18 ஆண்டுகள் கனவு நிறைவேறுமா? முதல் முறையாக டிராபியை கைப்பற்றும் அணி எது?
RCB vs PBKS IPL 2025 Final : ஐபிஎல் 18வது சீசன் இறுதிப் போட்டியில் ஆர்சிபி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் மோதுகின்றன. இரு அணிகளும் வலுவானவை என்பதால், கடுமையான போட்டி எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி - ஆர்சிபி vs பஞ்சாப்
RCB vs PBKS IPL 2025 Final : மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் 2025 தொடரின் 18வது ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு மேடை தயாராகிவிட்டது. இந்த டி20 லீக்கின் கிரீடம் யாருக்கு என்பது இன்று இரவு தெரியவரும். அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளுமே பலம் வாய்ந்த அணிகள் என்பதால் கடுமையான போட்டி எதிர்பார்க்கப்படுகிறது.
ரஜத் படிதார் தலைமையிலான ஆர்சிபி
சீரிஸ் முழுவதும் சிறப்பாக விளையாடிய ரஜத் படிதார் தலைமையிலான ஆர்சிபி, புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தைப் பிடித்தது. முதல் தகுதிச் சுற்றில் பஞ்சாப்பை வீழ்த்தி நேரடியாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்த ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப், ஆர்சிபி தோல்விக்குப் பிறகு, 2வது தகுதிச் சுற்றில் மும்பையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு வந்துள்ளது.
ஆர்சிபி, பஞ்சாப் பலம் வாய்ந்த அணிகள்
கடுமையான போட்டி: சீரிஸின் ஆட்டத்தைப் பார்க்கும்போது இரு அணிகளும் வலுவானவை. ஆனால், ஒரு சிலரை மட்டும் நம்பியிராமல், அனைவரும் சேர்ந்து விளையாடுவது ஆர்சிபியின் பலம். பஞ்சாப்பின் பலம் அதன் வலுவான பேட்டிங். எனவே, இறுதிப் போட்டியிலும் கடுமையான போட்டி எதிர்பார்க்கலாம்.
விராட் கோலி மற்றும் பில் சால்ட் காம்போ
ஆர்சிபி ஒவ்வொரு ஆண்டும் ஒரு சில வீரர்களை மட்டுமே நம்பி இருந்தது. ஆனால், இந்த ஆண்டு அனைத்து வீரர்களும் தங்கள் திறமைக்கு ஏற்ப விளையாடுகின்றனர். விராட் கோலி (614 ரன்கள்) இறுதிப் போட்டியிலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். பில் சால்ட் (387) அதிரடி ஆட்டம் அணிக்கு பலம் சேர்க்கும்.
மாயங் அகர்வால், ஜிதேஷ் சர்மா
மாயங் அகர்வால், ஜிதேஷ் சர்மா ஆகியோர் முக்கியமான தருணங்களில் அதிரடியாக விளையாடியுள்ளனர். காயமடைந்த டிம் டேவிட் இறுதிப் போட்டியில் விளையாடுவாரா என்பது தெரியவில்லை. ரொமாரியோ ஷெப்பர்ட், குர்ணல் பாண்டியா ஆகியோரின் ஆல்ரவுண்டர் ஆட்டம் அணிக்கு முக்கியம்.
பவுலிங்கில் பலம் வாய்ந்த ஆர்சிபி
பந்துவீச்சு பலம்: ஆர்சிபியின் இந்த ஆண்டு வெற்றிக்கு முக்கிய காரணம் அதன் பந்துவீச்சு பலம். ஜோஷ் ஹேசல்வுட் (21 விக்கெட்டுகள்) எதிரணியினருக்கு தலைவலியாக இருந்துள்ளார். புவனேஷ்வர் (15), குர்ணல் பாண்டியா (15), யஷ் தயாள் (12), சுயஷ் சர்மா (8) ஆகியோர் சீரான பந்துவீச்சை வெளிப்படுத்தியுள்ளனர்.
பேட்டிங்கில் பலம் வாய்ந்த பஞ்சாப் கிங்ஸ்
மறுபுறம், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் அணி தனது பேட்டிங் பலத்தை நம்பியுள்ளது. 2வது தகுதிச் சுற்றில் மும்பைக்கு எதிராக ஸ்ரேயாஸ் ஆடிய ஆட்டம், ஆர்சிபி பந்துவீச்சாளர்களுக்கு கவலை அளிக்கும். பிரப்சிம்ரன், பிரியான்ஷ் ஆர்யா, ஜோஷ் இங்கிலிஸ், நேஹல் வதேரா, மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஆகியோரும் அதிரடியாக விளையாடுகின்றனர். காயமடைந்த சாஹல் ஃபார்முக்கு திரும்ப முயற்சி செய்கிறார். அர்ஷ்தீப், கேல் ஜேமிசன், விஷாக் ஆகியோர் மீது அணி நம்பிக்கை வைத்துள்ளது.
ஆர்சிபி - பஞ்சாப் நேருக்கு நேர் மோதிய போட்டிகள்
இதுவரையில் இரு அணிகளும் 36 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், இரு அணிகளுமே தலா 18 போட்டிகளில் வெற்றியும், 18 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளன. பஞ்சாப் கிங்ஸ் அணியின் அதிகபட்ச ஸ்கோர் 232 ரன்கள் ஆகும். இதே போன்று குறைவான ஸ்கோர் 88 ரன்கள் ஆகும்.
ஆர்சியின் அதிகபட்ச ஸ்கோர் 241 ரன்கள்
ஆர்சிபியின் அதிகபட்ச ஸ்கோர் 241 ரன்கள் ஆகும். இதே போன்று குறைவான ஸ்கோர் 84 ரன்கள் ஆகும். நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் 2025 தொடரில் இரு அணிகளும் தலா 3 முறை மோதியுள்ளன. இதில் 2 முறை ஆர்சிபி தான் வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால், 2ஆவது தகுதிச் சுற்று போட்டியில் வெற்றி பெறும் அணியே ஐபிஎல் இறுதிப் போட்டிகளில் அதிக முறை வெற்றி கண்டுள்ளது.
பஞ்சாப் கிங்ஸ் டிராபியை கைப்பற்றுமா?
அதன்படி பார்க்கையில் இந்த முறை பஞ்சாப் கிங்ஸ் தான் டிராபியை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி பஞ்சாப் கிங்ஸ் டிராபியை கைப்பற்றினால், அடுத்தடுத்த சீசன்களில் 2 வெவ்வேறு அணிகளுக்கு டிராபி வென்று கொடுத்த கேப்டன் என்ற சாதனையை ஷ்ரேயாஸ் ஐயர் படைப்பார். அதுமட்டுமின்றி முதல் முறையாக பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு டிராபியையும் சொந்தமாக்கி கொடுப்பார்.