Champions Trophy: சாம்பியன்ஸ் டிராபி அட்டவணை: ஐசிசியை விமர்சித்த டேவிட் மில்லர்!
சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதியில் தென்னாப்பிரிக்கா அணி நியூசிலாந்திடம் தோற்ற பிறகு, சாம்பியன்ஸ் டிராபி 2025 அட்டவணையை டேவிட் மில்லர் விமர்சித்துள்ளார்.

சாம்பியன்ஸ் டிராபி 2025 அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்திடம் தோல்வியை சந்தித்த பிறகு டேவிட் மில்லர் அட்டவணை தயாரித்த ஐசிசியை விமர்சித்தார். லாகூரில் நடந்த அரையிறுதியில் தென்னாப்பிரிக்கா அணி படுதோல்வி அடைந்தது.
363 ரன்கள் இலக்கை துரத்திய தென்னாப்பிரிக்கா அணி டேவிட் மில்லர் சதம் அடித்த போதிலும் தோல்வியடைந்தது. கேப்டன் டெம்பா பவுமா (56), ராஸ்ஸி வான் டெர் டஸ்ஸன் (69) ரன் குவித்தனர். அதிரடி வீரர் டேவிட் மில்லர் ஒருபக்கம் போராடினாலும் அவருக்கு போதிய ஆதரவு கிடைக்கவில்லை.
சாம்பியன்ஸ் டிராபி 2025
முன்னதாக பாகிஸ்தானில் இருந்து துபாய் வந்த தென்னாப்பிரிக்கா அணி இந்தியா அரையிறுதி போட்டி முடிந்தவுடன் உடனடியாக லாகூர் சென்றது. ஐசிசியால் தென்னாப்பிரிக்கா அணி அலைச்சலை சந்தித்தது குறித்து விவாதிக்கப்பட்டது.
சாம்பியன்ஸ் டிராபி 2025 அரையிறுதி ஆட்ட அட்டவணை குறித்து டேவிட் மில்லர் அதிருப்தி தெரிவித்தார். துபாயிலிருந்து லாகூருக்கு சென்றது சரியில்லை என்றார்.
"இது ஒரு மணி நேரம் 40 நிமிட விமானப் பயணம் தான், ஆனால் நாங்கள் அதைச் செய்ய வேண்டியிருந்தது சரியில்லை" என்று 35 வயதான டேவிட் மில்லர் கூறினார்.
அரையிறுதியில் தென்னாப்பிரிக்கா தோல்வி
"இது அதிகாலை, விளையாட்டுக்குப் பிறகு நாங்கள் பறக்க வேண்டியிருந்தது. பின்னர் நாங்கள் மாலை 4:00 மணிக்கு துபாய் சென்றோம். காலை 7.30 மணிக்கு நாங்கள் திரும்பி வர வேண்டியிருந்தது. இது நன்றாக இல்லை. நாங்கள் ஐந்து மணி நேரம் பறக்கவில்லை, எங்களுக்கு போதுமான நேரம் இருந்தது" என்றார்.
பயண நேரம் அதிகம் இல்லை என்றாலும் தென்னாப்பிரிக்க வீரர்கள் பாகிஸ்தானில் இருந்து துபாய்க்கும், பின்பு துபாயிலிருந்து பாகிஸ்தானுக்கும் பறக்க வேண்டியது இருந்ததால் போதிய பயிற்சி மேற்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.
சோனமுத்தா இதுவும் போச்சா! பாகிஸ்தானை வச்சி செய்யும் நெட்டிசன்கள்! என்ன விஷயம்?
பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்த இந்திய அணி
சாம்பியன்ஸ் டிராபி 2025 பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெறுகிறது. பாதுகாப்பு காரணங்களால் இந்திய அணியை பாகிஸ்தானுக்கு அனுப்ப பிசிசிஐ மறுத்துவிட்டது. இதனால் இந்திய அணியின் ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடக்கிறது.
இந்திய அணி அனைத்து போட்டிகளையும் ஒரே பிட்ச்சில் ஆடுவதால் அவர்களுக்கு இந்த தொடர் முழுக்க முழுக்க சாதகமாக இருக்கிறது என்று ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் உள்பட பல்வேறு முன்னாள், இந்நாள் வீரர்கள் கருத்து கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
சாம்பியன்ஸ் டிராபி பைனல்
சாம்பியன்ஸ் டிராபி பைனலில் இந்தியாவும், நியூசிலாந்தும் வரும் 9ம்தேதி பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்திய அணி லீக்கில் வங்கதேசம், பாகிஸ்தான், நியூசிலாந்தை தோற்கடித்தது. அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இந்த தொடரில் தோல்வியை காணாத ஒரே அணி இந்தியா மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
IND vs NZ champions Trophy Final: துபாய் பிட்ச் எப்படி? இந்திய அணி பிளேயிங் லெவன் இதுதான்!
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.