- Home
- Sports
- இந்தியா vs நியூசிலாந்து: அசத்தப்போகும் 6 மேட்ச் வின்னர்கள்! இவங்க குறி வச்சா மிஸ்ஸே ஆகாது!
இந்தியா vs நியூசிலாந்து: அசத்தப்போகும் 6 மேட்ச் வின்னர்கள்! இவங்க குறி வச்சா மிஸ்ஸே ஆகாது!
Champions Trophy 2025 IND vs NZ: உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா, நியூசிலாந்து சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி இன்று நடக்கிறது. இதில் தங்களது சிறப்பான செயல்திறனால் ஆட்டத்தை திருப்பக்கூடிய 6 வீரர்கள் குறித்து பார்க்கலாம்.

Champions Trophy 2025 IND vs NZ: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 இறுதிப் போட்டிக்கு வந்து விட்டது. சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை தீர்மானிக்கும் ஆட்டத்தில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன. துபாய் சர்வதேச மைதானத்தில் இன்று மதியம் 2.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது. இரு அணிகளும் கோப்பையை வெல்ல வரிந்துகட்டும் நிலையில், ஆட்டத்தை திருப்பக்கூடிய 5 மேட்ச் வின்னர்கள் குறித்து பார்க்கலாம்.
மேட் ஹென்றி
நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றி சாம்பியன்ஸ் டிராபி 2025-ல் 10 விக்கெட்டுகளுடன் முதல் இடத்தில் இருக்கிறார். இந்தியாவுடன் நடந்த லீக் போட்டியில் தனது அற்புதமான பந்துவீச்சில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்திய தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் மற்றும் விராட் கோலியின் விக்கெட்டுகளை வீழ்த்தி, இந்தியாவை 30 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழக்கச் செய்தார்.
வேகம், நல்ல சீம் சேர்த்து பந்துவீசும் மேட் ஹென்றி, நியூசிலாந்துக்கு வெற்றியைத் தர முடியாவிட்டாலும், இந்தியா பெரிய ஸ்கோர் செய்யாமல் தடுப்பதில் வல்லவர். இறுதிப் போட்டியில் மேட் ஹென்றி பந்துவீச்சில் அசத்தினால் நியூசிலாந்துக்கு அதிக சாதகமாக அமையும்.
வருண் சக்ரவர்த்தி
சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணியின் மிஸ்டரி ஸ்பின்னர் வருண் சக்ரவர்த்தி அசத்தி வருகிறார். நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 42 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். எதிரணியை மீள முடியாத நிலைக்கு தள்ளினார். இதேபோல் அரையிறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியிலும் முக்கியமான டிராவிஸ் ஹெட் விக்கெட்டை வீழ்த்தி வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.
வருண் சக்ரவர்த்தி தனது பந்துவீச்சில் பல மாறுபாடுகளைக் கொண்டுள்ளார். சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான துபாய் ஆடுகளத்தில் வருண் சக்ரவர்த்தி இந்திய அணியில் இடம் பெற்றால் இறுதிப் போட்டியில் முக்கிய வீரராக மாறலாம்.
IND vs NZ,: சாம்பியன்ஸ் டிராபிக்கு பிறகு ரோஹித் சர்மா, விராட் கோலி ஓய்வா? முக்கிய தகவல்!
ரச்சின் ரவீந்திரா, கேன் வில்லியம்சன்
நியூசிலாந்து அணியின் இளம் வீரர் ரச்சின் ரவீந்திரா, அனுபவ வீரர் கேன் வில்லியம்சன் சாம்பியன்ஸ் டிராபியில் பட்டையை கிளப்பியுள்ளனர். ரச்சின் ரவீந்திரா இந்த தொடரில் 2 சதமும், கேன் வில்லியம்சன் ஒரு சதமும் விளாசியுள்ளனர். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் இடது கை பேட்ஸ்மேன் ரச்சின் ரவீந்திரா, கேன் வில்லியம்சன் ஆகியோர் இணைந்து 164 ரன்கள் சேர்த்து ஆட்டத்தை வெல்லும் பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர்.
இவர்கள் இருவரும் இந்திய சுழற்பந்து வீச்சாளர்களை தைரியமாக எதிர்கொள்ளும் திறனைக் கொண்டுள்ளனர். கேன் வில்லியம்சன் இந்தியாவுடன் நடந்த கடைசி போட்டியில் 81 ரன்கள் எடுத்தார். ரச்சின் ரவீந்திரா பந்துவீச்சாளர்களைத் தைரியமாக எதிர்கொண்டு களத்தில் நிலைத்து நின்றால் பெரிய இன்னிங்ஸ்களை விளையாடுவார்.
எனவே துபாய் ஸ்லோ பிட்ச்களிலும் இவர்கள் இந்தியாவுக்கு வில்லனாக மாற வாய்ப்புள்ளது. கேன் வில்லியம்சன், ரச்சின் ரவீந்திரா பேட்டிங் தங்கள் பந்துவீச்சாளர்களின் வேலையை எளிதாக்கும் என்று நியூசிலாந்து கேப்டன், இடது கை சுழற்பந்து வீச்சாளர் மிட்செல் சாண்ட்னர் கூறியதிலிருந்தே அவர்களின் தாக்கம் எப்படி இருக்கும் என்பதை புரிந்து கொள்ளலாம்.
ரோஹித் சர்மா
இந்த அணியின் கேப்டனும் அதிரடி ஆட்டக்காரருமான ரோஹித் சர்மா சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பெரிய அளவில் சிறப்பாக விளையாடவில்லை. வங்கதேசத்துக்கு எதிராக ஆடிய 41 ரன்களே இந்த தொடரில் அவரது டாப் ஸ்கோராக உள்ளது. இருப்பினும், பாகிஸ்தான், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டு போட்டிகளிலும் குறைந்த ரன்களே எடுத்தாலும் இந்தியாவுக்கு நல்ல தொடக்கம் கிடைக்கச் செய்தார்.
ரோஹித் சர்மா பேட்டிங்கில் தாக்கத்தை ஏற்படுத்தாததால் விமர்சனங்களும் வந்தன. ஆனால் இந்திய அணியை வழிநடத்துவதில் அவரது வியூகம் பாராட்டப்படுகிறது. இதுதான் ரோஹித் சர்மாவின் கடைசி ஓடிஐ போட்டியாகவும் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே இறுதிப் போட்டியில் ரோஹித் சர்மாவிடமிருந்து சுனாமி இன்னிங்ஸை எதிர்பார்க்கலாம்.
IND vs NZ சாம்பியன்ஸ் டிராபி: ஹர்திக் பாண்ட்யா விளையாடவில்லையா? பிளேயிங் லெவன் இதுதான்!
விராட் கோலி
கிரிக்கெட்டின் கிங் விராட் கோலி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கலக்கி வருகிறார். ஒரு சதம் உள்பட 200க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்து அசத்தியுள்ளார். சேஸிங்கில் பதற்றமின்றி ரன்கள் சேகரிக்கும் விராட் கோலி அதிகம் பவுண்டரி அடிக்காமல் அதிக ஒன்றிரண்டு ரன்கள் எடுத்து இந்திய அணியை கரை சேர்த்து வருகிறார். இறுதிப்போட்ட்டியிலும் அவரது ரன் வேட்டை தொடரும் என எதிர்பார்க்கலாம்.