MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Mbappe: எங்களுக்கும் கேவலமாக ஆடத் தெரியும்! ஃபவுல் செய்த பராகுவேவை வெளுத்து வாங்கிய எம்பாப்பே!

Mbappe: எங்களுக்கும் கேவலமாக ஆடத் தெரியும்! ஃபவுல் செய்த பராகுவேவை வெளுத்து வாங்கிய எம்பாப்பே!

Mbappe: பெனால்டி அடிக்க எம்பாப்பே தயாரானபோது, பராகுவே வீரர்கள் கிக்கிங் ஸ்பாட்டை தங்கள் ஷூக்களால் சேதப்படுத்தியதும், பிரான்ஸ் வீரர்களை தொடர்ந்து வம்பிழுத்ததும் மைதானத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது.

2 Min read
Author : Rayar A
Published : Jul 05 2026, 02:08 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
பராகுவே அணியை வீழ்த்திய பிரான்ஸ்
Image Credit : Getty

பராகுவே அணியை வீழ்த்திய பிரான்ஸ்

ஃபிஃபா உலகக் கோப்பை கால் இறுதிச் சுற்றுக்கு முந்தைய போட்டியில், பராகுவே அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரான்ஸ் காலிறுதிக்கு முன்னேறியது. கிலியன் எம்பாப்பே பெனால்டி மூலம் அடித்த ஒரே கோலால் பிரான்ஸ் வெற்றி பெற்றது. பராகுவேயின் கடுமையான தடுப்பாட்டத்தை மீறி பிரான்ஸ் இந்த வெற்றியைப் பதிவு செய்துள்ளது. சூப்பர் ஸ்டார் கிலியன் எம்பாப்பே பெனால்டியில் அடித்த ஒரே கோல்தான் பிரான்ஸின் வெற்றிக்குக் காரணமாக அமைந்தது. இந்த உலகக் கோப்பையில் எம்பாப்பேவுக்கு இது 7-வது கோல். ஒட்டுமொத்தமாக உலகக் கோப்பைகளில் அவர் அடிக்கும் 19-வது கோல் இதுவாகும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
பிரான்ஸ் வீரர்களை ஃபவுல் செய்த பராகுவே வீரர்கள்
Image Credit : Asianet News

பிரான்ஸ் வீரர்களை ஃபவுல் செய்த பராகுவே வீரர்கள்

ஆனால் ஆட்டம் தொடங்கியது முதல் முடியும் வரை, பராகுவே வீரர்கள் ஆடியது ஒரு ரஃப் கேம் தான். ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணத்தை விட, பிரான்ஸ் வீரர்களை, குறிப்பாக எம்பாப்பேவை ஃபவுல் செய்து சீண்டுவதிலேயே அவர்கள் குறியாக இருந்தனர். போட்டி முடிந்ததும், பராகுவே கோல்கீப்பர் ஓர்லான்டோ கில் கை குலுக்க வந்தபோது, அதை எம்பாப்பே கண்டுகொள்ளாமல் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பிரான்ஸ் வீரர் டெசிரே டுவேயை பாக்ஸுக்குள் ஃபவுல் செய்ததால் கிடைத்த பெனால்டியை கோலாக்கி, எம்பாப்பே பிரான்ஸின் வெற்றியை உறுதி செய்தார். பெனால்டி அடிக்க எம்பாப்பே தயாரானபோது, பராகுவே வீரர்கள் கிக்கிங் ஸ்பாட்டை தங்கள் ஷூக்களால் சேதப்படுத்தியதும், பிரான்ஸ் வீரர்களை தொடர்ந்து வம்பிழுத்ததும் மைதானத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது. ஆட்டம் முடிய சில நிமிடங்கள் இருந்தபோது, கார்னர் கிக் கிடைத்த சமயத்திலும் பராகுவே வீரர்கள் எம்பாப்பேவை சீண்ட முயன்றனர்.

33
எங்களுக்கும் கேவலமாக ஆடத் தெரியும்
Image Credit : AFP

எங்களுக்கும் கேவலமாக ஆடத் தெரியும்

ஆனால், அதற்கெல்லாம் அசராமல், சிரித்துக்கொண்டே அவர்களைப் புறக்கணித்த எம்பாப்பேவின் வீடியோவும் வைரலானது. போட்டிக்குப் பிறகு பேசிய எம்பாப்பே, "பராகுவே இப்படி ஒரு ரஃப் கேம் ஆடுவார்கள் என்று எங்களுக்கு முன்பே தெரியும். ஆனால், அவர்களைப் போல கேவலமாக எங்களுக்கும் ஆடத் தெரியும்," என்று காட்டமாக பதிலளித்தார்.

 போட்டியில் 13 ஃபவுல்கள் செய்தும் பராகுவே வீரர்கள் ஒருவருக்குக் கூட மஞ்சள் அட்டை காட்டாத நடுவரின் செயல்பாடு குறித்தும் சமூக வலைதளங்களில் கடும் விவாதங்கள் எழுந்துள்ளன. ஆனால், பிரான்ஸ் அணியில் ஒலிசே உட்பட மூன்று வீரர்களுக்கு மஞ்சள் அட்டை காட்டப்பட்டது

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
FIFA உலகக் கோப்பை
விளையாட்டு
கால்பந்து
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
IND vs NZ T20: புயல் வேகத்தில் அர்ஷ்தீப் சிங்.. புவனேஷ்வர் குமாரின் சாதனையை தகர்த்து வரலாற்று சாதனை!
Recommended image2
Kieron Pollard: MI அணியின் புதிய ‘கிங்’ பொல்லார்ட்..! தலைமைப் பயிற்சியாளராக அதிரடி புரமோஷன்..
Recommended image3
IND vs NZ 2nd T20: இளம் தோனி வந்தாச்சு.. ருத்ரதாண்டவமாடிய திலக் வர்மா.. இந்திய அணி த்ரில் வெற்றி!
Related Stories
Recommended image1
FIFA உலகக் கோப்பை வரலாற்றில் முதல்முறை... ஜெர்மனி பெனால்டியில் வெளியேறி அதிர்ச்சி!
Recommended image2
Lionel Messi: விடிய விடிய காத்திருந்த ரசிகர்களுக்கு விருந்து! லியோனல் மெஸ்ஸி புதிய உலக சாதனை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved