இந்திய அணியின் ஜெர்சியில் பாகிஸ்தான் பெயர் அச்சிட பிசிசிஐ மறுப்பு; கொந்தளிக்கும் பாகிஸ்தானியர்கள்!
இந்திய அணியின் ஜெர்சியில் பாகிஸ்தான் பெயர் அச்சிட பிசிசிஐ மறுப்பு தெரிவித்துள்ளது. இதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
Champions Trophy 2025
சாம்பியன்ஸ் டிராபி தொடர்
'மினி உலகக்கோப்பை' என்றழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப்ரவரி மாதம் 19ம் தேதி முதல் மார்ச் மாதம் 9ம் தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற உள்ளது. முதலில் இந்த போட்டிகள் பாகிஸ்தானில் தான் நடைபெற இருந்தது. பாகிஸ்தானுடன் அனைத்து உறவுகளையும் உறவை துண்டித்து இருப்பதால் இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்தது.
இதனால் இந்தியா மோதும் போட்டிகள் அனைத்தும் துபாயில் நடைபெறும் என ஐசிசி அறிவித்தது. உலகமே ஆவலுடன் எதிர்நோக்கும் இந்தியா பாகிஸ்தான் போட்டி பிப்ரவரி 23ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியின் ஜெர்சியில் பாகிஸ்தான் பெயர் அச்சிட பிசிசிஐ மறுப்பு தெரிவித்துள்ளது. சாம்பியன்ஸ் டிராபிக்கான அனைத்து அணிகளின் ஜெர்சியிலும் எந்த நாடு போட்டியை நடத்துகிறதோ அந்த அணியின் பெயர் லோகோவுடன் இணைத்து அச்சிடப்படும்.
Indian Cricket Team
பாகிஸ்தான் பெயர் அச்சிட மறுப்பு
இப்போது சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் நடத்துவதால் அந்த அணியின் பெயர் அனைத்து நாடுகளிலும் ஜெர்சியிலும் இடம்பெறும். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பிசிசிஐ, இந்திய அணியின் ஜெர்சியில் பாகிஸ்தான் பெயர் இடம்பெறக்கூடாது என திட்டவட்டமாக தெரிவித்து விட்டதாகவும், பாகிஸ்தான் பெயர் இல்லாமல் ஜெர்சி அடிக்கும்படி வலியுறுத்தி உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. பிசிசிஐயின் இந்த நிலைப்பாட்டுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பிசிபியின் மூத்த அதிகாரி ஒருவர், கூறுகையில், ''பிசிசிஐ கிரிக்கெட்டில் அரசியலைக் கொண்டுவருகிறது. இது விளையாட்டுக்கு நல்லதல்ல. இந்திய அணியினர் ஏற்கெனவே பாகிஸ்தானுக்கு பயணம் செய்ய மறுத்துவிட்டனர். சாம்பியன்ஸ் டிராபி தொடக்க விழாவிற்கு இந்திய கேப்டன் ரோகித் சர்மாவை அனுப்ப விரும்பவில்லை. இப்போது அவர்கள் தங்கள் ஜெர்சியில் பாகிஸ்தான் பெயரை அச்சிட விரும்பாததது தவறான முடிவாகும்'' என்றார்.
12 ஆண்டுகளுக்கு பிறகு ரஞ்சி டிராபியில் விளையாடும் விராட் கோலி; எந்த டீம் தெரியுமா?
Indian Team Jersey
பாகிஸ்தான் பெயர் அச்சிடப்படுவது ஏன்?
இந்த விஷயத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசியிடம் கொண்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி போன்ற பெரிய தொடர்களை எந்த நாடு நடத்துகிறதோ அந்த நாட்டின் பெயர் அனைத்து அணிகளின் ஜெர்சியிலும் அச்சடிக்கப்படுவது வழக்கமான ஒன்றாகும். கடந்த 2023ம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பையை இந்தியா நடத்தியபோது இந்திய அணியின் பெயர் பாகிஸ்தான் ஜெர்சியில் இடம்பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனால் விளையாட்டில் அரசியலை கலக்கக் கூடாது என்று பாகிஸ்தானை சேர்ந்த நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே வேளையில் இந்திய நெட்டிசன்கள் ஒரு சிலர் பிசிசிஐ செய்தது சரி என்றும், மற்றொரு சிலர் பிசிசிஐ செய்வது தவறு என்றும் சமூகவலைத்தளங்களில் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
India-Pakistan Match
இந்தியா-பாகிஸ்தான் மோதல்
பிப்ரவரி 19ம் தேதி தொடங்கும் சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. இந்த 8 அணிகளும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
குரூப் ஏ பிரிவில் இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளும், குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம்பெற்றுள்ளன. இந்த தொடர் தொடங்கும் பிப்ரவரி 19ம் தேதி நியூசிலாந்தும், பாகிஸ்தானும் மோதுகின்றன. இந்தியா பாகிஸ்தான் போட்டி பிப்ரவரி 23ம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியா-இங்கிலாந்து டி20 தொடர் நாளை தொடக்கம்; போட்டிகள் தொடங்கும் நேரம்? எந்த டிவியில் பார்க்கலாம்?