- Home
- Sports
- Sports Cricket
- உன்னை கையில் ஏந்தி கொண்டாட, என்னை 18 ஆண்டுகள் காத்திருக்க வைத்துவிட்டாயே! கோலி உருக்கம்
உன்னை கையில் ஏந்தி கொண்டாட, என்னை 18 ஆண்டுகள் காத்திருக்க வைத்துவிட்டாயே! கோலி உருக்கம்
ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக கோப்பையை வென்ற மகிழ்ச்சியில் அந்த அணியின் மூத்த வீரர் விராட் கோலி தனது உணர்ச்சிப்பூர்வமான கருத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

Virat Kohli
கிரிக்கெட்டை மேலும் பொழுதுபோக்கானதாகவும், லாபரகமானதாகவும் மாற்றும் எண்ணத்தில் இந்தியாவில் IPL திருவிழா தொடங்கப்பட்டது. IPL தொடங்கப்பட்டதில் இருந்து ஒவ்வொரு அணியும் கோப்பைக்காக போராடி வெற்றி பெறுகின்றன. குறிப்பாக சென்னை, மும்பை அணிகள் அடுத்தடுத்து கோப்பைகளை வேட்டையாடி முன்னணியில் உள்ளனர். மேலும் அதிக ரசிகர்களைக் கொண்ட அணிகளாக சென்னை, மும்பை, பெங்களூரு அணிகள் உள்ளன.
Virat Kohli
ஆனால் ஐபிஎல் தொடங்கப்பட்டதில் இருந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Challengers Bengaluru) அணி ஒருமுறை கூட கோப்பையைக் கைப்பற்றவில்லை என்ற மோசமான சாதனைக்கு RCB முற்றுப்புள்ளி வைத்துள்ளது. பஞ்சாப் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் போராடி வெற்றி பெற்று முதல் முறையாகக் கோப்பையைக் கைப்பற்றி உள்ளது. இதனால் ஒட்டுமொத்த பெங்களூரு நகரமும் விழாக்கோலம் பூண்டுள்ளது.
Virat Kohli
இந்நிலையில் இது தொடர்பாக தனது சமூக வலைதளப்பக்கத்தில் தனது கருத்தைப் பதிவு செய்துள்ள அணியின் மூத்த வீரர் விராட் கோலி, “இந்த அணிதான் அந்தக் கனவை சாத்தியமாக்கியது, நான் ஒருபோதும் மறக்க முடியாத ஒரு சீசன். கடந்த 2.5 மாதங்களாக நாங்கள் இந்த பயணத்தை மிகவும் ரசித்தோம். மோசமான காலங்களில் ஒருபோதும் எங்களை விட்டு வெளியேறாத ஆர்சிபி ரசிகர்களுக்கானது இது.
மனவேதனைகள் மற்றும் ஏமாற்றங்களின் அனைத்து ஆண்டுகளுக்கானது இது. இந்த அணிக்காக விளையாடும் மைதானத்தில் நான் விட்டுச் சென்ற ஒவ்வொரு அங்குல முயற்சிக்கும் இது. ஐபிஎல் கோப்பையைப் பொறுத்தவரை - உங்களை உயர்த்தவும் என் நண்பரைக் கொண்டாடவும் நீங்கள் என்னை 18 ஆண்டுகள் காத்திருக்க வைத்தீர்கள், ஆனால் அது முற்றிலும் மதிப்புக்குரியது” என்று குறிப்பிட்டுள்ளார்.