WPL 2025: MI vs DC: கடைசி வரை திக் திக் திக்; மும்பையை போராடி வீழ்த்திய டெல்லி!
மகளிர் ஐபிஎல் இரண்டாவது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை 2 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

MI vs DC: கடைசி வரை திக் திக் திக்; மும்பையை போராடி வீழ்த்திய டெல்லி!
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்யத் தேர்ந்தெடுத்த மும்பை இந்தியன்ஸ் அணி 19.1 ஓவர்களில் 164 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நாட் செவர் பிரண்ட் (80) ஆட்டமிழக்காமல் அரைசதம் அடித்தார். கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரும் 22 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து, டி20 கிரிக்கெட்டில் 8000 ரன்களை நிறைவு செய்தார். இந்த ஜோடி மூன்றாவது விக்கெட்டுக்கு 40 பந்துகளில் 73 ரன்கள் சேர்த்தது. தொடக்க ஆட்டக்காரர்களான ஹேலி மேத்யூஸ் (0) மற்றும் யாஸ்டிகா பாட்டியா (11) இருவரையும் பாண்டே பெவிலியனுக்கு அனுப்பினார்.

மும்பை இந்தியன்ஸ்-டெல்லி கேப்பிடல்ஸ் மேட்ச்
பவர்பிளேயில் ஆறு ஓவர்கள் முடிவில், மும்பை அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு 42 ரன்கள் எடுத்திருந்தது. எல்லிஸ் கேப்ஸி ஒரு ஓவரில் 19 ரன்கள் கொடுத்தார். ராதா யாதவ் வீசிய 8வது ஓவரில், சீவர் பிரண்ட் மற்றும் ஹர்மன்ப்ரீத் ஆகியோர் மூன்று பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உட்பட 18 ரன்கள் எடுத்தனர். பத்து ஓவர்கள் முடிவில் மும்பை அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு 87 ரன்கள் எடுத்திருந்த நிலையில், கடைசி நேரத்தில் விக்கெட்டுகளை கொத்து கொத்தாக இழந்தது.
சாம்பியன்ஸ் டிராபி: சிக்ஸர் மழை பொழிந்து அதிரடியில் கலக்கப்போகும் 7 வீரர்கள்!
டெல்லி கேப்பிடல்ஸ் வெற்றி
மற்ற வீராங்கனைகளிடம் இருந்து எந்த ஆதரவும் கிடைக்கவில்லை. வேகப்பந்து வீச்சாளர் ஷிகா பாண்டே 14 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளையும், மின்னு மணி ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். மீதமுள்ள பந்து வீச்சாளர்கள் நிறைய ரன்களை விட்டுக்கொடுத்தனர். பின்பு சவாலான இலக்கை நோக்கி டெல்லி அணி களமிறங்கியது.டெல்லி கேபிடல்ஸ் அணியின் ஷஃபாலி வர்மா 18 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து டெல்லி அணிக்கு ஆக்ரோஷமான தொடக்கத்தை அளித்தார்.
60 ரன்கள் வரை டெல்லி ஒரு விக்கெட்டைக் கூட இழக்கவில்லை, ஆனால் அடுத்த 16 ரன்களுக்குள் நான்கு விக்கெட்டுகளை இழந்தது. இதன் பிறகு மும்பை இந்தியன்ஸ் அணி மீண்டும் போட்டிக்குள் நுழைந்தது. எலிஸ் கேப்சி (16), அன்னாபெல் சதர்லேண்ட் (13) மற்றும் சாரா பிரைஸ் (21) ஆகியோர் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்யத் தவறிவிட்டனர்.
மகளிர் ஐபிஎல் 2025
ஆனால் நிக்கி பிரசாத் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். கடைசி 12 பந்துகளில் டெல்லி அணிக்கு 21 ரன்கள் தேவைப்பட்டது, கைவசம் நான்கு விக்கெட்டுகள் மட்டுமே இருந்தன. 9வது நம்பர் பேட்ஸ்மேன் ராதா யாதவ் ஒரு சிக்ஸர் அடித்தார், நிக்கி ஒரு பவுண்டரி அடித்தார், ஆனால் ஐந்தாவது பந்தில் அவுட்டானார்.
அருந்ததி யாதவ் கடைசி பந்தில் இரண்டு ரன்கள் எடுத்து அணிக்கு வெற்றியைப் பெற்றுத் தந்தார். இதனால் டெல்லி அணி இந்த அட்டத்தில் 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 33 பந்தில் 35 ரன் அடித்த நிக்கி பிரசாத் ஆட்டநாயகி விருது வென்றார்.
WPL 2025: ருத்ரதாண்டவம் ஆடிய ரிச்சா கோஷ்; ஆர்சிபி த்ரில் வெற்றி; மிரண்டு போன குஜராத் ஜெயண்ட்ஸ்!