ஐபிஎல் வரலாற்றில் முதல் வீரராக 200 விக்கெட்டுகள் கைப்பற்றி யுஸ்வேந்திர சஹால் சாதனை!
மும்பை இந்தியன்ஸ் வீரர் முகமது நபி விக்கெட்டை கைப்பற்றியதன் மூலமாக ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் முதல் வீரராக யுஸ்வேந்திர சஹால் தனது 200ஆவது விக்கெட்டை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.
Rajasthan Royals vs Mumbai Indians 38th IPL 2024 Match
ஜெய்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2024 தொடரின் 38ஆவது லீக் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணியின் ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷான் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
Rajasthan Royals vs Mumbai Indians 38th IPL 2024 Match
இதில், ரோகித் சர்மா 6, இஷான் கிஷான் 0 மற்றும் சூர்யகுமார் யாதவ் 10 ரன்களில் ஆட்டமிழந்தனர். இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர். மும்பை இந்தியன்ஸ் 7 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 50 ரன்கள் எடுத்திருந்தது.
Rajasthan Royals vs Mumbai Indians 38th IPL 2024 Match
இதுவரையில் 152 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய யுஸ்வேந்திர சஹால் 199 விக்கெட்டுகள் கைப்பற்றியிருந்தார். இந்த நிலையில் இன்று தனது 153ஆவது ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக களமிறங்கினார்.
Rajasthan Royals vs Mumbai Indians 38th IPL 2024 Match
போட்டியின் 8ஆவது ஓவரை யுஸ்வேந்திர சாஹல் வீசினார். இந்த ஓவரின் 3ஆவது பந்தில் முகமது நபி விக்கெட்டை எடுத்தார். இதன் மூலமாக ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் முதல் வீரராக யுஸ்வேந்திர சாஹல் 200 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.
Rajasthan Royals vs Mumbai Indians 38th IPL 2024 Match
இதற்கு முன்னதாக 1 முதல் 200 விக்கெட்டுகள் வரையில் முதல் பந்து வீச்சாளராக சாதனை படைத்தவர்கள்:
25 விக்கெட்டுகள் – ஷேன் வார்னே
50 விக்கெட்டுகள் – ஆர்பி சிங்
75 விக்கெட்டுகள் – லசித் மலிங்கா
100 விக்கெட்டுகள் - லசித் மலிங்கா
125 விக்கெட்டுகள் - லசித் மலிங்கா
150 விக்கெட்டுகள் - லசித் மலிங்கா
175 விக்கெட்டுகள் – டுவைன் பிராவோ
200 விக்கெட்டுகள் – யுஸ்வேந்திர சாஹல்*
Rajasthan Royals vs Mumbai Indians 38th IPL 2024 Match
இந்த போட்டியின் மூலமாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஹர்திக் பாண்டியா தனது 100ஆவது ஐபிஎல் போட்டியில் விளையாடுகிறார். இதுவரையில் 130 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய ஹர்திக் பாண்டியா மொத்தமாக 2450 ரன்கள் எடுத்துள்ளார். மேலும் 10 அரைசதங்களும் எடுத்துள்ளார். அதோடு, 57 விக்கெட்டுகளும் கைப்பற்றியிருக்கிறார்.
Rajasthan Royals vs Mumbai Indians 38th IPL 2024 Match
மும்பை இந்தியன்ஸ்:
இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), டிம் டேவிட், நேஹல் வதேரா, முகமது நபி, ஜெரால்டு கோட்ஸி, பியூஸ் சாவ்லா, ஜஸ்ப்ரித் பும்ரா.
ராஜஸ்தான் ராயல்ஸ்:
யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன்/விக்கெட் கீப்பர்), ரியான் பராக், துருவ் ஜூரெல், ஷிம்ரன் ஹெட்மயர், ரோவ்மன் பவல், ரவிச்சந்திரன் அஸ்வின், டிரெண்ட் போல்ட், ஆவேஷ் கான், சந்தீப் சர்மா, யுஸ்வேந்திர சஹால்.