Brand Value: சச்சின், தோனியை விட ரூ.1200 கோடி அதிகம்; விராட் கோலியின் பிராண்ட் மதிப்பு அதிகரிக்க என்ன காரணம்?
இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் பிராண்ட் மதிப்பு ரூ.1912 கோடியாக உயர்ந்துள்ளது. ஒப்பந்தங்கள், புகழ், சமூக ஊடக தாக்கம், நீண்ட நாள் விளையாட்டு என பல காரணங்கள் இதற்கு உள்ளன. சச்சின், தோனி போன்ற வீரர்களின் பிராண்ட் மதிப்பை விட இது அதிகம்.
Virat Kohli
இந்திய அணியில் அசைக்க முடியாத இடத்தில் இருப்பவர் விராட் கோலி. மைதானத்தில் தனது ஆக்ரோஷமான வெளிப்பாடு, கிரிக்கெட் மீதான காதல், வேகம், எப்போதும் ஜாலி மோடில் இருக்கும் விராட் கோலியின் பிராண்ட் மதிப்பு ரூ.1912 கோடியாக உயர்ந்துள்ளது. இது கூல் கேப்டன் என்று அழைக்கப்படும் தோனி, மாஸ்டர் பிளாஸ்டரான சச்சின் டெண்டுல்கரின் பிராண்ட் மதிப்புகளை விட அதிகம்.
Virat Kohli and Sachin Tendulkar Brand Value
விராட் கோலிக்கு முன்னரே கிரிக்கெட் விளையாடும் சச்சினின் பிராண்ட் மதிப்பு ரூ.766 கோடி தான். இது கோலியிம் பிராண்ட் மதிப்பை விட பல கோடி குறைவு தான். இதே போன்று தான் ரூ.1040 கோடி சொத்து வைத்திருக்கும் தோனியின் பிராண்ட் மதிப்பு ரூ.766 கோடி தான். இதுவும் கோலியின் மதிப்பை விட பல கோடி குறைவு தான்.
Virat Kohli
இதற்கு என்ன காரணம் என்று பார்த்தால், ஒப்பந்தம் மற்றும் ஸ்பான்சர்ஷிப்ஸ், புகழ் மற்றும் பப்ளிக் இமேஜ், சமூக வலைதளம், மார்க்கெட், பைனான்ஸ், நற்பெயர், நீண்ட நாள் இடம் பெற்று விளையாடுதல், தொழில் ஒப்பீடு ஆகியவற்றின் காரணமாக விராட் கோலியின் பிராண்ட் மதிப்பு அதிகரித்துள்ளது.
Virat Kohli, Rohit Sharma
ஒப்பந்தம் மற்றும் ஸ்பான்சர்ஷிப்
ஒப்பந்தங்களின் எண்ணிக்கை – பிரபங்களின் பிராண்ட் ஒப்பந்தங்களின் எண்ணிக்கை
ஒப்பந்த தரம் – பிராண்டுகள் எவ்வளவு நன்கு அறியப்பட்டவை மற்றும் மதிக்கப்படுகின்றன.
Virat Kohli
பாப்புலாரிட்டி மற்றும் பப்ளிக் இமேஜ்
மீடியா இருப்பு: பிரபலங்கள் மீடியாவில் அடிக்கடி தோன்றுவார்கள்
பப்ளிக் கருத்து – மக்கள் எவ்வளவு பிரபலங்களை விரும்புகிறார்கள். அவருடன் தொடர்பு கொள்கிறார்கள் என்பதை பொறுத்தது.
Virat Kohli Brand Value
சமூக ஊடக தாக்கம்
பின்தொடர்பவர்கள் மற்றும் ஈடுபாடு: பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை மற்றும் சமூக ஊடகங்களில் அவர்களது தாக்கம்
கண்டெண்ட் ரீச் - பிரபலங்களின் போஸ்ட் எவ்வளவு பரவலாகப் பார்க்கப்படுகின்றன மற்றும் பகிரப்படுகின்றன என்பதைப் பொறுத்தது.
Virat Kohli Brand Value
மார்க்கெட்
டார்க்கெட் – பிரபலங்கள் மற்றும் அவர்களது ஒப்புதல்
வெர்சாடிலிட்டி – பல்வேறு வகையான தயாரிப்புகளை பிரபலங்கள் எவ்வாறு விளம்பரப்படுத்துகிறார்கள்
நிதி நடவடிக்கைகள்
பிரபலங்கள் ஒப்புதல் மூலமாக எவ்வளவு வருமானம் ஈட்டுகிறார்கள்
ஒப்பந்த மதிப்பு – ஒவ்வொரு ஒப்புதல் ஒப்பந்தத்தின் மதிப்பு ஆகியவற்றின் மூலமாக அதிக வருமானம் ஈட்டுகிறார்கள்.
Virat Kohli Brand Value
நீண்ட நாள் விளையாட்டு
எத்தனை ஆண்டுகாலமாக புகழ்பெற்ற வீரராக திகழ்கிறார் என்பதை பொறுத்தது.
நிலைத்தன்மை – காலப்போக்கில் அவர்களது புகழ் எவ்வளவு நிலையானது
இது போன்ற பல காரணங்களால் விராட் கோலியின் பிராண்ட் மதிப்பு ரூ.1912 கோடியாக அதிகரித்துள்ளது.