எம்.எஸ்.தோனி மற்றும் சிஎஸ்கேயின் எதிர்காலம் என்ன? ஐபிஎல் 2025ல் சிஎஸ்கே தக்க வைக்கும் வீரர்கள் யார் யார்?
2025 ஐபிஎல் மெகா ஏலத்திற்கான தயாரிப்புகள் தீவிரமடையும் வேளையில், சிஎஸ்கே தங்கள் அணியை மறுகட்டமைக்கத் தயாராகி வருகிறது. தோனியின் எதிர்காலம் தொடர்பான அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகிறது.
CSK Retention
2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்திற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதற்கு முன்னதாக ஒவ்வொரு அணியும் தங்களது அணியில் உள்ள வீரர்களை யாரெல்லாம் தக்க வைக்கப்படுவார்கள், யாரெல்லாம் விடுவிக்கப்படுவார்கள் என்பதை இறுதி செய்யும் போட்டியில் இறங்கியிருக்கிறது. அதற்கான கவுண்டனும் தொடங்கியுள்ளது.
CSK Retained and Released Players
எனினும் பிசிசிஐ ஒவ்வொரு அணியும் தக்க வைத்துக் கொள்ளக் கூடிய வீரர்களின் எண்ணிக்கையை இன்னும் உறுதி செய்யவில்லை. குறைந்தது 4 முதல் 6 வீரர்களை தக்க வைத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 5 முறை டிராபி வென்று கொடுத்த எம்.எஸ்.தோனி வரும் 2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனில் விளையாடுவாரா என்பதை அவர் தக்க வைத்துக் கொள்வதை பொறுத்து தீர்மானிக்கப்படும்.
MS Dhoni, Ravindra Jadeja, CSK
சிஎஸ்கே அணியில் தோனி இருக்காரா? இல்லையா என்பது தான் சென்னை ரசிகர்களின் கேள்வி. சிஎஸ்கே அணிக்காக ஒவ்வொரு முறையும் தோனி விளையாட வேண்டும் என்பது ரசிகர்களின் ஆசை. தோனி களத்திற்கு வந்துவிட்டாலே எங்களுக்கு போதும் என்று சொல்லிக் கொள்ளும் அளவிற்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். தோனிக்காக, வெளியூர், வெளிநாடுகளிலிருந்து வந்து ஐபிஎல் போட்டியை பார்க்க கூடிய ரசிகர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
IPL 2025 Mega Auctions
ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்னதாக சிஎஸ்கே தக்க வைத்துக் கொள்ளும் வீரர்களின் பட்டியலில் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்று பார்க்கலாம் வாங்க. ரெவ்ஸ்போர்ட்ஸின் கூற்றுப்படி, சிஎஸ்கே 5 வீரர்களை தக்க வைத்துக் கொள்ள விரும்புவதாக கூறப்படுகிறது. ரைட்-டு-மேட்ச்சின் படி (ஆர்டிஎம்) 6 வீரர்களைத் தக்கவைத்துக் கொள்ள BCCI அனுமதிக்கலாம் என்று கூறப்படுகிறது.
சிஎஸ்கே அணியில் தக்க வைக்கப்படும் வீரர்கள்:
ருதுராஜ் கெய்க்வாட்
ஷிவம் துபே
ரவீந்திர ஜடேஜா
மதீஷா பதிரனா
எம்.எஸ்.தோனி
IPL 2025
சிஎஸ்கே அணியிலிருந்து விடுவிக்கப்படும் வீரர்கள்:
தீபக் சாஹர்
டெவோன் கான்வே
டேரில் மிட்செல்
மகீஷ் தீக்ஷனா
தோனியின் எதிர்காலம்:
2025 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு பிறகு தோனி விளையாடுவாரா? மாட்டாரா என்ற கேள்வி இருக்கும் நிலையில் ஐபிஎல் மெகா ஏலத்தில் சிஎஸ்கே எடுக்கும் ஒவ்வொரு முடிவும் முக்கியமானது. ஓய்வு பெற்ற வீரர்களை கேப்டு பிரிவில் தக்க வைத்துக் கொள்ள அனுமதிக்கும் விதியை நடைமுறைப்படுத்துமாறு பிசிசிஐயும் கோரிக்கை வைத்திருந்தது.
CSK, MS Dhoni
இந்த விதி கடந்த 2008 முதல் 2021 ஆம் ஆண்டு வரையில் நடைமுறையில் இருந்தது. இந்த விதி 2019 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற தோனிக்கு சாதகமாக அவரை குறைவான சம்பளத்தில் ஏலத்தில் எடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2025 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரை இலக்காக கொண்ட சிஎஸ்கே அணியானது, 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து வெளியேறினாலும் டிராபியை வெல்ல நம்பிக்கையுடன் காத்துக் கொண்டிருக்கிறது.