MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Women's T20 World Cup: சரித்திர சாதனை படைத்த தீப்தி சர்மா.. 350 விக்கெட்டுகள்.. யாரும் செய்யாத சாதனை!

Women's T20 World Cup: சரித்திர சாதனை படைத்த தீப்தி சர்மா.. 350 விக்கெட்டுகள்.. யாரும் செய்யாத சாதனை!

Women's T20 World Cup: மகளிர் டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக 5 விக்கெட் வீழ்த்திய தீப்தி சர்மா புதிய வரலாற்று சாதனையை படைத்துள்ளார். 350 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வீராங்கனை என்ற பெருமை பெற்றுள்ளார். 

2 Min read
Author : Rayar A
Published : Jun 15 2026, 03:06 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
12
இந்திய அணி வெற்றி
Image Credit : X/BCCIWomen

இந்திய அணி வெற்றி

மகளிர் டி20 உலகக்கோப்பையில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானை 64 ரன்கள் வித்தியாசத்தில் துவம்சம் செய்து அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் குவித்தது. ஸ்மிருதி மந்தனா வெறும் 44 பந்துகளில் 9 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 68 ரன்கள் விளாசினார். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 36 ரன்கள் எடுத்தார். ரிச்சா கோஷ் 17 பந்துகளில் 5 பவுண்டரி, 1 சிக்சருடன் 34 ரன்கள் நொறுக்கினார். பாகிஸ்தான் தரப்பில் சாடியா இக்பால், பாத்திமா சனா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

தீப்தி சர்மா சூப்பர் பவுலிங்

பின்பு 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பாகிஸ்தான் அணி இந்தியா பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 17 ஓவர்களில் 106 ரன்களுக்கு சுருண்டு படுதோல்வி அடைந்தது. இந்திய அணி தரப்பில் தீப்தி சர்மா தனது மேஜிக் ஸ்பின் பவுலிங்கால் 4 ஓவர்களில் 10 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்களை சாய்த்து சாதனை படைத்தார். ஸ்ரீ சரணி 4 ஓவரில் 21 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
22
முதல் பெண் ஸ்பின்னர் என்ற சாதனை
Image Credit : Getty

முதல் பெண் ஸ்பின்னர் என்ற சாதனை

இந்த போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், சர்வதேச கிரிக்கெட்டில் 350 விக்கெட்டுகளை கடந்த முதல் பெண் சுழற்பந்து வீச்சாளர் என்ற உலக சாதனையை தீப்தி படைத்தார். தீப்தி ச‌ர்மா இதுவரை இந்தியாவுக்காக 275 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் 145 டி20, 124 ஒருநாள் மற்றும் 6 டெஸ்ட் போட்டிகள் அடங்கும். டி20 போட்டிகளில் 166 விக்கெட்டுகளுடன், அதிக விக்கெட் வீழ்த்தியவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இது 4வது உலகக்கோப்பை

கடந்த ஆண்டு நடந்த ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை 2025 தொடரில் 22 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன் இறுதிப் போட்டியில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி, 'தொடர் நாயகி' விருதையும் வென்றார். பந்துவீச்சில் மட்டுமல்ல, ஃபீல்டிங்கிலும் தீப்தி ச‌ர்மா தனது 'கோல்டன் ஆர்ம்' மூலம் அசத்தினார். ஒரு முக்கிய பாகிஸ்தான் பேட்டரை ரன் அவுட் செய்து ஆட்டத்தின் போக்கை மாற்றினார். இது தீப்திக்கு நான்காவது டி20 உலகக் கோப்பை. இந்த முறை கோப்பையை வெல்ல இந்திய அணி தீவிரமாக உள்ளது.

Related Articles

Related image1
Women's T20 World Cup: மகளிர் டி20 உலகக்கோப்பையில் பரிசு மழை.. அட! தோற்றாலும் இத்தனை கோடிகள் கிடைக்குமா?
Related image2
Women's T20 World Cup: பாகிஸ்தானை அசால்ட்டாக போட்டுத் தள்ளிய இந்தியா! தீப்தி சர்மா, ஸ்மிருதி மந்தனா கலக்கல்!

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
டி20 உலகக் கோப்பை
விளையாட்டு

Latest Videos
Recommended Stories
Recommended image1
IND vs ENG 1st T20: இந்திய அணியில் 4 வீரர்கள் அதிரடி நீக்கம்! சஞ்சு சாம்சனுமா? பிளேயிங் லெவன்!
Recommended image2
Ronaldo : 'என்னை பார்ப்பது போல் இருக்கிறது!' - மெஸ்ஸி, எம்பாப்பேவை புகழ்ந்து தள்ளிய ரொனால்டோ
Recommended image3
IRE vs IND T20: இந்தியாவின் மோசமான தோல்விக்கு 5 பெரும் காரணங்கள்! இந்த' 2 வீரர்கள் படுமோசம்!
Related Stories
Recommended image1
Women's T20 World Cup: மகளிர் டி20 உலகக்கோப்பையில் பரிசு மழை.. அட! தோற்றாலும் இத்தனை கோடிகள் கிடைக்குமா?
Recommended image2
Women's T20 World Cup: பாகிஸ்தானை அசால்ட்டாக போட்டுத் தள்ளிய இந்தியா! தீப்தி சர்மா, ஸ்மிருதி மந்தனா கலக்கல்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved