ராஜ வசதிகள்.. ஆசியாவின் மிகவும் விலை உயர்ந்த சொகுசு ரயில்! டிக்கெட் விலை இவ்வளவா?
இந்தியாவின் இந்த எக்ஸ்பிரஸ், ஆசியாவிலேயே மிகவும் விலையுயர்ந்த ரயிலாகும். லட்சக்கணக்கில் கட்டணம் கொண்ட இந்த ரயில், ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் போன்ற வசதிகளைக் கொண்டுள்ளது. இதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
Most Expensive Train
இந்திய ரயில்வே நாட்டின் மிகப்பெரிய போக்குவரத்து நெட்வொர்க் ஆகும். இது உலகில் 4-வது பெரிய போக்குவரத்து நெட்வொர்க்காகவும் உள்ளது. இந்தியா முழுவதும் 1.30 லட்சம் கிலோமீட்டர் ரயில் பாதைகள் உள்ளன. ஒவ்வொரு நாளும், 13,600 ரயில்கள் மூலம் இரண்டு கோடி பயணிகள் பயணிக்கின்றனர். டிக்கெட் விலை குறைவு, வசதியான, பாதுகாப்பான பயணத்தை வழங்குவதால், பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை விரும்புகின்றனர்.
Most Expensive Train
இந்திய ரயில்வேயில் பல்வேறு வகையான ரயில்கள் இருப்பது அனைவருக்கும் தெரிந்தது தான். சதாப்தி, ராஜ்தானி, துரந்தோ மற்றும் வந்தே பாரத் போன்ற ரயில்கள் இயக்கபப்ட்டு வருகின்றன. இந்த வகை ரயில்கள் தவிர, இந்தியாவில் ஒரு சிறப்பு ரயில் உள்ளது. ஆசியாவிலேயே அதிக விலை கொண்ட ரயிலாக இது மாறியுள்ளது.
மஹாராஜா எக்ஸ்பிரஸ்
நம் நாட்டில் மிகவும் விலை உயர்ந்த ரயிலாக மாறியுள்ள இந்த ரயிலின் பெயர் மகாராஜா எக்ஸ்பிரஸ். ஆசியாவிலேயே மிகவும் சொகுசு ரயில் இது தான். இந்த ரயில் ஆடம்பர வசதிகளின் தாயகமாக உள்ளது. இதற்கான கட்டணம் லட்ச ரூபாய். ஒருவகையில் இந்த ரயிலை ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் என்று சொல்லலாம். இந்த ரயிலில் ஏறும் பயணிகளுக்கு உலகத்தரம் வாய்ந்த வசதிகள் கிடைக்கும்.ம்.
Maharaja Express
இந்த ரயில் சேவையை இந்திய ரயில்வே 2010ல் தொடங்கியது. டிக்கெட் வாங்கிய பிறகு எட்டு நாட்கள் பயணம் செய்யலாம். வாரணாசி, ரந்தம்பூர், கஜுராஹோ கோவில் மற்றும் தாஜ்மஹால் போன்ற சிறப்பு இடங்களுக்கு இந்த ரயில் மூலம் பயணம் மேற்கொள்ளலாம்.
ஆடம்பர வசதிகள்
பெயருக்கு ஏற்றார் போலவே இந்த மகாராஜா ரயிலில் ராஜ வசதிகள் இருக்கும். அரச நாற்காலிகள் மற்றும் ஆடம்பரமான படுக்கைகள் உள்ளிட்ட பல வசதிகள் இந்த ரயில் உள்ளன. இது நாட்டில் நான்கு வெவ்வேறு வழித்தடங்களில் பயணிக்கிறது. நாம் பயணிக்க விரும்பும் பாதைக்கு டிக்கெட் வாங்க வேண்டும். இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் IRCTC இதை இயக்குகிறது.
Maharaja Express
குளிப்பதற்கு அற்புதமான குளியலறைகள், மினி பார், நேரடி தொலைக்காட்சி, படுக்கையறைகள் மற்றும் பெரிய கண்ணாடிகள் கொண்ட ஜன்னல்கள் உள்ளன. மேலும் இந்த சொகுசு ரயிலில் சூட், ஜூனியர் சூட், டீலக்ஸ் கேபின், டீலக்ஸ் மற்றும் பிரசிடென்ஷியல் சூட் போன்ற பிரிவுகள் உள்ளன.
Maharaja Express Price
உங்களுக்கு தேவையான விருப்பத்தை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம். இவ்வளவு சொகுசு வசதிகள் இருக்கும் இந்த மகாராஜா ரயிலின் கட்டணங்கள் சற்று அதிகம் தான். ரூ. 4 லட்சம், ரூ. 7 லட்சம், ரூ. 5 லட்சம், மற்றும் ரூ. 12 லட்சம் ஆகிய விலைகளில் கட்டணம் இருக்கும். எனினும் இந்த கட்டணங்கள் பாதையைப் பொறுத்து மாறுபடும். நாம் தேர்ந்தெடுக்கும் தொகுப்பைப் பொறுத்து இது மாறுபடும்.
Maharaja Express Price
மகாராஜா எக்ஸ்பிரஸின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யுங்கள். அதிக செலவில் பயணம் செய்யும் வசதி உள்ளவர்கள் இந்த ரயிலின் சிறப்பான அனுபவத்தை பெற முடியு