ரயில் முன்பதிவு டிக்கெட்டில் பெயர், தேதியை மாற்றுவது எப்படி? முழு விவரம்!
ரயில் முன்பதிவு டிக்கெட்டுகளை வேறு பெயருக்கு மாற்றிக் கொள்ள முடியும். இதேபோல் வேறு பயண தேதியையும் மாற்றிக் கொள்ள முடியும்.
Train Ticket booking rules
இந்தியாவில் ரயில் பயணத்தை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது. பயணிக்க மிகவும் வசதியாக இருப்பதால் பல லட்சக்கணக்கான மக்கள் ரயிலை நாடி வருகின்றனர். ரயில் டிக்கெட் முன்பதிவு செய்த சிலரால் சில காரணங்களால் பயணிக்க முடியாமல் போகும். இதனால் முன்பதிவு செய்தவர்கள் டிக்கெட்டை கேன்சல் செய்யும்போது குறிப்பிட்ட கட்டணம் பிடித்தம் செய்யப்படும்.
ஆனால் இப்போது முன்பதிவு செய்த ரயில் டிக்கெட்டை வேறு ஒருவரின் பெயருக்கு மாற்றவும், வேறு தேதிக்கு மாற்றவும் முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? அது குறித்து இப்போது விரிவாக காணலாம். ஆனால் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த டிக்கெட்டில் உங்களால் பெயர் மாற்ற முடியாது. கவுண்ட்டர்களில் நேரடியாக முன்பதிவு செய்த டிக்கெட்டில் மட்டுமே பெயர் மாற்ற முடியும்.
How to change the name on a train ticket?
முன்பதிவு டிக்கெட்டில் பெயர் மாற்றுவதற்கான தகுதி
* நீங்கள் முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே அதாவது தந்தை, தாய், சகோதரர், சகோதரி, மகன், மகள், கணவன் அல்லது மனைவி ஆகியோரது பெயர்களில் மட்டுமே மாற்ற முடியும்.
* கல்விச் சுற்றுலா அல்லது அரசு அதிகாரிகளுக்காக செய்யப்பட்ட குழு முன்பதிவு டிக்கெட்களிலும் பெயர் மாற்றம் செய்யலாம்
முன்பதிவு டிக்கெட்டில் பெயர் மாற்றுவதற்கான நடைமுறை
* முன்பதிவு செய்த ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்னதாக அருகிலுள்ள ரயில்வே முன்பதிவு அலுவலகத்துக்கு முன்பதிவு டிக்கெட், வேறு ஒருவருக்கு மாற்ற வேண்டியதற்கான காரணம் குறித்த லட்டர், செல்லுபடியாகும் ஏதாவது ஒரு அடையாள அட்டையுடன் செல்ல வேண்டும்.
* அந்த ஆவணங்களை சம்பந்தப்பட்ட ரயில்வே அதிகாரிகளிடம் கொடுத்து பெயர் மாற்றிக் கொள்ளலாம்.
ரயில் டிக்கெட் கேன்சல் செய்யும் விதிகள்; எவ்வளவு பணம் பிடித்தம் செய்யப்படும்?
How to change date on a train ticket?
விதிகள் மற்றும் நிபந்தனைகள்
* முன்பதிவு டிக்கெட்டில் ஒருமுறை மட்டுமே பெயர் மாற்ற முடியும்.
* நாம் மேலே குறிபிட்டதைபோல் ஆன்லைனில் முன்பதிவு செய்யும் டிக்கெட்டுகளுக்கு பெயர் மாற்ற முடியாது.
முன்பதிவு டிக்கெட்டில் தேதியை மாற்றுவதற்கான நடைமுறை மற்றும் விதிகள்
* முன்பதிவு செய்த ரயில் புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்னதாக அருகிலுள்ள ரயில்வே முன்பதிவு அலுவலகத்துக்கு முன்பதிவு டிக்கெட், செல்லுபடியாகும் ஏதாவது ஒரு அடையாள அட்டையுடன் செல்ல வேண்டும்.
Train Ticket cancel rules
* பின்பு நீங்கள் பயணிக்க வேண்டிய வேறு தேதியை தெளிவாக விண்ணப்பத்தில் குறிப்பிட்டு அடையாள அட்டையுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும். அதிகாரி அதை பரீசிலித்து நீங்கள் பயணிக்க வேண்டிய புதிய தேதியை மாற்றித் தருவார்.
* ஆன்லைனில் முன்பதிவு செய்யும் டிக்கெட்டுகளுக்கு தேதி மாற்ற முடியாது.
* தட்கல் டிக்கெட்டுகள் மற்றும் வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டுகளில் பெயர் மற்றும் தேதியை மாற்ற முடியாது.
* வேறு தேதிக்கு டிக்கெட் மாற்றும்போது நீங்கள் விரும்பிய பெர்த் கிடைக்கும் என்பதை உறுதியாக சொல்ல முடியாது.
சார்ட் தயாரான பிறகும் ரயிலில் கன்ஃபார்ம் டிக்கெட் பெறலாம்! பலருக்கும் தெரியாத ட்ரிக்!