ரயில் டிக்கெட் கேன்சல் செய்யும் விதிகள்; எவ்வளவு பணம் பிடித்தம் செய்யப்படும்?
ரயில் டிக்கெட் ரத்து செய்யும் விதிகள் மற்றும் டிக்கெட்டை ரத்து செய்தால் எவ்வளவு பணம் பிடித்தம் செய்யப்படும்? என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
Train Ticket
இந்தியாவில் ஒவ்வொரு நாளும் ரயிலில் லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்கின்றனர். அதுவும் பண்டிகை காலங்கள் மற்றும் விடுமுறை காலங்களில் இந்த எண்ணிக்கை இரட்டிப்பாகும். பண்டிகை காலங்கள் மட்டுமின்றி சாதாரண நாட்களிலும் ரயிலில் முன்பதிவு டிக்கெட் கிடைப்பது என்பது குதிரை கொம்புதான். ரயிலில் பெரும்பாலான நேரங்களில் வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் உறுதியாவது கிடையாது.
வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் கன்பார்ம் ஆகாது என்னும் வேளையில் நாம் வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டை கேன்சல் செய்கிறோம். டிக்கெட்டை ரத்து செய்வதால் ரயில்வேக்கு எவ்வளவு வருவாய் கிடைக்கிறது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? RTI பதிலின்படி, இந்திய ரயில்வே கடந்த மூன்று ஆண்டுகளில் காத்திருப்போர் பட்டியல் டிக்கெட்டுகளை ரத்து செய்ததன் மூலம் மட்டும் ரூ.1,230 கோடி வருவாய் ஈட்டியுள்ளது என்பது தெரியவருகிறது.
Train Ticket Cancelling
இந்திய ரயில்வேயின் விதிகளின்படி, உறுதி செய்யப்பட்ட டிக்கெட் வைத்திருக்கும் பயணிகள் பணத்தைத் திரும்பப் பெறுவதற்கு ரயில் புறப்படுவதற்கு குறைந்தபட்சம் 4 மணி நேரத்திற்கு முன்பே தங்கள் டிக்கெட்டை ரத்து செய்ய வேண்டும். இந்த காலக்கெடுவிற்குள் டிக்கெட்டை ரத்து செய்யாவிட்டால், பணம் திரும்ப வழங்கப்படாது.
உங்கள் ரயில் டிக்கெட் சார்ட் தயாரிக்கப்பட்ட பிறகும் காத்திருப்புப் பட்டியலில் இருந்தால் ரயில் புறப்படும் நேரத்திற்கு 30 நிமிடங்களுக்கு முன் உங்கள் டிக்கெட் ஆட்டோமெட்டிகாக ரத்து செய்யப்படும். அப்போது இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பயணிகளுக்கு ரூ.60 கழிக்கப்படும். அதேசமயம் ஏசி வகுப்பில் ரூ.65 கழிக்கப்படும், மீதமுள்ள தொகை திருப்பி அளிக்கப்படும்.
சார்ட் தயாரான பிறகும் ரயிலில் கன்ஃபார்ம் டிக்கெட் பெறலாம்! பலருக்கும் தெரியாத ட்ரிக்!
train ticket cancel rules
இப்போது ரயிலில் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டை கேன்சல் செய்யும்போது எவ்வளவு தொகை பிடித்தம் செய்யப்படும் என்பதை பார்க்கலாம்.
* ரயிலில் 2ம் வகுப்பு இருக்கை கொண்ட பெட்டிகளில் பயணிக்கும் பயணிகள் டிக்கெட்டை கேன்சல் செய்தால் அவர்களுக்கு ரூ.60 பிடித்தம் செய்யப்படும்.
* இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் பயணிக்கும் பயணிகள் டிக்கெட்டை கேன்சல் செய்தால் அவர்களுக்கு ரூ.120 பிடித்தம் செய்யப்படும்.
* இரண்டாம் வகுப்பு குளிர்சாதன பெட்டிகளின் பயணிகள் டிக்கெட்டை கேன்சல் செய்தால் ரூ.200 பிடித்தம் செய்யப்படும்.
* முதல் வகுப்பு குளிர்சாதன பெட்டி மற்றும் எக்ஸிகியூட்டிவ் வகுப்பில் பயணிக்கும் பயணிகள் வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டை கேன்சல் செய்தால் ரூ.240 பிடித்தம் செய்யப்படும்.
train ticket booking
உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டுகளில், திட்டமிடப்பட்ட புறப்படும் நேரத்திற்கு 48 மணி நேரம் மற்றும் 12 மணி நேரத்திற்குள் டிக்கெட் ரத்து செய்யப்பட்டால், மொத்தத் தொகையில் 25% வரை கழிக்கப்படும். ரயில் புறப்படும் நேரத்திற்கு 4 மணி முதல் 12 மணி நேரத்திற்குள் டிக்கெட்டை ரத்து செய்தால், டிக்கெட்டின் பாதித் தொகை அதாவது 50% கழிக்கப்படும்.
ரயில் புறப்படும் நேரத்திற்கு 4 மணி நேரத்திற்கு முன்பு நீங்கள் டிக்கெட்டை ரத்து செய்ய முடியாவிட்டால், அதன் பிறகு ஒரு பைசா கூட திரும்பப் பெற முடியாது.
ராஜ வசதிகள்.. ஆசியாவின் மிகவும் விலை உயர்ந்த சொகுசு ரயில்! டிக்கெட் விலை இவ்வளவா?