Hardik Pandya Video: ஹர்திக் பாண்டியா தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர் தென்னிந்திய ஹீரோவைப் போல் இருக்கிறார். அந்த வீடியோவை பற்றி பார்ப்போம்.

Hardik Pandya Video: இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியா சமூக வலைதளங்களில் எப்போதும் பேசுபொருளாக இருப்பார். தற்போது அவர் சாம்பியன்ஸ் டிராபி 2025க்காக துபாய்க்கு சென்றுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக பந்து வீசினார். அந்தப் போட்டியில் அவர் சிறப்பாக செயல்பட்டதால், அவருடைய காதலி பற்றிய செய்திகள் பரவின. தற்போது, ​​ஹர்திக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார், அதில் அவர் ஒரு ஹீரோவைப் போல் இருக்கிறார்.

ஹர்திக் பாண்டியாவின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்

ஹர்திக் பாண்டியா வெள்ளிக்கிழமை இன்று தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில் அவர் ஹீரோவைப் போல் இருக்கிறார். அவர் அணிந்திருக்கும் உடை தென்னிந்திய திரைப்படமான 'டான் நம்பர் 1' படத்தில் நாகார்ஜுனா அணிந்திருந்த உடையை போல் உள்ளது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் லைக்ஸ்களையும், கமெண்ட்களையும் தெறிக்கவிட்டு வருகின்றனர்.

View post on Instagram

சமூக வலைதளங்களில் ஹர்திக்:

ஹர்திக் பாண்டியா சமூக வலைதளங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறார். அவர் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார். அவரை 36.4 மில்லியன் மக்கள் பின்தொடர்கிறார்கள். நியூசிலாந்துக்கு எதிரான இந்தியாவின் அடுத்த போட்டி வரும் மார்ச் 2ஆம் தேதி துபாயில் நடைபெற உள்ளது. அந்தப் போட்டியிலும் ஹர்திக் பாண்டியா பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான 2 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்று அரையிறுதிப் போட்டிக்கு சென்றுள்ளது. ஆதலால், நியூசிலாந்திற்கு எதிரான போட்டியானது பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தாது.