IPL 2023: ஐபிஎல்லில் 50 அரைசதங்கள்.. விராட் கோலி புதிய சாதனை..! 2ம் இடத்தில் கோலி. முதலிடத்தில் யார் தெரியுமா?
டெல்லி கேபிடள்ஸுக்கு எதிராக இன்று அடித்த அரைசதத்தின் மூலம், ஐபிஎல்லில் 50 அரைசதங்கள் அடித்த 2வது வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.
சமகாலத்தின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவருகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் 75 சதங்களை விளாசியுள்ள விராட் கோலி, சச்சின் டெண்டுல்கரின் 100 சத சாதனையை விரட்டிவருகிறார்.
சர்வதேச கிரிக்கெட்டில் மட்டுமல்லாது ஐபிஎல்லிலும் பேட்டிங்கில் சாதனைகளை குவித்துவருகிறார். ஐபிஎல்லில் அவர் ஆடும் ஆர்சிபி அணிக்கு ஒரு கோப்பையை கூட வென்று கொடுக்கவில்லை என்றாலும், அந்த அணிக்கு ஐபிஎல் தொடங்கியதிலிருந்து 16 ஆண்டுகளாக மிகச்சிறந்த பங்களிப்புகளை செய்துவருகிறார்.
IPL 2023: 13 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை மண்ணில் மும்பை அணியை வீழ்த்தி சிஎஸ்கே அபார வெற்றி
இன்று டெல்லியில் நடந்துவரும் ஆர்சிபி - டெல்லி கேபிடள்ஸ் இடையேயான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிவரும் ஆர்சிபி அணியின் தொடக்க வீரர்கள் விராட் கோலி - ஃபாஃப் டுப்ளெசிஸ் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 82 ரன்களை குவித்தனர். டுப்ளெசிஸ் 45 ரன்களுக்கு ஆட்டமிழக்க, பொறுப்புடன் ஆடிய விராட் கோலி அரைசதம் அடித்தார். ஆனால் 55 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் கோலி. அரைசதத்திற்கு பின்னர் பெரிய இன்னிங்ஸ் ஆட தவறிவிட்டார்.