ஒரே ஒரு போட்டி! பல சாதனைகளை தகர்த்தெறிந்த அபிஷேக் சர்மா! முழு விவரம்!
அபிஷேக் சர்மா பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அதிவேக சதம் அடித்து அசத்தினார். இந்த சதத்தின் மூலம் அவர் பல்வேறு சாதனைகளை முறியடித்துள்ளார்.

Abhishek Sharma Records: ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இமாலய வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழந்து 245 ரன்கள் குவித்தது. பின்பு பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 18.3 ஓவர்களில் 2 விக்கெட் மட்டுமே இழந்து 247 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 247 ரன்கள் என்ற இலக்கை அசால்ட்டாக சேஸ் செய்துள்ளது.
Abhishek Sharma Records
தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் 37 பந்தில் 9 பவுண்டரி, சிக்சர்களுடன் 66 ரன்கள் எடுத்தார். மற்றொரு தொடக்க வீரர் அபிஷேக் சர்மா சிக்சர் மழை பொழிந்தார். பஞ்சாப் கிங்ஸ் அணியின் பவுலர்களை புரட்டியெடுத்த அவர் வெறும் 55 பந்தில் 141 ரன்கள் அடித்து அனைவரையும் மிரள வைத்தார். மொத்தம் 14 பவுண்டரிகளையும், 10 சிக்சர்களையும் அவர் நொறுக்கியுள்ளார்.
அபிஷேக் சர்மாவில் இந்த நம்பமுடியாத ஆட்டம் தொடர் தோல்வியின் பாதையில் இருந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை அசாத்திய வெற்றி பெற வைத்துள்ளது. இந்த போட்டியில் அபிஷேக் சர்மா பல்வேறு சாதனைகளை முறியடித்துள்ளார். அபிஷேக் சர்மா இந்த போட்டியில் வெறும் 40 பந்துகளில் சதம் அடித்தார், இது ஐபிஎல்லில் ஒரு இந்தியரின் மூன்றாவது வேகமான சதமாகவும், ஒட்டுமொத்தமாக ஐந்தாவது வேகமானதாகவும் இருந்தது.
IPL: நான் கேப்டனா? அவன் கேப்டனா? அம்பயரிடம் சண்டைக்கு சென்ற ஷ்ரேயாஸ்! என்ன நடந்தது?
Abhishek Sharma, IPL, SRH
அபிஷேக் சர்மா இந்த இன்னிங்ஸில் 10 சிக்ஸர்களை அடித்தார். இது ஒரு ஐபிஎல் இன்னிங்ஸில் ஒரு இந்திய வீரரின் இரண்டாவது அதிகபட்சமாகும். ஒரு இன்னிங்ஸில் ஒரு இந்திய வீரர் அடித்த அதிகபட்ச சிக்ஸர்கள் 11 ஆகும். ஐபிஎல் 2010 இல் சென்னை சூப்பர் கிங்ஸுக்காக விளையாடியபோது ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக முரளி விஜய் 127 ரன்களில் 11 சிக்ஸர்களைப் பதிவு செய்தார்.
SRH vs PBKS, IPL
மேலும் அபிஷேக் சர்மா ஐபிஎல்லில் அதிகப்பட்ச தனிநபர் ரன்களை எடுத்த 3வது வீரர் என்ற சாதனையையும் படைத்தார். மேலும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக அதிவேக சதம் அடித்தவர் என்ற சாதனையையும் பெற்றுள்ளார். அபிஷேக் சர்மா எடுத்த 141 ரன்களே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர் ஒருவர் எடுத்த அதிக ரன்களாகும். 193.84 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடிய அவர் டி20 கிரிக்கெட்டில் அதிக ஸ்டிரைக் ரேட் வைத்த வீரர் என்ற சாதனையையும் தன்வசம் சேர்த்துள்ளார்.
SRH vs PBKS: வாழ்வில் மறக்க முடியாத மோசமான சாதனை படைத்த முகமது ஷமி!