தோனி vs ரோகித் சர்மா! ஐபிஎல் 'டான்' யார்? கேப்டன்சியில் அதிக வெற்றிகளை குவித்தது யார்?
ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை, சென்னை அணிகள் மார்ச் 23ம் தேதி மோத உள்ள நிலையில், கேப்டன்சியில் சிறந்து விளங்கியது ரோகித் சர்மாவா? அல்லது தோனியா? என்பது குறித்து பார்க்கலாம்.

IPL 2025: Dhoni vs Rohit Sharma: கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஐபிஎல் தொடர் நாளை மறுநாள் (மார்ச் 22) முதல் தொடங்குகிறது. இதில் 23ம் தேதி சென்னையில் நடக்கும் சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் போட்டிகள் மீது பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஐபிஎல் பல புகழ்பெற்ற வீரர்களைக் கண்டிருக்கிறது. ஆனால் ஒரு வீரர்கள் மட்டுமே ஐபிஎல்லில் நீண்ட தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர். அந்த வகையில் சிஎஸ்கேவின் தோனி, மும்பை இந்தியன்ஸ் ரோகித் சர்மா ஆகியோர் ஐபிஎல்லில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய வீரர்களாக உள்ளனர்.
Dhoni vs Rohit Sharma
மகேந்திர சிங் தோனி மற்றும் ரோஹித் சர்மா என இருவரும் ஐபிஎல் வரலாற்றில் மிகவும் பிரபலமான நபர்களில் இருவர். இவர்கள் இருவரும் தங்களின் தலைமை, போட்டியை வென்ற செயல்திறன் மற்றும் புத்திசாலித்தனம் மூலம் தங்கள் அணிக்காக பலமுறை கோப்பையை வென்று கொடுத்துள்ளனர். 43 வயதான தோனி மற்றும் 37 வயதான ரோஹித் இருவரும் தங்கள் கேப்டன் பதவியில் இருந்து விலகிவிட்டனர், ஆனாலும் கேப்டன் பதவியில் ஒரு அழியாத முத்திரையை விட்டுச் சென்றுள்ளனர்.
'கேப்டன் கூல்' என்று போற்றப்படும் தோனி, சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியை 2010, 2011, 2018 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் நான்கு ஐபிஎல் பட்டங்களை வெல்ல உதவினார். தனிப்பட்ட சாதனையிலும் அவர் ஜொலித்துள்ளார். 5,000 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். இதில் 24 அரைசதங்கள் அடங்கும். அதிகபட்ச ஸ்கோர் 84 ஆகும்.
அனுஷ்கா சர்மா முதல் அக்ஷய் குமார் வரை: IPL தொடக்க விழாவில் கலக்கிய பாலிவுட் பிரபலங்கள்!
IPL 2025
ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான கேப்டனான ரோஹித் சர்மா, மும்பை இந்தியன்ஸ் (MI) அணியை 2013, 2015, 2017, 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் ஐந்து கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார். மேலும் 2009 ஆம் ஆண்டில் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காகவும் கேப்டனாக இருந்து கோப்பையை வென்றார். சிறந்த பேட்ஸ்மேனான ரோஹித், ஒரு சதம் மற்றும் 41 அரைசதங்கள் உட்பட 6,000 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார், அதிகபட்சமாக 109 ரன்கள் எடுத்துள்ளார். அவரது ஃபீல்டிங்கும் சிறப்பாக இருந்துள்ளது. 98 கேட்சுகளுடன், பந்துவீச்சின் மூலம் 15 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
கேப்டன்சி சாதனைகளைப் பொறுத்தவரை, இந்த இரண்டு ஜாம்பவான்களும் அழியாத தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர். தோனி 221 ஐபிஎல் போட்டிகளில் தலைமை தாங்கி 129 வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார். வெற்றி சதவீதம் 58.90% ஆகும். தோனியின் புத்திசாலித்தனமான கூலான தலைமைப்பண்பு அவருக்கு வெற்றிகளை அறுவடை செய்துள்ளது. மறுபுறம், ரோஹித் 152 போட்டிகளில் மும்பை அணிக்கு தலைமை தாங்கினார், 55.92% என்ற வெற்றி சதவீதத்துடன் 83 வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளர்.
CSK-MI
ரோகித் சர்மா அதிக ஐபிஎல் பட்டங்களை வென்றிருந்தாலும், தோனி அதிக வெற்றி சதவீதத்துடன் அவரை விட ஒருபடி மேலே இருக்கிறார். ஆனால் இருவருமே தங்களின் ஆக்ரோஷமான அதிரடி பாணியால் அணிக்கு பலமுறை வெற்றியைத் தேடிக் கொடுத்துள்ளனர். மும்பை மற்றும் சென்னை அணிகளின் போட்டியை பொறுத்தவரை மும்பை அணியே அதிகம் ஆதிக்கம் செய்துள்ளது. குறிப்பாக பிளே ஆப் போட்டிகளில் மும்பை அணி சிறப்பாக செயல்பட்டுள்ளது.
6ஆவது முறையாக டிராபி வெல்லுமா மும்பை இந்தியன்ஸ்? பலம், பலவீனம் என்ன? முக்கிய வீரர்கள் யார் யார்?