந்த போட்டியில் வெற்றி பெறும் அணிகள் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடிக்கும் என்பதால் இது முக்கியத்துவம்வாயந்த போட்டியாக மாறியுள்ளது. இந்தியாவும், நியூசிலாந்தும் இதற்கு முன்பு ஒரே ஒரு சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் தான் மோதியுள்ளன. 2000ம் ஆண்டு ஐசிஐ நாக் அவுட் என்ற பெயரில் சாம்பியன்ஸ் டிராபி நடைபெற்றது. இந்த தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி கோப்பையை வென்றது.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 264/6 ரன்கள் குவித்தது. கேப்டன் சவுரங் கங்குலி அதிரடி சதம் (117 ரன்) விளாசினார். பின்பு விளையாடிய நியூசிலாந்து அணி ஒரு கட்டத்தில் 132/5 என தடுமாறியது. ஆனால் ஆல்ரவுன்டர் கிறிஸ் கெய்ன்ஸ் தனி ஆளாக போராடி சூப்பர் சதம் (102 ரன்) விளாசி அணியை கோப்பையை வெல்ல வைத்தார்.
ஹர்திக் பாண்டியாவின் 'டான்' தோற்றம்: ஹீரோ மாதிரி இருக்கிறாரே; ரசிகர்கள் கொண்டாட்டம்!
இந்தியா-நியூசிலாந்து போட்டி
இந்த போட்டி மட்டுமின்றி ஐசிசியின் பெரிய தொடர்களில் நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு எப்போதும் சவாலாக விளங்கி வருகிறது. ஏனெனில் 2023ம் ஆண்டுக்கு முன்பு கிட்டத்தட்ட 20 ஆண்டுகளில் இந்தியா நியூசிலாந்தை ஐசிசி போட்டிகளில் வென்றதில்லை. 2023ல் ஒருநாள் உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக இரண்டு வெற்றிகளை பதிவு செய்த இந்திய அணி இந்த மோசமான சாதனைக்கு முற்றுப்புள்ளி வைத்தது/
மான்செஸ்டரில் நடந்த 2019 உலகக் கோப்பையின் அரையிறுதியில், இரண்டு நாட்கள் மழையால் பாதிக்கப்பட்ட ஆட்டத்தில் இந்தியாவை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து சூப்பர் வெற்றி பெற்றிருந்தது. அடுத்த 4 ஆண்டுகளுக்கு பிறகு 2023ம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பையில் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் நியூசிலாந்தை 70 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம் இந்தியா பழிதீர்த்தது.
இந்திய ஓடிஐ வெற்றிகள்
ஓடிஐ மட்டுமின்றி 2007, 2016 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் நடந்த டி20 உலகக்கோப்பைகளிலும் இந்தியாவை நியூசிலாந்து வீழ்த்தி இருந்தது. 2023ல் நடந்த ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணி இந்தியாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்ததை யாரும் மறந்திருக்க முடியாது. ஒட்டுமொத்தமாக, ஒருநாள் உலகக் கோப்பைகளில் இந்த இரு அணிகளும் விளையாடிய 10 ஆட்டங்களில் தலா 5 ஆட்டங்களில் வென்றுள்ளன.
இந்தியாவும், நியூசிலாந்தும் இதுவரை 118 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் இந்தியா 60 போட்டிகளில் வென்றது. 50 போட்டிகளில் தோல்வியடைந்தது. ஒரு போட்டி சமநிலையில் முடிந்தது. 7 போட்டிகளில் முடிவில்லை. சாம்பியன்ஸ் டிராபியை பொறுத்தவரை இந்தியா 31 போட்டிகளில் 20 வெற்றிகளுடன் நல்ல நிலையில் உள்ளது.
இந்திய அணி கடைசி 13 ஆட்டங்களில் இரண்டில் மட்டுமே தோல்வியடைந்துள்ளது. நியூசிலாந்து அணி சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடிய 26 போட்டிகளில் 14 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
கோலி, ரோகித் இல்ல, ஒரு ரன்னுக்கு ரூ.3 லட்சம் சம்பாதித்த கிரிக்கெட் வீரர் இவரா?