வேற லெவல் பிளேயர்ங்க அவன்; எப்பேர்ப்பட்ட பவுலருக்கும் சிம்மசொப்பனம்..! இந்திய வீரருக்கு ஜாகீர் கான் புகழாரம்
First Published Dec 7, 2020, 9:23 PM IST
இந்திய அணியின் அதிரடி ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியாவை ஜாகீர் கான் வெகுவாக புகழ்ந்து பேசியுள்ளார்.

இந்திய அணியின் ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா, அணியில் அறிமுன சிறிது காலத்திலேயே ஆல்டைம் லெஜண்ட் ஆல்ரவுண்டர்களில் ஒருவரான கபில் தேவுடன் ஒப்பிடப்பட்டார். ஆனால் பின்னர் சில சொதப்பல்களால் விமர்சனத்துக்கும் வசைக்கும் ஆளான ஹர்திக் பாண்டியா, ஐபிஎல் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிகளிலும் அபாரமாக ஆடி தனது ஃபினிஷிங் ரோலை செவ்வனே செய்துவருகிறார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் கடைசி 2 ஓவரில் இருபத்தைந்து ரன்களை அடித்து இந்திய அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார் ஹர்திக் பாண்டியா. 22 பந்தில் 42 ரன்களை விளாசி ஆட்டநாயகன் விருதையும் வென்றார். பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் ஆகிய அனைத்துவகையிலும் பங்களிப்பு செய்யக்கூடியவர் ஹர்திக் பாண்டியா.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?