IND vs PAK: அனுபவ வீரர் வெளியே! Mystery ஸ்பின்னர் உள்ளே! இந்தியாவின் பிளேயிங் லெவன் இதோ!
பாகிஸ்தானுக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்திய அணியில் ஒரு அதிரடி மாற்றம் செய்யப்படுகிறது. இந்திய அணியின் பிளேயிங் லெவன் குறித்து பார்க்கலாம்.

IND vs PAK: அனுபவ வீரர் வெளியே! Mystery ஸ்பின்னர் உள்ளே! இந்தபிளேயிங் லெவன் இதோ!
'மினி உலகக்கோப்பை' எனப்படும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இந்த தொடர் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், நேற்று முன்தினம் நடந்த வங்கதேசத்துக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இளம் வீரர் சுப்மன் கில் (129 பந்தில் 101 ரன்) சூப்பர் சதம் அடித்து மேட்ச் வின்னராக ஜொலித்தார். இந்நிலையில், உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா-பாகிஸ்தான் போட்டி நாளை துபாயில் நடைபெற உள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்த பாகிஸ்தானுக்கு இது வாழ்வா? சாவா? ஆட்டமாகும். இந்த போட்டியில் தோல்வி அடைந்தால் தொடரை விட்டு வெளியேற வேண்டியதுதான். அதே வேளையில் இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றால் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்து கொள்ளலாம்.
சாம்பியன்ஸ் டிராபி 2025
பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றம் மட்டும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது இந்திய அணியில் அனுபவ ஸ்பின் பவுலர் குல்தீப் யாதவ்க்கு பதிலாக மிஸ்ட்ரி ஸ்பின் பவுலரான தமிழ்நாட்டை சேர்ந்த வருண் சக்கரவர்த்தி இடம்பெறலாம் என தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்திய அணிக்கு பல்வேறு போட்டிகளில் வெற்றியைத் தேடிக்கொடுத்துள்ள குல்தீப் யாதவ், வங்கதேசத்துக்கு எதிரான முதல் போட்டியில் எதிர்பார்த்த அளவு செயல்படவில்லை. 10 ஓவர்களில் 43 ரன்கள் வீசினாரே தவிர ஒரு விக்கெட்டும் வீழ்த்தவில்லை. அனுபவமில்லாத இளம் வங்கதேச பேட்ஸ்மேன்களும் அவரது பந்தை சுலபமாக கணித்து ரன்களை சேர்த்தனர். இதனால் குல்தீப் யாதவ்வை உட்கார வைத்து விட்டு வருண் சக்கரவர்த்தியை அணியில் எடுக்க அதிக வாய்ப்புள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி: ஆப்கானிஸ்தானை ஊதித்தள்ளிய தென்னாப்பிரிக்கா! அபார வெற்றி!
வருண் சக்கரவர்த்தி
33 வயதான வருண் சக்கரவர்த்தி சமீபகாலமாக இந்தியாவின் மேட்ச் வின்னராக இருந்து வருகிறார். 18 டி20 போட்டிகளில் விளையாடி 33 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள அவர், அண்மையில் நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான 5 டி20 போட்டிகளில் 14 விக்கெட்டுகளை அறுவடை செய்து தொடர் நாயகன் விருது வென்றார். கைகளில் வித்தையை வைத்திருக்கும் வருண் சக்கரவர்த்தியின் பந்தை சமாளிப்பது அவ்வளவு எளிதல்ல.
இந்திய டி20 தொடரில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் குறிப்பாக அந்த அணி வீரர் ஹாரி ப்ரூக் வருண் சக்கரவர்த்தியின் மேஜிஸ் ஸ்பின்னை சமாளிக்க முடியாமல் தடுமாறினார்கள். பாகிஸ்தானை பொறுத்தவரை பாபர் அசாம், முகமது ரிஸ்வான் தவிர ஸ்பின்னர்களை திறமையாக ஆடக்கூடிய பேட்ஸ்மேன்கள் அதிகம் இல்லை. நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் மிட்ச்செல் சாண்ட்னர் சுழற்ப்ந்துவீச்சில் அவர்கள் 3 விக்கெட்டை பறிகொடுத்ததே இதற்கு சரியான உதாரணமாகும்.
இந்தியா-பாகிஸ்தான் போட்டி
துபாய் பிட்ச் ஸ்பின் பவுலர்களுக்கு கைகொடுக்கும் என்பதால் வருண் சக்கரவர்த்தியின் தாக்கம் அங்கு அதிகமாக இருக்கும். அவரது பந்தில் ஸ்விப் ஷாட் மற்றும் ரிவர்ஸ் ஸ்விப் அடிப்பது சுலபம் இல்லை என்பதால் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களை திணறடிக்க வருண் சரியான தேர்வாக இருபபார். வருணை தவிர இந்திய அணியில் வேறு ஏதும் மாற்றம் இருக்காது. ஹர்சித் ராணா வங்கதேசத்துக்கு எதிராக ஓரளவு சிறப்பாக பந்துவீசியதால் அவரது இடத்துக்கு ஆபத்தில்லை.
முதல் போட்டியை போலவே 3 ஸ்பின்னர்களுடன் இந்திய அணி அட்டாக் செய்ய உள்ளது. பேட்டிங் வரிசையை பொறுத்தவரை கே.எல்.ராகுல் ஸ்ரேயாஸ் ஐயருக்கு அடுத்த இடத்தில் களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இது போட்டியின் சூழ்நிலையை பொறுத்து மாறுபடும்.
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின் இந்தியாவின் உத்தேச பிளேயிங் லெவன்: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், வருண் சகரவர்த்தி, முகமது. ஷமி மற்றும் ஹர்சித் ராணா.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.