MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • ஹர்திக் பாண்டியா சொன்ன அந்த ஒரு வார்த்தை... மொத்த மேட்ச்சையும் மாத்திய திலக் வர்மா! அப்படி என்ன சொன்னார்?

ஹர்திக் பாண்டியா சொன்ன அந்த ஒரு வார்த்தை... மொத்த மேட்ச்சையும் மாத்திய திலக் வர்மா! அப்படி என்ன சொன்னார்?

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில், ஹர்திக் பாண்டியாவின் ஆலோசனைக்குப் பிறகு திலக் வர்மா சதம் அடித்து மும்பை இந்தியன்ஸை வெற்றி பெற வைத்தார். அப்படி ஹர்திக் அவரிடம் என்ன சொன்னார் என்பதை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Apr 21 2026, 01:33 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Hardik Pandya advice to Tilak Varma
Image Credit : ANI

Hardik Pandya advice to Tilak Varma

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஒரு அற்புதமான வெற்றியைத் தேடித் தந்தது, கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் சரியான நேரத்து உரையாடலும், திலக் வர்மாவின் அதிரடி சதமும்தான். ஒரு கட்டத்தில் தடுமாறிய மும்பை அணியை, ஹர்திக் பாண்டியா கொடுத்த நம்பிக்கை எப்படி மாற்றியது என்பதுதான் இப்போது கிரிக்கெட் உலகில் ஹாட் டாபிக். போட்டியின்போது டிரிங்க்ஸ் பிரேக்கில் ஹர்திக் பாண்டியாவும் திலக் வர்மாவும் சீரியஸாக பேசிக்கொண்டிருந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலானது.

25
தடுமாறிய திலக் வர்மா
Image Credit : ANI

தடுமாறிய திலக் வர்மா

முதலில் பேட்டிங் ஆடிய மும்பை அணியின் சூர்யகுமார் யாதவ், குயின்டன் டி காக் போன்ற முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆனதால், மும்பை அணி பெரும் அழுத்தத்தில் இருந்தது. இதையடுத்து திலக் வர்மா களமிறங்கினார். இந்த சீசனின் முதல் ஐந்து போட்டிகளில் வெறும் 43 ரன்கள் மட்டுமே திலக் அடித்திருந்தார். இந்த சீசனில் ஒரு சிக்ஸர் கூட அவர் பேட்டில் இருந்து வரவில்லை. சராசரி 10க்கும் கீழ், ஸ்ட்ரைக் ரேட்டும் எதிரணிக்கு பயம் காட்டும் அளவுக்கு இல்லை.

Related Articles

Related image1
Hardik Pandya Life: Mumbai Indians கேப்டன் ஹர்திக் பாண்டியா: 9-ஆம் வகுப்பு வரை படிப்பு..140 கோடி சொத்து;வியக்க வைக்கும் வாழ்க்கை!
Related image2
ஹர்திக்கின் ஹார்ட்-வின்னிங் மொமண்ட்..! வான்கடே ஊழியர்களுக்கு மெகா சர்ப்ரைஸ் கொடுத்த பாண்டியா..!
35
23 பந்தில் 82 ரன்கள் விளாசல்
Image Credit : ANI

23 பந்தில் 82 ரன்கள் விளாசல்

கடந்த சீசனில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸுக்கு எதிராக ரன் எடுக்க முடியாமல் திணறிய திலக்கை, மும்பை அணி நிர்வாகம் ரிட்டயர் அவுட் செய்தது. அகமதாபாத்திலும் கிட்டத்தட்ட அதே போன்ற ஒரு நிலைமைதான் இருந்தது. மும்பை இன்னிங்ஸில் ஆறு ஓவர்கள் மட்டுமே மீதமிருந்தபோது, திலக் 22 பந்துகளில் 19 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். ஆனால், பாண்டியாவுடனான அந்த சந்திப்புக்குப் பிறகு திலக் வர்மாவின் பேட்டிங் ஸ்டைலே மொத்தமாக மாறியது. அடுத்த 23 பந்துகளில் 82 ரன்களை விளாசினார். இதன் மூலம், வெறும் 45 பந்துகளில் தனது முதல் ஐபிஎல் சதத்தைப் பதிவு செய்தார் திலக்.

45
ஹார்திக் என்ன சொன்னார்?
Image Credit : ANI

ஹார்திக் என்ன சொன்னார்?

போட்டிக்குப் பிறகு திலக் வர்மாவைப் பற்றி ஹர்திக் பேசியது இதுதான்... "திலக்கோட திறமை மேல எனக்கு முழு நம்பிக்கை இருந்துச்சு. பந்தை மட்டும் பாரு, உன்னோட இயல்பான ஆட்டத்தை விளையாடுன்னு தான் சொன்னேன். அது அவருக்கும் டீமுக்கும் ரொம்ப அவசியமா இருந்துச்சு," என்று ஹர்திக் பாண்டியா கூறினார்.

55
சாதனை வெற்றி
Image Credit : ANI

சாதனை வெற்றி

14 ஓவர்களில் 103 ரன்களுக்கு 4 விக்கெட் என்ற நிலையில் இருந்த மும்பை அணி, திலக் வர்மாவின் (101*) அதிரடி பேட்டிங்கால் 199 என்ற வலுவான ஸ்கோரை எட்டியது. இந்த நம்பிக்கை மும்பையின் பந்துவீச்சிலும் வெளிப்பட்டது. ஜஸ்பிரித் பும்ரா முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தி சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தார். அவரைத் தொடர்ந்து, அஷ்வனி குமார் 24 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தி குஜராத் அணியின் பேட்டிங் வரிசையை சரித்தார். 15.5 ஓவர்களில் வெறும் 100 ரன்களுக்கு குஜராத் அணி ஆல் அவுட் ஆனதால், 99 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இமாலய வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், மும்பை இந்தியன்ஸ் அணி இந்தத் தொடரில் கம்பேக் கொடுத்துள்ளது. வரும் போட்டிகளிலும் இதே ஃபார்மை தொடர்வார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஐபிஎல்
ஹர்திக் பாண்டியா

Latest Videos
Recommended Stories
Recommended image1
Vaibhav Suryavanshi: RR தோல்வியால் மைதானத்தில் கதறி அழுத வைபவ் சூர்யவன்ஷி.. வைரலாகும் வீடியோ!
Recommended image2
MS Dhoni: தோனி எப்போது வருவார்? சிஎஸ்கே கொடுத்த 'சூப்பர்' அப்டேட்.. ரசிகர்கள் ஹேப்பி!
Recommended image3
CSK Replacement: ஆயுஷ் மத்ரேக்கு பதில் யார்? CSK-வின் நம்பர் 3 இடத்துக்கு 3 மாஸ் வீரர்கள்!
Related Stories
Recommended image1
Hardik Pandya Life: Mumbai Indians கேப்டன் ஹர்திக் பாண்டியா: 9-ஆம் வகுப்பு வரை படிப்பு..140 கோடி சொத்து;வியக்க வைக்கும் வாழ்க்கை!
Recommended image2
ஹர்திக்கின் ஹார்ட்-வின்னிங் மொமண்ட்..! வான்கடே ஊழியர்களுக்கு மெகா சர்ப்ரைஸ் கொடுத்த பாண்டியா..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved