MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • சச்சினின் சாதனையை முறியடித்து வரலாற்று சாதனை படைத்த கிங் கோலி!

சச்சினின் சாதனையை முறியடித்து வரலாற்று சாதனை படைத்த கிங் கோலி!

சர்வதேச கிரிக்கெட்டில் 25000 ரன்களை கடந்த சச்சினின் சாதனையை விராட் கோலி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியின் மூலமாக முறியடித்துள்ளார்.  

2 Min read
Author : Rsiva kumar
Published : Feb 20 2023, 01:34 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
விராட் கோலி 25000 ரன்கள்

விராட் கோலி 25000 ரன்கள்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி கடந்த 17 ஆம் தேதி டெல்லியில் தொடங்கியது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் ஆடி 263 ரன்கள் குவித்தது. இதில் ஜடேஜா 3 விக்கெட்டுகளும், அஸ்வின் 3 விக்கெட்டுகளும், ஷமி 4 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். இதை தொடர்ந்து இந்திய அணி பேட்டிங் செய்தது.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28
விராட் கோலி 25000 ரன்கள்

விராட் கோலி 25000 ரன்கள்

இந்திய அணியில் ரோகித் சர்மா 32, விராட் கோலி 44, அக்‌ஷர் படேல் 74 ரன்கள் சேர்க்க இந்தியா 262 ரன்கள் எடுத்தது. ஒரு கட்டத்தில் 139 ரன்களுக்கு 7 விக்கெட் இழந்த இந்திய அணியில் 8ஆவது விக்கெட்டிற்கு ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஜோடி 114 ரன்கள் வரையில் எடுத்தது. அஸ்வின் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
 

38
விராட் கோலி 25000 ரன்கள்

விராட் கோலி 25000 ரன்கள்

இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா தனது 2ஆவது இன்னிங்ஸை ஆடியது. இதில், டிரேவிஸ் ஹெட் மற்றும் லபுஷேன் ஆகியோர் நிலைத்து நின்று ஆடி ரன்கள் சேர்த்தனர். எனினும், டிரேவிஸ் ஹெட் 43 ரன்னிலும், லபுஷேன் 35 ரன்களும் எடுத்து ஆடடமிழந்தனர்.
 

48
விராட் கோலி 25000 ரன்கள்

விராட் கோலி 25000 ரன்கள்

மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க ஆஸ்திரேலியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில் ரவீந்திர ஜடேஜா 12.1 ஓவர்கள் வரை வீசி ஒரேயொரு மெய்டன் மட்டுமே போட்டு 7 விக்கெட்டுகள் கைப்பற்றி ஆஸ்திரேலியாவை சரித்துள்ளார். அஸ்வின் 3 விக்கெட்டுகள் கைப்பற்ற ஆஸ்திரேலியா 113 ரன்களுக்கு எல்லா விக்கெட்டுகளையும் இழந்தது.
 

58
விராட் கோலி சர்வதேச கிரிக்கெட் 25000 ரன்கள்

விராட் கோலி சர்வதேச கிரிக்கெட் 25000 ரன்கள்

எளிய இலக்கை நோக்கிய விளையாடிய இந்திய அணிக்கு தொடர்ந்து சொதப்பி வரும் கேஎல் ராகுல் இந்த முறையும் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். ரோகித் சர்மாவும் 31 ரன்கள் சேர்த்து ரன் அவுட்டில் வெளியேறினார். இவருக்கு அடுத்தபடியாக விராட் கோலி 20 ரன்கள் சேர்த்த நிலையில், விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரியால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார். இதன் மூலமாக வரலாற்றில் இடம் பெற்றார்.
 

68
விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்

விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் விராட் கோலி ஸ்டெம்பிங் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும். இதே போன்று ரோகித் சர்மாவும் வரலாற்றில் இடம் பிடித்தார். அவர் 31 ரன்கள் எடுத்திருந்த போது ரன் அவுட் செய்யப்பட்டார். அதுமட்டுமின்றி இந்த டெஸ்டில் 52 ரன்கள் எடுத்தால் சர்வதேச கிரிக்கெட்டில் 25000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைப்பார் என்று சொல்லப்பட்டது.

78
விராட் கோலி

விராட் கோலி

தற்போது முதல் இன்னிங்ஸில் 44 ரன்களும், 2ஆவது இன்னிங்ஸில் 20 ரன்களும் எடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 25000 ஆயிரம் எடுத்து சச்சின் சாதனையை முறியடித்துள்ளார்.

விராட் கோலி 549 இன்னிங்ஸ் - 492 போட்டிகள் 25003 ரன்கள்
சச்சின் டெண்டுல்கர் 577 இன்னிங்ஸ் - 664 போட்டிகள் 34357 ரன்கள்
ரிக்கி பாண்டிங் - 588 இன்னிங்ஸ் - 560 போட்டிகள் 27483 ரன்கள்
ஜாக் காலிஸ் - 594 இன்னிங்ஸ் - 519 போட்டிகள் 25534 ரன்கள்
குமார் சங்கக்கரா - 608 இன்னிங்ஸ் - 594 போட்டிகள் 28016 ரன்கள்
மஹேலா ஜெயவர்தனே - 701 இன்னிங்ஸ் - 652 போட்டிகள் 25957 ரன்கள்
 

88
விராட் கோலி சாதனை

விராட் கோலி சாதனை

டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோகித் சர்மா ரன் அவுட் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும். இந்தப் போட்டியில் இந்தியா 4 விக்கெட் இழந்து 118 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி. இதில், விக்கெட் கீப்பர் ஸ்ரீகர் பரத் 23 ரன்னுடனும், சட்டீஸ்வர் புஜாரா 31 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த வெற்றியின் மூலமாக 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
ரோகித் சர்மா
விராட் கோலி
 
1st ODI • NZ vs IND 2026
Rain Delay
NZNZ
185
INDIND
(12.0 ov)64/1
IND need 103 runs in 168 balls
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Glenn Maxwell: கிரிக்கெட்டுக்கு 'குட்பை' சொன்ன தமிழ்நாட்டு மருமகன்! 'பிக் ஷோ' கிளென் மேக்ஸ்வெல் திடீர் ஒய்வு!
Recommended image2
IPL 2027 Auction: ரூ.14 கோடி பிளேயரை கழட்டிவிடும் சிஎஸ்கே.. தோனியின் மாஸ்டர் பிளான்!
Recommended image3
Vaibhav Suryavanshi: "சுடு தண்ணி மட்டும் குடிப்பா.." வைபவ் சூர்யவன்ஷிக்கு ரசிகை அட்வைஸ்.. பாலகன் ரியாக்ஷன் வீடியோ பாருங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved