MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • 12 ஆண்டுகளுக்கு பிறகு ரஞ்சி டிராபியில் விளையாடும் விராட் கோலி; எந்த டீம் தெரியுமா?

12 ஆண்டுகளுக்கு பிறகு ரஞ்சி டிராபியில் விளையாடும் விராட் கோலி; எந்த டீம் தெரியுமா?

விராட் கோலி 12 ஆண்டுகளுக்கு பிறகு ரஞ்சி டிராபி கிரிக்கெட்டில் விளையாட இருக்கிறார். பிசிசிஐயின் அழுத்தத்துக்கு பணிந்து அவர் இந்த முடிவெடுத்துள்ளார்.  

2 Min read
Author : Rayar A
Published : Jan 21 2025, 12:14 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Ranji Trophy Virat Kohli

Ranji Trophy Virat Kohli

ரஞ்சி டிராபி கிரிக்கெட் 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் படுதோல்வி அடைந்ததால் இந்திய அணி மீது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக பேட்டிங்கில் சொதப்பிய விராட் கோலி, பேட்டிங் மற்றும் கேப்டன்சியில் சொதப்பிய ரோகித் சர்மா மீது ரசிகர்கள், முன்னாள் வீரர்கள் பாயந்தனர். இந்தியாவில் ரஞ்சி டிராபி உள்ளிட்ட பல்வேறு உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகின்றன.

முன்பெல்லாம் இந்திய வீரர்கள் பெரிய நாடுகளுக்கு எதிராக டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு முன்பாக உள்ளூர் போட்டிகளில் விளையாடுவார்கள். இது அவர்களுக்கு பெரிய போட்டிகளை எதிர்கொள்ள உதவியாக இருக்கும். ஆனால் இப்போது இந்திய அணி வீரர்கள் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடுவது கிடையாது.

இதனால் விராட் கோலி, ரோகித் சர்மா உள்ளிட்ட இந்திய அணி வீரர்கள் அனைவரும் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும். அப்படி விளையாடாத வீரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தெரிவித்தனர். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Ranji Trophy Rohit Sharma

Ranji Trophy Rohit Sharma

ரோகித் சர்மா 

இதனைத் தொடர்ந்து இளம் வீரர்கள் மட்டுமின்றி இந்திய அணியின் மூத்த வீரர்கள் அனைவரும் ரஞ்சி டிராபி உள்ளிட்ட உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என பிசிசிஐ உத்தரவிட்டது. இதனால் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் ரஞ்சி கிரிக்கெட்டில் விளையாட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். ரோகித் சர்மா  ரஞ்சி டிராபியில் மும்பை அணிக்காக விளையாட இருக்கிறார் என அறிவிக்கப்பட்டது. 

ரஞ்சி டிராபி தொடரில் மும்பை அணி தனது தொடக்க ஆட்டத்தை ஜம்மு காஷ்மீர் அணிக்கு எதிராக விளையாட உள்ளது. இந்த போட்டியில் ரோகித் சர்மா களம் காண்கிறார். அஜிங்க்யா ரஹானே தலைமையில் மும்பை அணி விளையாட உள்ளது. இதேபோல் விராட் கோலியும் ரஞ்சி டிராபியில் டெல்லி அணிக்காக விளையாடுவார் என தகவல்கள் வெளியாயின.

ரஞ்சி டிராபியில் களமிறங்கும் ரோகித் சர்மா; எந்த டீம் தெரியுமா? விராட் கோலி விளையாடுகிறாரா?

34
Virat Kohli Delhi Team

Virat Kohli Delhi Team

விராட் கோலி டெல்லி அணி

ஆனால் அவர் திடீரென கழுத்து வலியால் அவதிப்படுவதாகவும், இதற்காக வலி நிவாரண ஊசி போட்டுக் கொண்டதாகவும் சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியாயின. இதனால் அவர் ரஞ்சி டிராபியில் களம் காண்பாரா? என சந்தேகம் நிலவி வந்தது. இந்நிலையில், விராட் கோலி ரஞ்சி டிராபியில் விளையாட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

44
Virat Kohli-Rohit Sharma

Virat Kohli-Rohit Sharma

போட்டி எப்போது நடக்கிறது?

விராட் கோலி ரஞ்சி டிராபியில் டெல்லி அணிக்காக விளையாட இருக்கிறார். ஜனவரி 30ம் தேதி டெல்லியில் நடைபெறவிருக்கும் ரயில்வேஸ் அணிக்கு எதிரான போட்டியில் கோலி களம் காண்கிறார். முன்னதாக, ஜனவரி 23ம் தேதி சவுராஷ்டிராவுக்கு எதிரான ரஞ்சி டிராபி போட்டியில் அவர் களம் காண்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கழுத்து வலி காரணமாக கோலி அந்த போட்டியில் விளையாடவில்லை.

கடைசியாக கடந்த 2012ம் ஆண்டு விராட் கோலி ரஞ்சி டிராபியில் விளையாடி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியா-இங்கிலாந்து டி20 தொடர் நாளை தொடக்கம்; போட்டிகள் தொடங்கும் நேரம்? எந்த டிவியில் பார்க்கலாம்?

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ரோகித் சர்மா
விராட் கோலி

Latest Videos
Recommended Stories
Recommended image1
Women's T20 World Cup: ஆஸ்திரேலியாவிடம் படுதோல்வி அடைந்து வெளியேறிய இந்தியா! ரசிகர்கள் ஷாக்!
Recommended image2
IND vs IRE 2nd T20: இந்தியாவுக்கு மரண அடி கொடுத்த அயர்லாந்து! டி20 தொடரை வென்று சரித்திர சாதனை!
Recommended image3
Ben Stokes: கிரிக்கெட்டுக்கு குட்பை சொன்ன மாவீரன்! ஓய்வை அறிவித்த பென் ஸ்டோக்ஸ்! உருக்கமான பேச்சு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved