#AUSvsIND 2வது ஒருநாள் போட்டி: புதிய மைல்கல்லை எட்டிய கோலி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் ஆடுவதன் மூலம் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார் விராட் கோலி.
இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடி 374 ரன்களை குவித்த ஆஸ்திரேலிய அணி, இந்திய அணியை 308 ரன்களுக்கு சுருட்டி 66 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இன்று 2வது ஒருநாள் போட்டி சிட்னியில் நடக்கிறது. இந்த போட்டி விராட் கோலியின் 250வது ஒருநாள் போட்டி. 250 சர்வதேச ஒருநாள் போட்டிகள் என்ற மைல்கல்லை எட்டிய 9வது வீரர் கோலி.
சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரரான விராட் கோலி, ஒருநாள் கிரிக்கெட்டில் 43 சதங்கள், 58 அரைசதங்களுடன் 11888 ரன்களை குவித்துள்ள கோலி, இன்றைய போட்டியில் 12,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டுவாரா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
விராட் கோலிக்கு முன், சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட், அசாருதீன், அனில் கும்ப்ளே, சேவாக், யுவராஜ் சிங், தோனி ஆகிய 8 வீரர்களுக்கு அடுத்து 250 ஒருநாள் போட்டிகள் என்ற மைல்கல்லை எட்டிய 9வது வீரர் விராட் கோலி.