ஐபிஎல் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்த தோனி! 43 வயதிலும் தரமான சம்பவம்!
ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி வரலாற்று சாதனை படைத்துள்ளார். இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.

CSK Captain Dhoni Creates Historic Record: ஐபிஎல் தொடரில் நேற்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 7 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்க்ள் எடுத்தது. கேப்டன் ரிஷப் பண்ட் 49 பந்தில் 4 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 63 ரன்கள் எடுத்தார். மதிஷா பதிரனா, ரவீந்திரா ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

MS Dhoni, IPL
பின்பு விளையாடிய சிஎஸ்கே 19.3 ஓவர்களில் 168 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரச்சின் ரவீந்திரா 22 பந்தில் 5 பவுண்டரியுடன் 37 ரன்கள் எடுத்தார். ஷிவம் துபே 37 பந்தில் 43 ரன் அடித்தார். கடைசி கட்டத்தில் சிஎஸ்கே கேப்டன் மகேந்திர சிங் தோனி 11 பந்தில் 4 பவுண்டரி, 1 சிக்சருடன் 26 ரன்கள் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். மேலும் ஆட்டநாயகன் விருதும் வென்றார்.
மேலும் இந்த போட்டியில் தோனி, யாரும் படைக்காத மிகப்பெரும் சாதனையை படைத்துள்ளார். அதாவது ஐபிஎல் வரலாற்றில் 200 பீல்டிங் டிஸ்மிசல்களை செய்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை அவர் செய்துள்ளார். ஜடேஜா பந்தில் லக்னோ வீரர் ஆயுஷ் பதோனியை ஸ்டெம்பிங் செய்ததன் மூலம் தோனி இந்த சாதனையை தொட்டார்.
பேட்டிங், பவுலிங்கில் கலக்கிய சிஎஸ்கே; சென்னைக்கு திருப்புமுனை; லக்னோ 166 ரன்கள் குவிப்பு

IPL 2025, Cricket
தனது 271வது ஐபிஎல் போட்டியில் விளையாடிய தோனி, இதுவரை 201 டிஸ்மிஸ் செய்துள்ளார், இதில் 155 கேட்சுகள் மற்றும் 46 ஸ்டம்பிங்குகள் அடங்கும். முன்னாள் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் 182 டிஸ்மிஸ் செய்து இரண்டாவது இடத்தில் உள்ளார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஐகான் ஏபி டிவில்லியர்ஸ் 126 டிஸ்மிஸ் செய்து மூன்றாவது இடத்தில் உள்ளார்.
இந்த ஆட்டத்துக்கு பிறகு பேசிய தோனி, ''கடந்த சில ஆட்டங்களாக நாங்கள் நினைத்தபடி ஏதும் செல்லாத நிலையில் ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றிருப்பது நல்லது. இது ஒரு கடினமான ஆட்டம், வெற்றி பெற்ற பக்கத்தில் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது, மேலும் இது எங்களுக்கு உத்வேகத்தைத் தரும் என்று நம்புகிறேன். முந்தைய ஆட்டங்களில் பந்துவீசும்போது முதல் ஆறு ஓவர்களில் நாங்கள் தடுமாறிக் கொண்டிருந்தோம், ஆனால் பின்னர் நடு ஓவர்களில் திரும்பி வந்தோம் ... பேட்டிங் யூனிட்டாகவும் எங்களுக்கு ஒரு வகையான தொடக்கம் கிடைக்கவில்லை ... ஒருவேளை அது சென்னை விக்கெட் காரணமாக இருக்கலாம் ... ஒருவேளை நாங்கள் சிறந்த விக்கெட்டுகளில் சிறப்பாகச் செயல்படுவோம், பேட்டர்களுக்கு அதிக நம்பிக்கையைத் தருவோம்'' என்றார்.

Dhoni, CSK
தொடர்ந்து பேசிய தோனி, ''முதல் ஆறு போட்டிகளில் எங்களுக்கு அதிக பந்துவீச்சாளர்கள் தேவை, முதல் ஆறு போட்டிகளில் இரண்டு ஓவர்கள் வீச ஆஷ் மீது நாங்கள் அதிக அழுத்தம் கொடுத்தோம், எனவே முதல் ஆறு போட்டிகளில் அதிக பந்துவீச்சாளர்களைக் கொண்டுள்ளோம், இது ஒரு சிறந்த தாக்குதல் போல் தெரிகிறது ... நாங்கள் ஒரு பந்துவீச்சு யூனிட்டாக சிறப்பாகச் செயல்பட்டோம்'' என்று தெரிவித்தார்.
மேலும் நேற்றைய போட்டியில் 27 ரன்கள் அடித்து சிறப்பான தொடக்கம் கொடுத்த ஷேக் ரஷித்தை பாராட்டிய தோனி, ''ஒரு பேட்டிங் யூனிட்டாக நாங்கள் சிறப்பாகச் செய்ய முடியும். ரஷீத் இன்று மிகவும் சிறப்பாக பேட்டிங் செய்கிறார். அவர் சில வருடங்களாக எங்களுடன் இருக்கிறார். நாங்கள் முன்னேற்றம் கண்டுள்ளோம், இந்த ஆண்டு அவர் வலை பயிற்சியில் மிகவும் சிறப்பாக பேட்டிங் செய்கிறார். பேட்டிங் வரிசையில் எங்களுக்கு ஒரு மாற்றம் தேவைப்பட்டது. அவர் மிகவும் சிறப்பாக பேட்டிங் செய்தார். ஆனால் இது வெறும் ஆரம்பம்தான். மற்ற பேட்ஸ்மேன்கள் போல் அல்லாமல் உண்மையான ஷாட்களால் ஆதிக்கம் செலுத்தும் திறன் கொண்டவர்'' என்று கூறினார்.
நீண்ட நாட்களுக்கு பிறகு கிடைத்த வெற்றி; துபே, தோனி அதிரடி ஆட்டம்; லக்னோவை வீழ்த்திய சென்னை!