#AUSvsIND தரமான சம்பவம் வாஷி.. கோலியை ஏமாற்றாத பவுலர் நீதான்ப்பா..!
First Published Dec 8, 2020, 2:17 PM IST
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் தனது முதல் ஓவரிலேயே அந்த அணி கேப்டன் ஃபின்ச்சை டக் அவுட்டாக்கி அனுப்பினார் வாஷிங்டன் சுந்தர்.

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான கடைசி டி20 போட்டி சிட்னியில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ஃபின்ச்சும் மேத்யூ வேடும் இறங்கினர். தீபக் சாஹர் வீசிய முதல் ஓவரில் மேத்யூ வேட் 9 ரன்கள் அடித்தார். 2வது ஓவரை தனது ஆஸ்தான மற்றும் நம்பிக்கைக்குரிய வீரர்களில் ஒருவரான வாஷிங்டன் சுந்தரிடம் கொடுத்தார் கேப்டன் கோலி. கோலியின் நம்பிக்கையை வீணடிக்காமல் தனது முதல் ஓவரின் 4வது பந்திலேயே ஃபின்ச்சை வீழ்த்தினார் வாஷிங்டன் சுந்தர்.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?