முதல் போட்டியிலேயே தோனியின் மனதை கவர்ந்த அதிரடி வீரர்! யார் இந்த ஷேக் ரஷீத்?
சிஎஸ்கே வீரர் ஷேக் ரஷீத் தனது முதல் ஐபிஎல் போட்டியிலேயே அதிரடியாக விளையாடி தோனி உள்பட அனைவரது மனதையும் கவர்ந்தார். இவர் யார்? என்பது குறித்து பார்க்கலாம்.

Who is Sheikh Rashid?: ஐபிஎல் கிரிக்கெடில் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியில் அறிமுகமான தெலுங்கு இளம் வீரர் ஷேக் ரஷீத் அற்புதமான ஆட்டத்தால் கவர்ந்தார். லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணிக்கு எதிரான போட்டியில் முதல் முறையாக ஐபிஎல்-இல் களமிறங்கி 19 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தார். அவரது இன்னிங்ஸ் சிறியதாக இருந்தாலும் அற்புதமான ஷாட்களால் அசத்தினார்.

IPL 2025, Cricket
ஷேக் ரஷீத் ஆடிய ஷாட்களைப் பார்த்து அவரது ஆட்டத்தில் விராட் கோலியின் சாயல் இருப்பதாக வர்ணனையாளர்கள் கூறியது அவரது ஆட்டம் எப்படி இருந்தது என்பதை காட்டுகிறது. தனது இன்னிங்ஸில் 6 பவுண்டரிகளை அடித்து 142.11 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடினார். தொடர் தோல்விகளால் தவித்த தோனி அணிக்கு நம்பிக்கையளித்து தனது முதல் போட்டியிலேயே ரசிகர்களை கவர்ந்தார்.
ஷேக் ரஷீத் யார்?
ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூரைச் சேர்ந்த ஷேக் ரஷீத், ஹைதராபாத்தில் உள்ள ஸ்போர்ட்டிவ் கிரிக்கெட் கிளப் மூலம் தனது கிரிக்கெட் பயணத்தைத் தொடங்கினார். உள்ளூர் கிரிக்கெட்டில் ஆந்திரப் பிரதேசம் சார்பில் சிறப்பாக விளையாடிய இந்த இளம் வீரரை சென்னை சூப்பர் கிங்ஸ் 2023-லேயே அணியில் சேர்த்தது. ஆனால், முதல் முறையாக ஐபிஎல் பிளேயிங் 11-இல் விளையாட வாய்ப்பு இப்போது தான் கிடைத்துள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்த தோனி! 43 வயதிலும் தரமான சம்பவம்!

CSK, Sheikh Rashid
ஷேக் ரஷீத் வெற்றிக்கு பின்னால் தந்தையின் தியாகம்
ஷேக் ரஷீத்தை கிரிக்கெட் வீரராக்க வேண்டும் என்ற ஆசையில் அவரது தந்தை ஷேக் பலீஷா தனது தனியார் வங்கி வேலையை விட்டுவிட்டார். சிறந்த பயிற்சி அளிக்க ஒவ்வொரு நாளும் ரஷீத்தை மங்களகிரியிலிருந்து 40 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள நெட் பயிற்சிக்கு அழைத்துச் செல்வார். தந்தையின் தியாகம் இன்று பலன் அளித்துள்ளது. தனது மகனை இந்தியாவின் எதிர்கால சூப்பர் ஸ்டார் ஆகும் பாதையில் கொண்டு வந்துள்ளார்.
அண்டர்-19 உலகக் கோப்பை சாம்பியன் ஷேக் ரஷீத்
2022-இல் யாஷ் துல் தலைமையில் இந்தியா அண்டர்-19 உலகக் கோப்பையை வென்றபோது ஷேக் ரஷீத் துணை கேப்டனாக இருந்தார். அவர் அந்த தொடரில் 4 போட்டிகளில் 201 ரன்கள் எடுத்து அணிக்கு முக்கியமான இன்னிங்ஸ்களை விளையாடினார். அரையிறுதியில் 94 ரன்களும், இறுதிப் போட்டியில் அரைசதமும் அடித்த ஷேக் ரஷீத், இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய வீரராக இருந்தார்.

Who is Sheikh Rashid?
உள்நாட்டு கிரிக்கெட்டில் அதிரடி
உள்நாட்டு கிரிக்கெட்டில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷேக் ரஷீத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் 2025 மெகா ஏலத்தில் ரூ.30 லட்சத்திற்கு வாங்கியது. இப்போது மைதானத்தில் இறங்கி தனது திறமையை நிரூபித்துள்ளார். ஐபிஎல்-இல் அவரது பயணம் இப்போதுதான் தொடங்கியுள்ளது. முதல் போட்டியில் நன்றாக விளையாடிய ஷேக் ரஷீத் எதிர்காலத்தில் இன்னும் பல சிறந்த இன்னிங்ஸ்களை விளையாடுவார் என்று சென்னை அணி நம்புகிறது.
தோனி பாராட்டு
நேற்றைய ஆட்டத்துக்கு பிறகு ஷேக் ரஷித்தை பாராட்டிய தோனி, ''ஒரு பேட்டிங் யூனிட்டாக நாங்கள் சிறப்பாகச் செய்ய முடியும். ரஷீத் இன்று மிகவும் சிறப்பாக பேட்டிங் செய்கிறார். அவர் சில வருடங்களாக எங்களுடன் இருக்கிறார். நாங்கள் முன்னேற்றம் கண்டுள்ளோம், இந்த ஆண்டு அவர் வலை பயிற்சியில் மிகவும் சிறப்பாக பேட்டிங் செய்கிறார். பேட்டிங் வரிசையில் எங்களுக்கு ஒரு மாற்றம் தேவைப்பட்டது. அவர் மிகவும் சிறப்பாக பேட்டிங் செய்தார். ஆனால் இது வெறும் ஆரம்பம்தான். மற்ற பேட்ஸ்மேன்கள் போல் அல்லாமல் உண்மையான ஷாட்களால் ஆதிக்கம் செலுத்தும் திறன் கொண்டவர்'' என்று கூறினார்.
நீண்ட நாட்களுக்கு பிறகு கிடைத்த வெற்றி; துபே, தோனி அதிரடி ஆட்டம்; லக்னோவை வீழ்த்திய சென்னை!